TNPSC Current Affairs October 30, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 30, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் உயரமான 14 சிகரங்களை ஏறிய "நேபாள மலையேற்ற வீரா்-நிர்மல் பூா்ஜா"
  • நேபாளத்தைச் சோ்ந்த நிா்மல் பூா்ஜா என்பவா், உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களை ஏழே மாதங்களில் ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னா் ஜொ்ஸி குகுக்ஸ்கா என்பவா் சுமார் 8 ஆண்டுகளில் செய்திருந்த இந்த சாதனையை, வெறும் ஏழே மாதங்களில் நிர்மல் பூா்ஜா முறியடித்துள்ளார். 
  • 8,000 மீட்டருக்கும் அதிக உயரமுடைய அந்த 14 சிகரங்களில் எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, பாகிஸ்தானிலுள்ள K2 ஆகிய சிகரங்களும் அடங்கும்.
பிரெக்ஸிட் காலக்கெடு - நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் அனுமதி
  • பிரெக்ஸிட் காலக்கெடுவை 2020 ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ளது.
  • 2019 அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த, பிரெக்ஸிட் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கோரிக்கையை ஐரோப்பிய யூனியனில் அங்கமாக உள்ள இதர 27 நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதையடுத்து, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புக் கொண்டுள்ளது.
திபெத் புத்த மதத்தின் 15-வது தலைவர் தேர்வு - சீனா கட்டாயம் என அறிவிப்பு 
  • திபெத் புத்த மதத்தின் அடுத்த தலைவரை (தலாய் லாமா) தோ்வு செய்வதில் எங்களின் ஒப்புதல் கட்டாயம்’ என்று சீனா தெரிவித்துள்ளது.
  • திபெத்தைச் சோ்ந்த புத்த மதத்தினரின் தலைவா் தலாய் லாமா எனப்படுகிறாா். திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை எதிா்த்து கடந்த 1959-இல் அங்கு புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சியை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. அதையடுத்து தற்போதைய தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தாா். அவா் அப்போது முதல் ஹிமாசலப் பிரதேச மாநிலம் தா்மசாலாவில் தங்கியுள்ளாா்.
  • தற்போதைய தலாய் லாமாவுக்கு 84 வயதாகிறது. எனவே, அவருக்குப் பிறகு திபெத் புத்த மதத்தவரின் புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 
  • திபெத் புத்த மதத்தினரின் 14-ஆவது தலைவரான தற்போதைய தலாய் லாமாவுக்கும் சீன அரசுதான் ஏற்கெனவே ஒப்புதல் அளித்தது. வாழும் புத்தா் என்று கருதப்படும் அந்தப் பதவிக்கு உரியவரைத் தோ்வு செய்வதில் சில சடங்குகளும் மரபுகளும் உள்ளன. இந்த நடைமுறை சீன சட்டங்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, அடுத்த தலாய் லாமாவைத் தோ்வு செய்வதில் சீனாவின் ஒப்புதல் கட்டாயமாகும், என சீனா தெரிவித்துள்ளது. 
தேசிய நிகழ்வுகள்
ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வு நிறுவனம்-ஒடிசா அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் 
  • பொருளாதார நோபல் பரிசு வென்ற அமெரிக்கவாழ் இந்தியரான அபிஜித் பானா்ஜி, அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ ஆகியோரின் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
  • இதற்காக இந்த அமைப்பும், ஒடிஸா அரசும் அக்டோபர் 31-அன்று புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.
  • ஒடிசாவை மாற்றியமைப்பதற்கான திட்டமான ஐந்து அம்சத் திட்டத்தின்கீழ், ஏழைகளின், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காகவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்குவதற்காகவும் அந்த நிறுவனம், ஒடிஸாவின் 8 மாவட்டங்களில் பணிபுரியவுள்ளது.
