TNPSC Current Affairs October 3, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 3, 2019
Current Affairs October 2019
TNPSC Current Affairs October 3, 2019
சர்வதேச நிகழ்வுகள்
பிரெக்ஸிட்-ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற்றம்-பிரிட்டன் அறிவிப்பு 
  • பிரெக்ஸிட் நடவடிக்கை (Brexit) என்பது, ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கை ஆகும்.
  • பிரெக்ஸிட்-2016
    • ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடா்பாக, 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு கிடைத்தது.
    • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பிரெக்ஸிட் சிக்கல்கள் 
    • பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வா்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் பிரச்னை நீடித்து வருகிறது.
  • வடக்கு அயா்லாந்து, அயா்லாந்து பிரச்சனைகள் 
    • பிரிட்டனின் அங்கமாக இருந்து வரும் வடக்கு அயா்லாந்துக்கும், தனி நாடாகத் திகழும் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான அயா்லாந்துக்கும் இடையே, பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வா்த்தக ஒருங்கிணைப்பை தொடரும் விவகாரத்தால், சிறப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
    • சிறப்பு ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
  • ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற்றம் 
    • தற்போது, ஒப்பந்தம் இல்லாமலேயே ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் (Boris Johnson) அறிவித்துள்ளாா்.
ஐதராபாத் நிஜாமின் ரூ.300 கோடி - இந்தியாவுக்கு சொந்தம்
  • லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சுமார் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கிய ஐதராபாத், 1948-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஐதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் உஸ்மான் அலி கான், 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்டு பணத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூ.8.70 கோடி), லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் போட்டு வைத்திருந்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 35 மில்லியன் பவுண்டாக (சுமார் ரூ.300 கோடி) உயர்ந்தது.
  • இந்த நிதிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கோரி வந்தன. 
  • லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளான முகரம் ஜா (8-வது நிஜாம்), அவரது சகோதரர் முபகம் ஜா ஆகியோரும் இந்தியாவுடன் இணைந்து உரிமை கோரினர். 
  • 7-வது நிஜாமுக்கு (உஸ்மான் அலி கான்) உரிமையுள்ள இந்த நிதி, அவரது வாரிசுகளான இளவரசர்கள் மற்றும் இந்தியாவுக்கு சொந்தமானதாகும். இந்த வழக்கில் பாகிஸ்தான் வைத்த வாதங்கள் தவறானவை’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா 'பக்குக்சாங்' ரக ஏவுகணை சோதனை 
  • வட கொரியா நாடு, அக்டோபர் 2-அன்று, நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய பக்குக்சாங் ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒன்றை சோதித்துப் பாா்த்துள்ளது. அந்த ஏவுகணை, 450 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து சென்றது.
  • அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே அக்டோபர் 5-அன்று மீண்டும் அணுசக்திப் பேச்சுவாா்த்தை தொடங்கவிருந்த சூழலில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தேசிய நிகழ்வுகள் 
 தூய்மையான ரெயில் நிலையங்கள் தரவரிசை - ஜெய்ப்பூர் முதலிடம்
  • 2019-ஆம் ஆண்டுக்கான ரெயில் நிலையங்களின் தூய்மை தரவரிசைப் பட்டியலை (Swachh Rail, Swachh Bharat 2019) ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார். 
  • ரெயில் நிலையங்களின் தூய்மை தரம் குறித்த ஆய்வு (Railways' Cleanliness Survey 2019), 720 ரெயில் நிலையங்கள் மற்றும் முதல் முறையாக 109 புறநகர் ரெயில் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த பட்டியலில் முதல் 3 இடங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ரெயில் நிலையங்கள் பிடித்துள்ளன.
