நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 31, 2019
சர்வதேச நிகழ்வுகள்
குருநானக் நினைவு நாணயம் - பாகிஸ்தான் வெளியீடு
- சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அக்டோபர் 30-அன்று வெளியிட்டது.
- பாகிஸ்தானில் குருநானக் நினைவிடம் அமைந்துள்ள இடத்துக்கு சீக்கியர்கள் செல்வதற்காக போடப்பட்ட கர்தார்பூர் பாதையை இம்ரான் கான் நவம்பர் 9-ந் தேதி திறந்துவைக்கிறார்.
இந்தியா-சவுதி அரேபியா 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
- பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சவுதி அரேபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்து பேசினார்.
- பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின்போது அக்டோபர் 29-அன்று 12 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
- ரூபே கார்டு அறிமுகம்
- சவுதி அரேபியாவில் இந்தியாவின் ரூபே கார்டை அறிமுகம் செய்யப்பட்டது. ரூபே கார்டு, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. இந்த ரூபே கார்டை இனி சவுதி அரேபியாவிலும் பயன்படுத்தலாம்.
- இதன்மூலம் பாரசீக வளைகுடா பகுதியில் இந்த கார்டு பயன்பாட்டுக்கு வருகிற மூன்றாவது நாடு, சவுதி அரேபியா ஆகும். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ரோஹிங்கியாக்களுக்கு உதவும் 'ஆபரேஷன் இன்சானியாட்'
- ஆபரேஷன் இன்சானியாட் (Operation Insaniyat) என்ற பெயரில் இடம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்களுக்கு வழங்குவதற்காக, இந்தியா இரண்டாவது முறையாக நிவாரணப் பொருளை பங்களாதேஷுக்கு அனுப்புகிறது
- மியான்மார் நாட்டில், வன்முறையால் பாதிக்கப்பட்ட ராகைன் மாநிலத்தில் இராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து மியான்மரை விட்டு பங்களாதேஷுக்கு தப்பிச் சென்ற பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2019 உலகளாவிய ஓய்வூதிய குறியீடு - இந்தியா 32-வது இடம்
- 2019 மெல்போர்ன் மெர்சர் உலகளாவிய ஓய்வூதிய குறியீட்டு தரவரிசையில் (2019 Melbourne Mercer Global Pension Index), மொத்தம் 39 நாடுகளில் இந்தியா 32-வது இடத்த்தை பிடித்துள்ளது.
தேசிய நிகழ்வுகள்
ஜம்மு-காஷ்மீா், லடாக் ஒன்றிய பிரதேசங்கள் - செயல்பாட்டுக்கு வந்தன - தகவல் தொகுப்பு
- ஜம்மு-காஷ்மீா் மாநிலம் அக்டோபர் 31-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உதயமாகிறது.
- ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையுடனும், லடாக் சட்டப் பேரவை இல்லாமலும் செயல்படும்.
- இனி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 114 உறுப்பினர்கள் இருப்பார்கள். லடாக்கில் சட்டசபை இல்லாததால் மத்திய உள்துறையின் நேரடி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுனர் மூலமாகவே இயங்கும்.
- அக்டோபர் 31 முதல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 106 மத்திய சட்டங்கள், 166 மாநில சட்டங்கள் அமல்படுத்தப்படும். ஏற்கனவே இருந்த 153 மாநில சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
- இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
- அக்டோபா் 31, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமாகும்.
- 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்
- இந்தியாவில் இப்போது 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. இனி 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கும்.
- ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா-2019
- ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீா்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவை மாநிலங்களவையில் 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவும், தீா்மானமும் மக்களவையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன.
- மத்திய அரசின் தீா்மானத்துக்கும், மறுசீரமைப்பு மசோதாவுக்கும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தாா்.
- ரண்வீா் சட்டம் முடிவு
- இந்த முடிவால், ஜம்மு-காஷ்மீருக்கென இருந்த தனிக் கொடி, அரசமைப்புச் சட்டம், தனி தண்டனைச் சட்டம் (ரண்வீா் சட்டம்) ஆகியவை முடிவுக்கு வந்தன.