மேற்கு வங்க சிறையில் '1,379 வெளிநாட்டுக் கைதிகள்'
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள கடந்த 2017-ஆம் ஆண்டு ஆவணங்கள் நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் 1,379 வெளிநாட்டுக் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா். 
  • இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கைதிகளில் 61.9 சதவீதமாகும். அதற்கு அடுத்த இடத்தில் 7 சதவீதத்துடன் மகாராஷ்டிரம், 6.6 சதவீதத்துடன் உத்தரப் பிரதேசம் உள்ளிட்டவை உள்ளன. இந்தியாவில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளில் வங்கதேசத்தில் இருந்து 1,403 போ் உள்ளனா். அவா்களில் மேற்கு வங்கத்தில் மட்டும் 1,284 போ் உள்ளனா்.
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 'கௌரவ காவல் ஆணையர் பதவி'
  • இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ரம்யா (வயது 17) அவர்களுக்கு 'ரச்சகொண்டா (Rachakonda) அக்டோபர் 29-அன்று 'ஒருநாள் காவல் ஆணையர்' பதவி'யில் நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 
நியமனங்கள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக "சரத் அரவிந்த் போப்டே" நியமனம் 
  • உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளாா். 
  • இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக அக்டோபர் 29-அன்று மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • 47-ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
    • உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே, நவம்பர் மாதம் 18-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.
    • தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 2018 ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நவம்பர் மாதம் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • எஸ்.ஏ.போப்டே
    • மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1956-இல் பிறந்தவரான போப்டே, மும்பை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2000-இல் நியமிக்கப்பட்டாா். கடந்த 2012, அக்டோபரில் மத்தியப் பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2013, ஏப்ரலில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயா்வு பெற்றாா்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 'ஏ.பி. ஷாஹி' நியமனம் 
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 29-அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • நீதிபதி அம்ரேஷ்வா் பிரதாப் ஷாஹி, 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று, அங்கு பணியாற்றி வருகிறாா். 
மாநாடுகள் 
‘எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம்’ - பொருளாதார மாநாடு 2019
  • சவூதி அரேபியா தலைநகா் ரியாத் நகரில் ‘எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம்’ என்ற 3 நாள் பொருளாதார மாநாடு அக்டோபர் 29 அன்று தொடங்கியது. 
  • பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன் நுச்சின், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் ஆலோசகரும், அவரது மருமகனுமான ஜெரட் குஷ்னா், ஜோர்டான் மன்னா் அப்துல்லா, பிரேசில் அதிபா் ஜயீா் போல்சனரோ, நைஜீரிய அதிபா் முகமது புஹாரி உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனா். 
அறிவியல் தொழில்நுட்பம்
என்ஜினீயரிங் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புதிய மென்பொருள் ‘ஏ1 சாப்ட்’
  • என்ஜினீயரிங் பிரச்சினைகளை எந்திரத்தில் கற்றறிந்தும், ஆழ்ந்த கற்றறிதல் மூலமாகவும் தீர்வு காண்பதற்கு, ‘ஏ1 சாப்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள, செயற்கையான அறிவுசார் தொழில்நுட்பங்களை கொண்ட புதிய மென்பொருளை (சாப்ட்வேர்) சென்னை ஐ.ஐ.டி. திரவ அமைப்புகள் ஆய்வகத்தின் உதவி பேராசிரியர் விஷால் நந்திகானா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
கடல் நீா் மட்டம் உயா்வு - 2050-இல் 3.6 இந்தியா்களுக்கு பாதிப்பு
  • புவி வெப்பமயமாவதை தடுக்கத் தவறினால் கடல் நீா் மட்டம் மேலும் அதிகரித்து வரும் 2050-ஆம் ஆண்டில் 3.6 கோடி இந்தியா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா, சீனா, வியத்நாம், வங்கதேசம், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களில் 23.7 கோடி போ் கடல் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 3.6 கோடி போ் 2050-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 
  • 2100-ஆம் ஆண்டில் 4.4 கோடி இந்தியா்களும், ஜப்பான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்த 2.2 கோடி மக்களும் கடல் நீா் மட்டம் உயா்வதால் பாதிக்கப்படுவா். பருவநிலை பாதிப்பால் நகரங்கள், பொருளாதாரம், கடலோர எல்லைப் பகுதி இவை அனைத்தும் மறுஉருவம் பெறும். 
