TNPSC Current Affairs October 25, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 25, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
எளிதாக தொழில் தொடங்குவதற்கான நாடுகள் பட்டியல்-2019
  • இந்தியா 63-வது இடம் 
    • உலக வங்கி அமைப்பு அக்டோபர் 24 அன்று 2020-ஆம் ஆண்டுக்கான 'எளிதாக தொழில் தொடங்குவதற்கான சூழல் காணப்படும் நாடு'களின் (Ease of Doing Business rankings 2020) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. 
      Ease of Doing Business rankings 2020 india
    • இந்த பட்டியலில், இந்தியா 63-ஆவது (71.0 மதிப்பெண்கள்) இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 71.0 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
    • 190 நாடுகளைக் கொண்ட அந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 77-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது, இந்தியா 14 இடங்கள் முன்னேறியுள்ளது.
    • தரவரிசைப் பட்டியலில் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம்பிடித்துள்ளது. 
    • இந்தியா தவிர முக்கிய நாடுகள் பட்டியல்: சீனா (31), பஹ்ரைன் (43), சவூதி அரேபியா (62), ஜோர்டான் (75), குவைத் (83), டோகோ (97), தஜிகிஸ்தான் (106), பாகிஸ்தான் (108) மற்றும் நைஜீரியா (131).
  • தொழில் தொடங்க சிறந்த 10 நாடுகள் (Top10 Doing Business 2020)
    • நாடுகள் - மதிப்பெண்கள் 
      Ease of Doing Business rankings 2020
    1. நியூசிலாந்து (86.8)
    2. சிங்கப்பூர் (86.2)
    3. ஹாங்காங் SAR (85.3)
    4. டென்மார்க் (85.3)
    5. கொரியா குடியரசு (84)
    6. அமெரிக்கா (84)
    7. ஜார்ஜியா (83.7)
    8. ஐக்கிய இராச்சியம் (83.5)
    9. நார்வே (82.6) 
    10. சுவீடன் (82)
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் - இந்தியா, பாகிஸ்தான் கையெழுத்து
  • கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்து போட்டன. இதன்படி, சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வரலாம்.
  • கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாரா
    • சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல் குருவுமான குருநானக், தன் வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை, பஞ்சாப் மாநிலத்தையொட்டி, பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.
    • சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
  • கர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9-ந் தேதி திறப்பு 
    • பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விசா இல்லாமல், நேரடியாக கர்தார்பூருக்கு சீக்கியர்கள் சென்று தரிசிப்பதற்கு, பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது.
    • இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, நவம்பர் மாதம் 9-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்.
  • இந்தியா, பாகிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்து
    • இது தொடர்பான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சர்வதேச எல்லையில் கர்தார்பூர் ஜீரோ பாயிண்டில் அக்டோபர் 24 அன்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் தரப்பில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் எஸ்.சி.எல். தாஸ்சும், பாகிஸ்தான் சார்பில் அதன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
    • இந்த ஒப்பந்தத்தின்படி, சீக்கியர்கள் விசா ஏதுமின்றி கர்தார்பூருக்கு காலையில் சென்று, தர்பார் சாகிப் குருத்வாராவில் தரிசனம் செய்து விட்டு மாலையில் திரும்பி விட வேண்டும்.
    • தினந்தோறும் குறைந்தது 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
    • அங்கு செல்ல உள்ள சீக்கியர்கள் பட்டியல், அவர்களது பயணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தப்படும். பயணிகளுக்கு உறுதி கடிதம் 4 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படும்.
    • கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் கையெழுத்து ஆன உடன் இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது.
  • ரூ.1,400 கட்டணம்
    • கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இங்குள்ள சீக்கியர் ஒருவர் சென்று வருவதற்கு பாகிஸ்தான் 20 டாலர் (சுமார் ரூ.1,400) கட்டணம் விதித்துள்ளது.
ஜப்பான் பேரரசர் 'நருஹிதோ' அரியணை அறிவிப்பு நிகழ்வு' 
  • ஜப்பான் பேரரசராக நருஹிதோ அரியணை ஏறியதை முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோவில் அக்டோபர் 22-அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்றார்.