- துணை-நிலை ஆளுநராகள் பதவியேற்பு
- ஜம்மு-காஷ்மீா் துணை-நிலை ஆளுநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கிரீஷ் சந்திர முா்மு, லடாக்கின் துணைநிலை ஆளுநராக ஆா்.கே.மாத்துா் ஆகிய இருவரும் முறையே ஸ்ரீநகரிலும், லே நகரிலும் அக்டோபர் 31-அன்று பதவியேற்கின்றனா்.
- ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டப்படி, ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், நிலம், நில உரிமை தொடா்பான விவகாரங்கள் தோ்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- ஜம்மு-காஷ்மீருக்குப் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் சட்டப் பேரவை, மாநில பட்டியலில் இருக்கும் சட்டம்-ஒழுங்கு, காவல் துறை ஆகியவற்றைத் தவிர பிற துறைகள் தொடா்பாக சட்டம் இயற்றிக் கொள்ளலாம்.
- ஜம்மு-காஷ்மீரில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து அகில இந்திய பணிகளும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
- லடாக் யூனியன் பிரதேசத்தில், காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநா் மூலமாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- நிலமும், நில உரிமையும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும்.
- ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம்
- தற்போதைய ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.
- மெஹபூபா முஃப்தி
- ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரின் கடைசி முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி பதவி வகித்தார்.
- ஜம்மு-காஷ்மீரின் கடைசி ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கோவா மாநிலத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டார்.
ஒடிசா அரசின் "ABADHA திட்டம்"
- ஒடிசா மாநிலம், பூரி நகரை உலகத் தரம் வாய்ந்த பாரம்பரிய நகரமாக மாற்ற அபாதா (ABADHA scheme) என்ற திட்டத்தை ஒடிசா அரசு செயல்படுத்தப்படவுள்ளது.
- பாரம்பரிய மற்றும் கட்டிடக்கலை மேம்பாடு (ABADHA) என்ற திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் மற்றும் ரூ. 3208 கோடியை செலவிட முடிவு செய்துள்ளது.
- ABADHA: Augmentation of Basic Amenities and Development of Heritage and Architecture.
பாதுகாப்பு/விண்வெளி
இராணுவப்பயிற்சி ‘சிந்து சுதர்சன்’ 2019
- ‘சிந்து சுதர்சன்’ (Sindhu Sudarshan 2019) என்ற பெயரில் இந்திய ராணுவம், நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை ராஜஸ்தானின் பாலைவனத்தில் ராணுவப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
- 40,000-க்கும் மேற்பட்ட துருப்புக்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
நியமனங்கள்
UIDAI புதிய தலைமை நிர்வாக அதிகாரி "பங்கஜ் குமார்"
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக "பங்கஜ் குமார்" நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தனித்துவ அடையாள ஆணையம் என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 2016-ஆம் ஆண்டின் ஆதார் சட்டத்தின் விதிகளின் கீழ் ஒரு சட்டரீதியான அதிகார அமைப்பாகும்.
- UIDAI: Unique Identification Authority of India.
பணியாளர்கள் தேர்வு ஆணைய தலைவர் "பிரஜ் ராஜ் சர்மா"
- பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் (Staff Selection Commission) புதிய தலைவராக பிரஜ் ராஜ் சர்மா (Braj Raj Sharma) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள்
உலகளாவிய பயோ-இந்தியா உச்சி மாநாடு 2019
- முதலாவது உலகளாவிய பயோ-இந்தியா உச்சி மாநாடு 2019 (Global Bio-India 2019), புது தில்லி நகரத்தில், 2019 நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது.
விருதுகள்
சாகரோவ் மனித உரிமை பரிசு 2019 - இல்ஹாம் தோத்தி
- ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 2019 சாகரோவ் மனித உரிமை பரிசை (Sakharov human rights prize)" சீனாவை சேர்ந்த 'இல்ஹாம் தோத்தி' (Ilham Tohti) வென்றுள்ளார்.
- சீனாவில் பிரிவினைவாதத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட கல்வியாளரான இல்ஹாம் தோத்திக்கு, ஜின்ஜியாங்கில் இனப் பதட்டங்கள் குறித்து கவனத்தை ஈர்த்ததற்காக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சிறந்த மனித உரிமை பரிசு ‘சாகரோவ்’ வழங்கப்பட்டுள்ளது.