  • ரெயில் நிலையங்கள் தரவரிசை (முதல் 3 இடங்கள்)
    1. ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
    2. ஜோத்பூர் (ராஜஸ்தான்)
    3. துர்காபுரா (ராஜஸ்தான்)
  • புறநகர் ரெயில் நிலையங்கள் தரவரிசை (முதல் 3 இடங்கள்)
    1. அந்தேரி
    2. விரார்
    3. நைகான் 
  • ரெயில்வே மண்டலங்கள் தரவரிசை (முதல் 3 இடங்கள்) 
    1. வடமேற்கு ரெயில்வே
    2. தென்கிழக்கு மத்திய ரெயில்வே
    3. கிழக்கு மத்திய ரெயில்வே
150 ரூபாய் நாணயம் - வெளியீடு 
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில், 150 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
  • இது பொதுப்பயன்பாட்டிற்கு அல்லாமல் சேகரிப்பாளர்களக்கு மட்டுமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Rs 150 coins on Gandhi's 150th birth anniversary
அருணாசலபிரதேச 3 மாவட்டங்கள், 4 சரகங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் - நீட்டிப்பு 
  • அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த திரப், சாங்லாங், லாங்டிங் ஆகிய 3 மாவட்டங்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) 1958-இன் கீழ் பதற்றமானவையாக 2019 ஏப்ரல் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 
  • அஸ்ஸாம் எல்லையை ஒட்டிய நம்சாய் மாவட்டத்தைச் சேர்ந்த நம்சாய் மற்றும் மஹாதேவ்பூர் காவல்துறை சரகங்களும், லோயர் திபங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின் ரோயிங் காவல்துறைச் சரகம், லோஹித் மாவட்டத்தைச் சேர்ந்த சன்புரா காவல்துறைச் சரகம் ஆகிய 4 காவல்துறைச் சரகங்களும் பதற்றம் மிக்கவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. 
  • தற்போது இந்த 3 மாவட்டங்களிலும், 4 காவல்துறைச் சரகங்களிலும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான 6 மாதங்களுக்கு அந்த இடங்கள் பதற்றம் மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது, எந்த நேரத்திலும், எந்தவொரு இடத்திலும் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்துவதற்கும், எவரையும் கைது செய்வதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்குகிறது.
  • AFSPA: Armed Forces (Special Powers) Act, 1958. 
காந்தியன் சவால் போட்டித்தளம் - அறிமுகம் 
  • நிதி ஆயோக் & யுனிசெப் (UNICEF) சர்வதேச அமைப்பு ‘காந்தியன் சவால்’ (The Gandhian Challenge) என்ற போட்டித்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, அடல் புதுமை மிஷன் (AIM), நிதி ஆயோக் அமைப்பு , அடல் டிங்கரிங் ஆய்வகம் (ATL) மற்றும் யுனிசெப் இந்தியா (UNICEF India) ஆகியவை இணைந்து, ‘காந்தியன் சவால்’ (The Gandhian Challenge) என்ற போட்டித்தளத்தை தொடங்கியுள்ளன.
  • இந்த கண்டுபிடிப்பு சவால் தளம், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் காந்தியின் கொள்கைகளைப் பயன்படுத்தி அவர்களின் கனவுகளின் மூலம், நிலையான இந்தியாவுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
  • அக்டோபர் 2 முதல் அக்டோபர் 20 வரை இந்த தளம் இயங்கும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ‘ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை’ (Every Right for Every Child) என்ற திட்டப்படி இது செயல்படுத்தப்படுகிறது.
நியமனங்கள்
ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதர் - முனிர் அக்ரம்
  • ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராக 'முனிர் அக்ரம்' என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அண்மையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த மலேஹா லோதி, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • Munir Akram: Permanent Representative of Pakistan to the United Nations.
மைகோவ் இந்தியா-வின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி - அபிஷேக் சிங்
  • மத்திய அரசின் குடிமக்களை இணையதள சேவை தளமான 'மைகோவ் இந்தியா'வின் (MyGov India) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அபிஷேக் சிங் (Abhishek Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்/பரிசுகள்
தூய்மை கணக்கெடுப்பு- சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு
  • கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு
    • மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
  • சிறந்த மாநிலத்திற்கான விருது 
    • இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து, தமிழக அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றார்.
    • Swachh Bharat Award for Best Rural Cleanliness on Annual Sanitation Survey 2019
  • 'வயோஸ்ரேஸ்தா சம்மான்' விருது
    • மூத்த குடிமக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசின் 'வயோஸ்ரேஸ்தா சம்மான்' விருது வழங்கப்பட்டது. 