  • ஜப்பான் பேரரசராக இருந்த அகிஹிடோ முடிதுறந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் நருஹிதோவு புதிய பேரரசராக 2019 மே மாதம் முடிசூட்டப்பட்டார். 
பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்
  • சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அக்டோபர் 28 மற்றும் 29-ந்தேதிகளில், ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் கலந்து கொள்கிறார்.
தேசிய நிகழ்வுகள் 
மகாராஷ்டிரா அரியாணா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 
  • மகாராஷ்டிரா அரியாணா மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் அக்டோபர் 24 அன்று வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
  • மகாராஷ்டிரா
    • மொத்த தொகுதிகள் - 288
      • பாரதிய ஜனதா - 105
      • சிவசேனா - 56 
      • தேசியவாத காங்கிரஸ் - 54 
      • காங்கிரஸ் - 44 
  • அரியாணா
    • மொத்த தொகுதிகள் - 90
    • பாரதிய ஜனதா - 40
    • காங்கிரஸ் கட்சி - 31
    • ஜனநாயக ஜனதா - 10 
    • சுயேச்சைகள் - 7
இந்திய ரயில்வே-அமேசான் ஒப்பந்தம்: அமேஸான் இந்தியா அறிவிப்பு
  • இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கான பார்சல்களை ரயில்கள் மூலம் நகரங்களிடையே கொண்டுசெல்வதற்கான முன்னோட்ட நடவடிக்கைக்காக இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
  • அதன்படி, டெல்லி-மும்பை, மும்பை-டெல்லி, டெல்லி-கொல்கத்தா நகரங்களிடையே இயங்கும் ரயில்களில் அமேஸான் இந்தியா நிறுவனத்தின் பார்சல்கள் கொண்டுசெல்லப்படஉள்ளன. 
மத்திய அமைச்சரவைக் கூட்டம்-அக்டோபர் 23, 2019

  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்டோபர் 23-அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
  • BSNL-MTNL நிறுவனங்கள் இணைப்பு 
    • BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) மற்றும் MTNL (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இவ்விரு நிறுவனங்களையும் ரூ.68,751 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்துக்கும், 4G சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெறும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கோதுமை, பருப்பு வகைகளின் ஆதரவு விலை உயர்வு 
    • கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ.85 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,925-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    • பருப்பு வகைகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.325 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • எண்ணெய் வித்துக்கள், கடுகு ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,425-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள் 
BCCI அமைப்பின் 39-ஆவது தலைவர் - சௌரவ் கங்குலி 
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI), 39-ஆவது தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி (வயது 47) பதவியேற்றார்.
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் புதிதாக பதவியேற்றவர்கள் விவரம்:
  • தலைவர் - சௌரவ் கங்குலி
  • துணைத்தலைவர் - மஹிம் வர்மா (உத்தரகண்ட்)
  • பொருளாளர் - அருண் தமால் (BCCI முன்னாள் தலைவர் அனுராக் தாக்குரின் சகோதரர்)
  • செயலாளர் - ஜெய் ஷா (மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்)
  • இணைச் செயலர் - ஜெயேஷ் ஜார்ஜ் (கேரளா)
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
அரபிக்கடலில் 'கியார்' புயல் 
  • மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கியார் புயலாக உருமாறியுள்ளது. இதற்கு கியார் (Tropical Cyclone 'Kyarr') என்று பெயரிடப்பட்டுள்ளது.
விருதுகள் 
தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2019: தமிழ்நாட்டிற்கு 12 தேசிய விருதுகள் 
  • மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாட்டை மேற்கொண்டதற்காக தமிழ்நாட்டிற்கு 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 
  • இந்த விருதுகளை டெல்லியில் அக்டோபர் 23-அன்று நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து விருது வழங்கும் விழாவில், மத்திய வேளாண், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமிருந்து தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார். 
  • 12 தேசிய விருதுகள் விவரம்:
    • ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் மின்னணு பஞ்சாயத்து புரஸ்கார் விருதைப் பெற்றது. 
    • ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளித்து திறனை மேம்படுத்திய வகையில், மாவட்ட அளவில் சேலம் மாவட்டத்திற்கும், ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் - பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகள் அளவில் சேலம் மாவட்டம் - கோனூர், கோவை மாவட்டம் - மத்வராயபுரம், நாமக்கல் மாவட்டம் - அரசபாளையம், ஈரோடு மாவட்டம் - வெள்ளாளபாளையம், மதுரை மாவட்டம் -கோவில்பாப்பாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் - எஸ்.யு. வனம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது வழங்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டம், ராவணப்புரம் ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்ததற்காக நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கெளரவ கிராம சபை தேசிய விருதும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் ஊராட்சிக்கு குழந்தைகள் நேய கிராம 
    • ஊராட்சிக்கான தேசிய விருதும் என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
தமிழ்நாடு நாள் - நவம்பர் 1, 2019 - தகவல் தொகுப்பு 
  • ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு (அக்டோபர் 25, 2019) வெளியிடப்பட்டுள்ளது. 
  • மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 
  • 1956-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1-ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை அந்த மாநிலங்களில் மாநிலம் பிறந்த நாளாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 
  • தியாகி சங்கரலிங்கனார்
    • இன்றைய 'தமிழ்நாடு மாநிலம்' அன்று 'மதராஸ் மாகாணம்' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்படி கூப்பிடவே கூடாது அதனை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றுங்கள் என்று கூறி 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார் (வயது 78), 76-வது நாள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து உயிரிழந்தார்.
    • இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவியது. காங்கிரஸ் கட்சிக்கு கொதிநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
  • தமிழ்நாடு பெயர் மற்றம் (1967)
    • 1967-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 'மதராஸ் மாகாணம்' என்ற பெயரை ‘தமிழ்நாடு அரசு' என பெயர் மாற்றி வரலாறு படைத்தது. அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை - 49%
  • மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகம் முதன்மையானதாக உள்ளது. 
  • தமிழ்நாட்டில் தற்போது 56 பல்கலைக்கழகங்களும், 2,466 கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 35 கல்லூரிகள் வீதமும், சராசரியாக ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 924 பேர் வீதமும் உள்ளனர். 
  • உயர்கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அரசு கலைக் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 65 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
  • 2018 -19 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட 16 புதிய கல்லூரிகள் உள்பட மொத்தம் 81 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
  • உயர்கல்வித்துறையில் அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக, உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் 26.3 சதவீதமாக உள்ளது.
  • மேற்கண்டவை, சேலம் பெரியார் பல்கலைக்கழக 19-ஆவது பட்டமளிப்பு விழா அக்டோபர் 24-அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தெரிவித்த தகவல்கள் ஆகும்.
2019-2020-இல் தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி 
  • தமிழ்நாட்டில் 2019-2020 ஆண்டுகளில், முக்கிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை வரும் ஆண்டில் தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ள தகவல்கள் விவரம்:
  • 40 இடங்களில் அகழாய்வுப் பணிகள்
    • தமிழ்நாட்டில் இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அழகன்குளம், பட்டறைப்பெரும்புதூர், கீழடி ஆகிய தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விரிவான தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • அழகன்குளம்-அகழாய்வுப் பணிகள் 
    • ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் கடந்த 2014-15-ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கும் ரோம் நாட்டுக்குமான வணிகத் தொடர்புக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.
  • கீழடி-அகழாய்வுப் பணிகள்
    • சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசால் 2017-18-ஆம் ஆண்டுக்கு ரூ.55 லட்சமும், அதற்கடுத்த ஆண்டு ரூ.47 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இந்த அகழாய்வுகளின் முடிவுகளின் மூலம் கீழடி 2,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனவும், வைகை ஆற்றங்கரையில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • 2019-2020 அகழாய்வு (ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடி)
    • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விரிவான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2019-2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி ஆகிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • 2020 ஜனவரி முதல் அகழாAய்வுப் பணிகள் தொடக்கப்பட உள்ளன.