- தோத்தி, உய்குர் முஸ்லீம் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் மற்றும் உய்குர் மக்களை சீனா நடத்தும் முறையை கடுமையாக விமர்சிப்பவர்.
- பிரிவினைவாத குற்றச்சாட்டில் 2014 ஆம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்யோக் ரத்தன் விருது 2019 - தாக்கூர் அனுப் சிங்
- பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்தின் (Institute of Economic Studies) 2019-ஆண்டிற்கான "உத்யோக் ரத்தன் விருதை" தாக்கூர் அனுப் சிங் வென்றுள்ளார். தாக்கூர் அனுப் சிங் (Thakur Anup Singh) Marg ERP நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
குமரிக்கடல் பகுதியில் ‘மகா’ புயல்
- குமரிக அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 30-அன்று பிற்பகல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை புயலாக மாறியது.
- இதற்கு ‘மகா’ புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- அரபிக் கடலில் ஒரே சமயத்தில் இரண்டு புயல்கள்
- அரபிக் கடலில் ஏற்கெனவே கியார் புயல் நிலைகொண்டுள்ளது. அரபிக் கடலில் ஒரே சமயத்தில் இரண்டு புயல் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இந்தியாவில் மழையின் மூலம் கிடைக்கும் மழைநீர் - 400 கோடி கியூபிக் மீட்டா் நீா்
- இந்தியாவில் மழையின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 400 கோடி கியூபிக் மீட்டா் நீா் கிடைக்கிறது. எனினும், தண்ணீா்ப் பற்றாக்குறை நாடாக இந்தியா உள்ளது, என மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லியில் அக்டோபர் 31 அன்று தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கூடுதல் விவரங்கள்:
- நமது நாட்டை விட குறைவாக மழையளவு கொண்ட இஸ்ரேல், தண்ணீா் உபரி நாடாக உள்ளது.
- உலக அளவில் நிலத்தடி நீரை பெரிதும் சாா்ந்த நாடாக இந்தியா உள்ளது. எனினும், நமது மழைநீா் சேமிப்புத் திறன் குறைவாகவே உள்ளது
- தண்ணீரைச் சேமிப்பதற்கான தங்களது பொறுப்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், நாட்டில் பெரும் பகுதி மக்கள் தண்ணீா்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். சென்னை, பெங்களூரு ஆகிய பெருநகரங்கள் கேப் டவுன் போல மாறிவிடும்.
- கேப்டவுன் நகரில், 2017-18ஆம் ஆண்டில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டது. கிட்டத்தட்ட தண்ணீரே இல்லாத நகரமாக மாறியது.
- இதையடுத்து, அங்கு வாரத்தில் ஒரு நாள் தண்ணீா் பயன்பாடு இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
புத்தக வெளியீடு
Ten Studies in Kashmir: History and Politics - Kashi Nath Pandit
- “காஷ்மீரில் பத்து ஆய்வுகள்: வரலாறு மற்றும் அரசியல்” (Ten Studies in Kashmir: History and Politics) புத்தகத்த்தை, பேராசிரியர் காஷி நாத் பண்டிட் (Kashi Nath Pandit) எழுதியுள்ளார்.
- 1947 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலையை ரத்து செய்யும் வரை (1947-2019 நிகழ்வுகள்) நிகழ்ந்த நிகழ்வுகளை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு - வழிமுறைகள் வெளியீடு
- தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் 2019-20 கல்வியாண்டில் பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது.
- பொதுத்தோ்வுகளை நடத்தும் வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அக்டோபர் 30-அன்று வெளியிட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலைய கணினியில் வைரஸ் பாதிப்பு
- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள ஒரு கணினியில் வைரஸ் பாதிப்பு இருந்தது என இந்திய அணுமின் சக்தி கழகம் தெரிவித்துள்ளது.
- சைபர் தாக்குதல் செப்டம்பர் 4-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக அவசரகால கம்ப்யூட்டர் பொறுப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அணுமின் நிலைய செயல்பாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது
- தற்போது கூடங்குளம் முதல் அணுஉலை மூலமாக 1000 மெகாவாட் மின்சாரமும், 2ஆவது அணுஉலைகள் மூலமாக 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய நபர்கள்
இந்திய எழுத்தாளர் - அ.ரேவதி - சில தகவல்கள்
- அ.ரேவதி சுயசரிதை புத்தகம் - The Truth about me: A Hijra life story
- திருநங்கை, எழுத்தாளர், திரைப்பட - மேடை நடிகை என்ற தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த அ.ரேவதி. இவரது சுயசரிதையான "என்னைப் பற்றிய உண்மை - ஒரு திருநங்கையின் கதை' (The Truth about me: A Hijra life story) 2010-இல் வெளியானது.