    • இதற்கான விருதை, டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அமைச்சர் சரோஜா பெற்றுக்கொண்டார். 
தர மேலாண்மைக்கான 2019 டெமிங் பரிசு - ELGi நிறுவனம், கோவை 
  • கோவையை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான “எல்ஜி எக்விப்மென்ட்ஸ்” (Elgi Equipments) மொத்த தர மேலாண்மைக்கான 2019 டெமிங் பரிசைப் பெற்றுள்ளது. (2019 Deming Prize for Total Quality Management). 
  • 60 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டுக்கு வெளியே, மதிப்புமிக்க டெமிங் பரிசை ELGi நிறுவனம் வென்றுள்ளது ELGi நிறுவனம், உலகளவில் நிறுவப்பட்ட முதல் தொழில்துறை சார்ந்த காற்று அமுக்கி உற்பத்தியாளர் (air compressor manufacturer) நிறுவனம் ஆகும்.
பொருளாதார நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி - 8.09%
  • மத்திய அரசு அங்கீகரித்த தமிழ்நாடு அரசின் அறிக்கையில், 2017-18 ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.09 சதவீதமாக உள்ளது. 
  • 2016 நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி.,யால் 2016-17 ம் நிதியாண்டில் மோசமடைந்திருந்த பொருளாதார வளர்ச்சி (4.3%), 2017-18 ம் நிதியாண்டில் அபார வளர்ச்சியை பெற்றுள்ளது.
  • விவசாயம் இரட்டை இலக்கத்தில் 15.1 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. 
  • தொழில்துறை 7.75% மற்றும் சேவை துறைகள் 6.55 % வளர்ச்சியை பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அலுவலகம் திறந்த முதல் இந்திய வங்கி-SBI
  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அலுவலகம் திறந்துள்ள முதல் இந்திய வங்கி என்ற சிறபபி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி பெற்றுள்ளது.
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது மெல்போர்ன் அலுவலகத்தைத் திறந்து, ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியாவில் மெல்போர்ன் நகரத்தில் தனது வங்கி கிளையை அண்மையில், முதல் இந்திய வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி திறந்துள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
அமேசான் காட்டுத் தீ - 35.5% குறைவு 
  • பிரேசில் நாட்டின் அமேஸான் மழைக் காடுகளில் 2019 ஆகஸ்ட் மாதத்தில் 19,925 காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டன. பிரேசில் விண்வெளி ஆய்வுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் சில:
  • தற்போது 2019 செப்டம்பா் மாதத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் 35.5 சதவீதம் குறைந்துள்ளது. 
  • 1998-ஆம் ஆண்டிலிருந்து காட்டுத் தீ தொடா்பான புள்ளிவிவரங்கள் ஆய்வில், ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பா் மாதத்தில் அதிக காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டிருந்தன. 
  • 2019-ஆம் ஆண்டு மட்டும் தீ சம்பவங்கள் குறைந்துள்ளன.
  • Amazon rainforest fire 2019
புத்தக வெளியீடு 
The RSS: Roadmaps for the 21st Century - Sunil Ambekar
  • ‘The RSS: Roadmaps for the 21st Century’’ என்ற தலைப்பிலான புத்தகத்தை ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் (RSS) மாணவர் பிரிவை சேர்ந்த சுனில் அம்பேகர் (Sunil Ambekar) எழுதியுள்ளார்.
  • இந்நூல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரைபடம் மற்றும் நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் பார்வை ஆகியவற்றைக் குறிக்கிறது.
 தமிழ்நாடு நிகழ்வுகள் 
நிரந்தர வெள்ள தடுப்பு பணி - ரூ.244 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில், பருவ மழைக்காலங்களில் அதிக சேதங்களை சந்திக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.244 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள்
  • தமிழ்நாட்டில், உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ஜனவரி 23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி சென்னையில் நடந்தது. 
  • இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
  • உலக முதலீட்டாளர் மாநாடு-2015
    • 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதி சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. 
வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள்-23,422 பேர் பதிவு
  • தமிழ்நாட்டில் வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் இதுவரையில் 23 ஆயிரத்து 422 பேர் பதிவு செய்துள்ளனர்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் எழுச்சியூர் மற்றும் தையூர் கிராமங்களில் தூங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
குத்துச்சண்டை
பெண்கள் உலக குத்துச்சண்டை 2019, உலன் உடே, ரஷ்யா 
  • 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் அக்டோபர் 3-அன்று தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. 
  • 6 முறை மகுடம் சூடிய மேரிகோம் 
    • இந்த போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் 7-வது முறையாக மகுடம் சூடும் முனைப்புடன் பங்கேற்கிறார்.
    • 48 கிலோ பிரிவில் இதுவரை பங்கேற்ற மேரிகோம், தற்போது 51 கிலோ எடைப்பிரிவுக்கு மாறியுள்ளார்.
  • பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம்:
    • மஞ்சு ராணி (48 கிலோ), மேரிகோம் (51 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ), நீரஜ் (57 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), மஞ்சு போம்போரியா (64 கிலோ), லவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), சவீத்தி பூரா (75 கிலோ), நந்தினி (81 கிலோ), கவிதா சாஹல் (81 கிலோவுக்கு மேல்)
  • இந்திய அணியின் பயிற்சியாளர் - முகமது அலி.
  • 2019 AIBA Women's World Boxing Championships, Ulan-Ude, Russia.
கிரிக்கெட்
மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) தலைவராக 'குமார் சங்கக்காரா' பொறுப்பேற்பு 
  • இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரா (Kumar Sangakkara), அக்டோபர் 3 அன்று, மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (Marylebone Cricket Club) தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 
  • குமார் சங்கக்காரா, முதல் பிரிட்டிஷ் அல்லாத முதல் நபராக இந்த பதவியை ஏற்றுள்ளவர் ஆவார், இவரது பதவிக்காலம் ஓராண்டு ஆகும். 
  • மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் என்பது லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப் ஆகும்.
தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்த தமிழர் 'செனுரன்முத்துசாமி'
  • விசாகப்பட்டினத்தில், நடைபெறும் இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி பங்கேற்றார்.
  • செனுரன் முத்துசாமி பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். செனுரன் முத்துசாமி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்து வளர்ந்தவர். 
  • 25 வயதான செனுரன் முத்துசாமி, சுழற்பந்து வீசுவதுடன், பேட்டிங்கும் செய்யக்கூடியவர். 
பெண்கள் T20 - அலிசா ஹீலே 148 ரன்கள் குவித்து சாதனை 
  • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலே 148 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
  • ஆஸ்திரேலியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான சிட்னியில் நடந்த 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், விக்கெட் கீப்பரான அலிசா ஹீலே 148 ரன்கள் (61 பந்து, 19 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். 
  • 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் அதிகபட்ச ரன்கள் 
    • பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் தனிநபர் அதிகபட்சம் ரன்கள் இதுவாகும்.
    • இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 133 ரன்கள் (இங்கிலாந்துக்கு எதிராக) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 
    • 29 வயதான அலிசா ஹீலே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். 
மூன்று வடிவ கிரிக்கெட் - தொடக்க ஆட்டக்காரராக சதம் அடித்த இந்தியர்-ரோகித் சர்மா
  • மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடக்க ஆட்டக்காரராக சதம் அடித்த ஒரே இந்தியர் ரோகித் சர்மா என்ற சிறப்பை படைத்துள்ளார்.
  • ரோகித் சர்மா, இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்தார் 
  • பிராட்மேன் சாதனை-சமன் 
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா (Rohit Sharma) 15 இன்னிங்சில் விளையாடி 4 சதம், 5 அரைசதம் உள்பட 884 ரன்கள் (சராசரி 98.22) சேர்த்துள்ளார். இதன் மூலம் குறைந்தது 10 இன்னிங்சிஸ் ஆடிய வீரர்களில் உள்நாட்டில் சிறந்த சராசரியை கொண்டுள்ள பிராட்மேனின் சாதனையை (50 இன்னிங்சில் 4,322 ரன்னுடன் சராசரி 98.22) ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post