நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 23-24, 2019
TNPSC Current Affairs October 23-24, 2019 |
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் பழமையான இயற்கை முத்து 'அபுதாபி முத்து'
கர்தார்பூர் வழித்தடத் திட்ட ஒப்பந்தம் - இந்தியா கையெழுத்திட முடிவு
- தேரா பாபா நானக் குருத்வாரா, கர்தார்பூர், பாகிஸ்தான்
- சீக்கிய மத நிறுவனரான குருநானக் தனது கடைசி காலத்தில் வசித்த தேரா பாபா நானக் குருத்வாரா பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது.
- ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள சீக்கிய பக்தர்கள் இந்த குருத்வாராவுக்கு யாத்திரை மேற்கொ
- குருநானக் 550-ஆவது பிறந்த தினம் - நவம்பர் 12, 2019
- இந்த 2019-ஆம் ஆண்டு குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் நவம்பர் 12-இல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சீக்கிய யாத்ரீகர்கள் ஓராண்டுக்கு கர்தார்பூர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இதற்கு வசதியாக பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரா முதல் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
- கர்தார்பூர் வழித்தடம்
- இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. கர்தார்பூர் வழித்தடம் எனப்படும் இத்திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
- பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய யாத்ரீகர்கள் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானுக்கு விசா இன்றி சென்று வர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளது.
- கர்தார்பூர் வழித்தடத் திட்ட சாலைத் திறப்புக்கான ஒப்பந்தத்தில் அக்டோபர் 23-ஆம் தேதி கையெழுத்திடத் தயார் என்று இந்தியா அக்டோபர் 21--அன்று அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான தபால் சேவை - பாகிஸ்தான் நிறுத்தம்
- இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.
- 2019 ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தபால்களை அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததை அடுத்து, இந்திய தபால் துறை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிலுவையில் வைத்துள்ளனர்.
- தூதரக சேவை, ரயில் சேவை போன்றவற்றை நிறுத்திக் கொண்ட நிலையில், தற்போது தபால் சேவையையும் அந்த நாடு நிறுத்திக் கொண்டுள்ளது.
உலக உணவு திட்டத்தின் "Feed Our Future" பிரச்சாரம்
- ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) இந்தியாவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக ‘எங்கள் எதிர்காலத்தை ஊட்டிவிடுங்கள்’ (Feed Our Future’ against hunger and malnutrition in India) என்ற சினிமா விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய சினிமா விளம்பர தளம் UFO Moviez மற்றும் SAWA-குளோபல் சினிமா விளம்பர சங்கம் ஆகியவை இணைந்து இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன.
தேசிய நிகழ்வுகள்
நாடு முழுவதும் நடந்த குற்றச்சம்பவங்கள் புள்ளி விவரம் (2017)
- 2017 NCRB Crime in India Report
- நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2017-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
- 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
- 2016-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது. 2015-ம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.
- உத்தரபிர தேசம் - முதல் இடம் (10.1%)
- நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள, அதிக குற்ற சம்பவங்கள் நடக்கிற மாநிலமாக உத்தரபிர தேசம் உள்ளது.
- இந்த மாநிலத்தில் 2017-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.
- இந்த அறிக்கையின்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இங்கு 2016-ம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 920 வழக்குகளும் பதிவாகின.
- மஹாராஷ்டிரா (9.4%)
- மஹாராஷ்டிர மாநிலம், அதிக எண்ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-வது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது. இங்கு 2017-ல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.
- மத்திய பிரதேசத்துக்கு மூன்றாவது இடம். இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.
- 4-வது இடம், கேரள மாநிலத்துக்கும், 5-வது இடம் டெல்லிக்கும், 6-வது இடம் பீகாருக்கும் கிடைத்துள்ளது.
- தமிழ்நாடு - 7-வது இடம் (5.8%)
- குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது.
- தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 5.8 சதவீதம் ஆகும்.
- 2016-ம் ஆண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ம் ஆண்டு, 1 லட்சத்து 87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
- இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- NCRB: National Crime Records Bureau
அசாமில் 2-க்கு மேற்பட்ட குழந்தைகள் கொண்டவர்களுக்கு அரசாங்க வேலைகள் இல்லை
- மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கையின் (Population and Women Empowerment Policy 2019, Assam) அடிப்படையில் சிறிய குடும்ப விதிமுறைகளின்படி, அசாம் மாநில அரசு, 2021 ஜனவரி 1 முதல் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு (Govt. jobs for people with more than 2 children from 2021) அரசாங்க வேலைகள் இல்லை என்ற கொள்கை அமலுக்கு வரவுள்ளது.