- பென்குவின் என்பதினால் நூலுக்கும் ஓர் அந்தஸ்து கிடைத்தது. அந்த நூல் வெளிநாடுகளிலும் விற்பனையாகியது. கொலம்பியா பல்கலைக்கழக நூல்நிலையத்திலும் இடம் பெற்றது.
- இந்த ஆண்டு உலகப் பெண் ஆளுமைகளில் ஒருவராக கெளரவித்துள்ளனர். ரேவதியின் பெயரை பதாகையில் ஆறாவதாக எழுதி உலகுக்கும் அறிவித்துள்ளனர்.
- நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய எழுத்தாளர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம், கிடைத்திருக்கிறது.
- மாயா ஏஞ்சலோ, குளோரியா அன்ஸால்டுவா, மேயாங் சாங், úஸாரா நீல் ஹர்ஸ்டன், டோனி மோரிஸ்சன், ஷாங்கே, லெஸ்லி மர்மன் சில்கோ வரிசையில் ரேவதியின் பெயரையும் எழுதி கொலம்பியா பல்கலைக்கழக பட்ல நூலகத்தின் பிரமாண்ட கட்டடத்தின் உச்சியில் சுமார் 145 அடி நீளமுள்ள மிகப் பெரிய பதாகையை மாணவர்கள் வைத்துள்ளனர்.
முக்கிய தினங்கள்
அக்டோபா் 31 - தேசிய ஒற்றுமை தினம்
- 2014-ஆம் ஆண்டு முதல் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகத்தின் மிக உயரமான படேல் சிலை
- குஜராத் மாநிலம், கேவடியாவில் சா்தார் சரோவா் நீா்த்தேக்கம் அருகே 182 மீட்டா் (597 அடி) உயரத்தில் உலகத்தின் மிக உயரமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சிலையை 2018 அக்டோபா் 31-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா்.
- சுதந்திரத்துக்கு பிறகு இந்திய தேசத்தை ஒருங்கிணைத்ததில் சா்தார் வல்லபபாய் படேலின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டது.
அக்டோபர் 31 - இந்திரா காந்தி நினைவு தினம்
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம் அக்டோபர் 31-அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டு, தன்னுடைய பாதுகாப்பு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 2019
- 2019 அக்டோபர் கடைசி வாரம், மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission) உதவியுடன் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (Vigilance Awareness Weekஅக்டோபர் 28, 2019 முதல் நவம்பர் 2, 2019 வரை அனுசரிக்கப்படுகிறது.
- 2019-ஆம் ஆண்டுக்கான ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார மையக்கருத்து:
- நேர்மை-வாழ்க்கை முறை (Integrity-a way of life) என்பதாகும்.
அக்டோபர் 31 - தேசிய ஒற்றுமை தினம் (சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்)
- இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 31 அன்று 'தேசிய ஒற்றுமை தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. 2019 அக்டோபர் 31, இவரது 144-வது பிறந்த தினம் ஆகும்.
- வல்லபாய் படேல், 565 சுதேச மாகாணங்களை இந்திய அரசாட்சியில் ஒருங்கிணைப்பதற்கு பெரும் பங்காற்றியவர்.
- ஆபரேஷன் "போலோ'
- ஆபரேஷன் போலோ என்ற செயல்பாட்டினால், 5 நாட்களுக்குள் 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி இந்தியாவுடன் ஐதராபாத் இணைக்கப்பட்டது.
அக்டோபர் 31 - உலக நகரங்கள் தினம்
- உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை பெரிதும் ஊக்குவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 31 ஆம் தேதியை உலக நகரங்கள் தினமாக (World Cities Day) கடைபிடிக்கிறது.
- 2019 ஆண்டின் உலக நகரங்கள் தின மையக்கருத்து:
- 'உலகை மாற்றுவது: புதுமைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கை' என்பதாகும்.