கீழடி அகழாய்வுப் பொருள்கள் மதுரையில் கண்காட்சி 
  • சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கொண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கண்காட்சி நடத்துவதற்கு தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
  • கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் - 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் ஆளும் அ.தி.மு.க. கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, சட்ட சபையில் அ.தி.மு.க. கட்சியின் பலம் 125 ஆக உயர்ந்துள்ளது.
  • புதுச்சேரி காமராஜ் நகர் -காங்கிரஸ் வெற்றி
    • புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விளையாட்டு நிகழ்வுகள்
உலக முப்படைகள் விளையாட்டு 2019
  • சீனாவுன் வூஹான் நகரில் நடைபெற்ற, உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள் விவரம்:
  • ஷிவ்பால் சிங் - தங்கப்பதக்கம் (ஆண்கள் ஈட்டி எறிதல், 83.33 மீ.)
  • ஆனந்தன் குணசேகரன் - தங்கப்பதக்கம் (மாற்றுத்திறனாளி 200 மீ D1 பிரிவு)
  • தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் இந்த போட்டியில் மொத்தம் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
  • குர்ப்ரீத் சிங் - வெண்கலப்பதக்கம் (ஆண்கள் 25 மீ ஃபயர் பிஸ்டல் பிரிவு)
கிரிக்கெட் 
இந்தியா-வங்காளதேசம் கிரிக்கெட் தொடர் 2019 (இந்தியா)
  • இந்தியாவுக்கு வருகை தரும் வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. 
  • விராட் கோலிக்கு ஓய்வு-ரோகித் சர்மா கேப்டன் 
    • தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால் கேப்டன் விராட் கோலிக்கு அவரது விருப்பத்தின் பேரில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழிநடத்துவார்.
  • சஞ்சு சாம்சன், ஷிவம் துபே தேர்வு 
    • கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
  • அணிகள் பட்டியல்
    • இந்திய 20 ஓவர் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.
    • டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில், ரிஷாப் பண்ட்.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் 2020 (தென்ஆப்பிரிக்கா)
  • 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்), 2020 ஜனவரி 17-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அக்டோபர் 24 அன்று வெளியிட்டது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 
  • இதன்படி ‘A’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, முதல்முறையாக தகுதி பெற்ற ஜப்பான், ‘B’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அறிமுக அணியான நைஜீரியா, ‘C’ பிரிவில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ‘D’ பிரிவில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
கால்பந்து 
சர்வதேச கால்பந்து தரவரிசை அக்டோபர் 24, 2019 
  • பெல்ஜியம் முதலிடம் 
    • கால்பந்து அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (FIFA) அக்டோபர் 24 அன்று வெளியிட்டது. 
    • இந்த தரவரிசையி பெல்ஜியம், உலக சாம்பியன் பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து அணிகள் முறையே முதல் 4 இடங்களில் தொடருகின்றன.
  • இந்திய அணி - 106-வது இடம்
    • இந்திய அணி 2 இடம் சரிந்து 106-வது இடம் பிடித்துள்ளது. 
உஷூ போட்டி
உஷூ உலக சாம்பியன்ஷிப் 2019 - 'பிரவீண் குமார்' தங்கப்பதக்கம் 
  • சீனாவின் ஷாங்காய் நகரில், உஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா வீரர்/வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் விவரம்:
  • தங்கம் வென்ற முதல் இந்தியர்-பிரவீண் குமார் 
    • உஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரவீண் குமார் (22 வயது) படைத்தார்.
    • பிரவீண் குமார் - தங்கப்பதக்கம் (ஆண்கள் 48 கிலோ பிரிவு)
    • பூணம் - வெள்ளிப்பதக்கம் (பெண்கள் 75 கிலோ பிரிவு)
    • சனாதோய் தேவி - வெள்ளிப்பதக்கம் (பெண்கள் 52 கிலோ பிரிவு) 
    • விக்ராந்த் பலியான் - வெண்கலப்பதக்கம் (ஆண்கள் 60 கிலோ பிரிவு).
Post a Comment (0)
Previous Post Next Post