'தமன்னா' என்ற திறனறி தேர்வு - அறிமுகம்
- 12-ஆம் வகுப்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி துறையைத் தேர்வு செய்வதற்கு வசதியாக, 'தமன்னா' (Tamanna) என்ற பெயரில் மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு ஒன்றை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.
- Try And Measure Aptitude aNd Natural Abilities என்பதன் ஆங்கில சுருக்கமே தமன்னா (Tamanna) என்பதாகும்.
- இந்தத் தேர்வு வாய்மொழித் திறன், மொழித்திறன் என மொத்தம் 7 தலைப்புகளில் சுமார் 70 நிமிடங்களுக்கு நடைபெறும்.
- இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர்கள் தங்களது திறன் அறிந்து, அதற்கேற்ற உயர்கல்வித் துறையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வில் வெற்றி, தோல்வி என்று எதுவும் கிடையாது என்றும் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள் தங்களது திறனை அறிந்துகொள்ள இந்தத் தேர்வு முறையும், இதன் மதிப்பெண்களும் கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 'பிங்க் பூத்' வாக்குச்சாவடிகள் திட்டம்
- 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, பெண்கள் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள் வாக்களிக்கும் பொருட்டு 'பிங்க் பூத்' என்ற பெயரில் பெண்களுக்காக, பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் (Pink booth) முதல்முறையாக அமைக்கப்பட்டன. வீட்டில் இருக்கும் பெண்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.
- தற்போது நடந்து முடிந்த ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலிலும் பிங்க் பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- பெண்களே நிர்வகிக்கும் இந்த 'பிங்க் பூத்' வாக்குச்சாவடிகள் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
'கர்னல் செவாங் ரிஞ்சன் பாலம்' - திறப்பு
- லடாக் பிராந்தியத்தில் 14,650 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள 'கர்னல் செவாங் ரிஞ்சன் பாலத்தை (Col. Chewang Rinchen Setu) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த பாலத்தை எல்லை சாலைகள் அமைப்பு (BRO-Border Roads Organisation) கட்டியுள்ளது.
- இந்த பாலம் கிழக்கு லடாக்கில் வடக்கே, Durbuk Shyok Daulat Beg Oldie என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் கட்டப்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்தில் அதிகாரிகளில் ஒருவராக இருந்த, லடாக் பகுதியை சேர்ந்த கர்னல் செவாங் ரிஞ்சனின் நினைவாக இந்த பலத்திற்கு அவரின் பெயர் இடப்பட்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவம் 'பாதுகாப்பு அமைச்சகம்-ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்'
- ஆயுதப்படை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் பாரம்பரிய மருத்துவ சேவைகளை வழங்க ஆயுஷ் அமைச்சகம் (Ministry of AYUSH) பாதுகாப்பு அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆயுர்வேத அலகுகள், டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை, விமானப்படை மருத்துவமனைகள், காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் மருத்துவமனை ஆகியவை இந்த திட்டத்தில் இணைகின்றன.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-மாலத்தீவு கூட்டு இராணுவப் பயிற்சி - EKUVERIN-2019
தரையிலிருந்து தாக்கும் 'பிரம்மோஸ் ஏவுகணைகள்' - சோதனை
- அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான ட்ராக் தீவில் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் இந்திய விமானப் படை, தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் இரு பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணைகள், வெற்றிகரமாக பரிசோதித்தது.
- இரு பிரம்மோஸ் ஏவுகணைகளும் திட்டமிட்டபடி இலக்குகளை சரியாகச் சென்று தாக்கின.
நியமனங்கள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக 'சௌரவ் கங்குலி' பொறுப்பேற்பு
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் உள்ள BCCI தலைமையகத்தில் அக்டோபர் 23-அன்று நடைபெற்றது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டார். 10 மாதங்கள் தலைவர் பொறுப்பில் கங்குலி பதவி வகிப்பார்.
- கிரிக்கெட் நிர்வாகக் குழு - COA
- IPL தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, BCCI செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய், மகளிரணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
- கடந்த 2017 முதல் 33 மாதங்கள் இந்த COA (Committee of Administrators) தரப்பு BCCI நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது.