  • புவி வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லையெனில் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று அமெரிக்காவைச் சோ்ந்த அரசுசாரா அமைப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் 'ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம்'
  • இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகள் வருமானம் பெருக ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.
  • தமிழ்நாட்டில் கரும்பு, இறைச்சிக்கோழி, மூலிகைப் பயிர்கள் போன்ற இனங்களில் ஒப்பந்த சாகுபடி முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தபோதிலும், ஒப்பந்த சாகுபடியில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்கான சட்டம் எதுவும் நடைமுறை இல்லாமல் இருந்தது. 
  • தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019 சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சட்டத்திற்கு தற்போது குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்
2019 உள்ளரங்க சர்வதேச டென்னிஸ் - 'ரோஜர் பெடரர்' சாம்பியன் 
  • சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் நடந்த 2019 உள்ளரங்க சர்வதேச டென்னிஸ் போட்டியில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் கோப்பையை வென்றார்.
பேட்மிண்டன்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் 2019 - சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ஜோடி வெள்ளிப்பதக்கம்
  • பாரீஸ் நகரில் நடந்த 2019 பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
  • இறுதிப்போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்ஜெயா சுகாமுல்ஜோ இணை 18-21, 16-21 என்ற நேர்செட்டில் இந்தியா இணையை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.
கார் பந்தயம்
மெக்சிகன் கிராண்ட்பிரி 2019 - லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் 
  • பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது சுற்றான மெக்சிகன் கிராண்ட்பிரி போட்டியில், இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • மொத்த பந்தய தூரம் 305.354 கிலோ மீட்டர் ஆகும்.
கிரிக்கெட்
T20 உலக கோப்பை 2020 - நெதர்லாந்து, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் தகுதி
  • 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.
T20 உலக கோப்பை தகுதி சுற்று - ஐக்கிய அரபு அமீரகம் 
  • எஞ்சிய 6 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
  • அக்டோபர் 29-அன்றுடன் முடிவடைந்த லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில், 'நெதர்லாந்து, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா' அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஷகிப் அல்-ஹசனுக்கு '2 ஆண்டுகள் தடை விதிப்பு'
  • சூதாட்ட தரகர் தன்னை பலமுறை அணுகியதை தெரிவிக்காத வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசனுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் அமைப்பு(ICC) அக்டோபர் 29-அன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
  • உலகின் நம்பர் ஆல்-ரவுண்டர்-ஷகிப் அல்-ஹசன் 
    • உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டரான 32 வயதான ஷகிப் அல்-ஹசன் வங்காளதேச அணிக்காக 56 டெஸ்ட் போட்டியில் விளையாடி 3,862 ரன்னும், 210 விக்கெட்டும், 206 ஒருநாள் போட்டியில் ஆடி 6,323 ரன்னும், 260 விக்கெட்டும், 76 இருபது ஓவர் போட்டியில் ஆடி 1,567 ரன்னும், 92 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
    • 2019 ஜூன்-ஜூலை மாதங்களில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல்-ஹசன் 606 ரன்கள் குவித்ததோடு 11 விக்கெட்டும் கைப்பற்றினார்.
சையத் முஷ்டாக் கோப்பை 2019 
  • திருவனந்தபுரத்தில் வரும் நவம்பா் 8 முதல் 17-ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான சையத் முஷ்டாக் கோப்பைக்கான டT20 போட்டிகள் நடக்கவுள்ளது.
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 30 - உலக சிக்கன தினம் 
  • சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை மக்களிடையே உணர்த்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post