இந்தோனேசிய புதிய அதிபராக 'ஜோகோ விடோடோ' பதவியேற்பு
- இந்தோனேசியாவின் புதிய அதிபராக ஜோகோ விடோடோ (Joko Widodo) இரண்டாவது முறையாக 'ஜோகோ விடோடோ' ஜகார்த்தாவில் பதவியேற்றார்.
வெளியுறவு அமைச்சக கொள்கை ஆலோசகர் - "அசோக் மாலிக்"
- வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலர் அந்தஸ்துடன், கொள்கை ஆலோசகராக, மூத்த பத்திரிகையாளரும், குடியரசுத் தலைவரின் முன்னாள் ஊடகச் செயலருமான "அசோக் மாலிக்" நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொல்கத்தாவில் கடந்த 1991-இல் ஆங்கில நாளிதழில் ஒன்றில் செய்தியாளராக பணியை தொடங்கிய அவர், அரசியல், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் அசோக் மாலிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
'பாரத் கி லக்ஷ்மி' பிரசார தூதர்கள் - பி.வி. சிந்து & தீபிகா படுகோன்
- நாட்டில் உள்ள பெண்களின் பெருமையை கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்ட 'பாரத் கி லக்ஷ்மி' என்ற பிரசாரத்தின் விளம்பரத் தூதர்களாக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாடு/விழா
அணிசேரா இயக்க உச்சி மாநாடு 2019
- 18-வது அணிசேரா இயக்க உச்சி மாநாடு 2019 (NAM Summit-Non-Aligned Movement), அஜர்பைஜான் தலைநகரான பாகு நகரில் நகரத்தில், அக்டோபர் 25-26 தேதிகளில் நடைபெறுகிறது.
- அணிசேரா நாடுகள் இயக்கம் (1961)
- அணிசேரா நாடுகள் இயக்கம், 1961-இல் யூகோஸ்லாவியாவின் பெல்கிரேட் நகரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ ஆகியோர் முயற்சியில் நிறுவப்பட்டது.
சர்வதேச ரயில்வே பொருள்கள் கண்காட்சி 2019 (டெல்லி)
- டெல்லியில் 13-ஆவது சர்வதேச ரயில்வே பொருள்கள் கண்காட்சி மற்றும் சர்வதேச ரயில் கருத்தரங்கு அக்டோபர் 22-அன்று நடைபெற்றது.
- இந்த சர்வதேச ரயில் கருத்தரங்கை ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தொடக்கி வைத்து தெரிவித்த குறிப்புகள் சில:
- தற்போது பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் சராசரியாக மணிக்கு 99 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன.
- டெல்லி-வாராணசி இடையே புதிதாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 104 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது.
- ரயில்களை மணிக்கு 160 கி.மீ மற்றும் 320 கி.மீ வேகத்தில் இயக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.
- புல்லட் ரயில் - 320 கி.மீ வேகம்
- மும்பை-ஆமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்படவிருக்கும் புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- டெல்லி-மும்பை மற்றும் தில்லி-கொல்கத்தா வழித்தடங்களில் ரயில்களை 160 கி.மீ வேகத்தில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ரயில்வே துறையை நவீனமயாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 68 ஆயிரம் கி.மீ அகலப் பாதைகள் மின்மயமாக்கப்படவுள்ளன.
- கானா-இந்திய ரயில்வே ஒப்பந்தம்
- மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அந்நாட்டு ரயில்வே அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- டெல்லியில் கடற்படை அதிகாரிகளின் மூன்று நாள் கருத்தரங்கு அக்டோபர் 22-அன்று தொடங்கியது. அதிகாரிகள் கலந்துரையாடுவதற்காக ஆண்டுக்கு இரு முறை இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
- இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
விருதுகள்
‘தமிழ் ரத்னா’ விருதுகள் 2019
- நியூஸ்-7 தொலைக்காட்சி சார்பில் ‘தமிழ் ரத்னா’ விருதுகளை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார். விருது பெற்றோர் விவரம்:
- ‘தமிழ் ரத்னா’ விருது - வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
- கலை ரத்னா விருது - கட்டைக்கூத்து ராஜகோபால்
- இலக்கிய ரத்னா விருது - தொ.பரமசிவன்
- நாடக ரத்னா விருது - பிரளயன்
- விளையாட்டு ரத்னா விருது - சதீஷ் சிவலிங்கம்
- சேவை ரத்னா விருது - ரவீந்திரகுமார்
- ஆசிரியர் ரத்னா விருது - கோவிந்த பகவான்
- தொழில் ரத்னா விருது - சிபி செல்வன்
- மகளிர் ரத்னா விருது - பாரதி பாஸ்கர்
- யுவ ரத்னா விருது - விழியன்
- சக்தி ரத்னா விருது - திருநங்கை நளனா பிரசீதா
- இசை ரத்னா விருது - ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’-கானா பாடல் குழு
- சிறப்பு விருதுகள் - கிரேஸி மோகன், முத்தாலங்குறிச்சி காமராசு
அறிவியல் தொழில்நுட்பம்
‘ரெயில் தண்டோரா’ செல்போன் செயலி அறிமுகம்
- தெற்கு ரெயில்வே தகவல் தொழில்நுட்ப குழு புதிதாக ‘ரெயில் தண்டோரா’ என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ‘ரெயில் தண்டோரா’ தெற்கு ரெயில்வேயின் 4-வது ரெயில்வே மேம்பாட்டு திட்டம் ஆகும்.
- இந்த செயலி மூலம் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் தங்களது தினசரி வேலை குறித்தும், ரெயில்வே தொடர்பான பண பரிவர்த்தனை செய்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
பரம்பரை நோய்களை திருத்தியமைக்கும் 'CRISPR–Cas9 பொறிமுறை' கண்டுபிடிப்பு
- மனிதர்களுக்கு உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன. இக்குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும். இந்நிலையில் குறித்த குறைபாடுகளை 90 சதவீதம் வெற்றிகரமாக மாற்றயமைக்கக்கூடிய புதிய பொறிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள சுமார் 75000 நோய்களை கட்டுப்படுத்தலாம். இப்புதிய தொழில்நுட்பமானது Prime Editing என அழைக்கப்படுகிறது.
- CRISPR–Cas9 எனப்படும் மரபியல் திருத்தம் ஜீன்களை கட்டுப்படுத்துகிறது.
- இதன் மூலம் மரபணுக் குறியீடுகளை மாற்றி திரும்ப பதிக்க முடியும் என Broad Institute விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
பொதுத்தேர்வு எழுத கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை காரணமாக 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கி, தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக நீட்டிக்க முடிவு
- செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நேரம் நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் '3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல்' பாதிப்பு
- தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 22 வரை, 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா நந்தன்கனன் விலங்கியல் பூங்காக்கு '9 மஞ்சள் அனகோண்டா பாம்புகள்'
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நந்தன்கனன் விலங்கியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்படி, சென்னை முதலை பண்ணையில் இருந்து 9 மஞ்சள் அனகோண்டா பாம்புகள் 3 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரகால ஒத்திகை
- அதிவேக ஈனுலை
- இந்திய அணுசக்தி துறையின் கல்பாக்கம் வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணு மறுசுழற்சி முன்மாதிரி அதிவேக ஈனுலை (அணு மின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
- இந்த வளாகத்தில் அவசரகால தயார் நிலை திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் அவசரகால ஒத்திகை அக்டோபர் 22-அன்று நடத்தப்பட்டது.
பாலாறு பொருந்தலாறு-வரதமாநதி அணைகளில் இருந்து நீா் திறக்க உத்தரவு
- திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை ஆகியவற்றில் இருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி அக்டோபர் 23-அன்று உத்தரவிட்டுள்ளாா்.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆண்டின் (2019) சிறந்த விளையாட்டு வீரராக "டூட்டி சந்த்" தேர்வு
- வோக் நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் வென்ற இந்திய விளையாட்டு வீரராக இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை "டூட்டி சந்த்" (Vogue’s Sportsperson of the Year 2019) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அண்மையில் ராஞ்சி நகரில் அக்டோபர் 11 அன்று நடைபெற்ற தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை டூட்டி சந்த் (Dutee Chand) வென்றார்.
- இந்தியாவின் அதிவேக வீராங்கனை
- டூட்டி சந்த், இந்தியாவின் அதிவேக வீராங்கனையாக விளங்குகிறார்.
- இந்தியாவின் முதல் வெளிப்படையான ஓரின சேர்க்கை விளையாட்டு வீரராகவும் (India’s first openly gay athlete) அவர் கருதப்படுகிறார்.
கிரிக்கெட்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் 2019 - இந்திய அணி (3-0) வென்றது
- இந்தியாவில் நடைபட்டர் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
- தொடர்நாயகன் விருது - ரோகித் சர்மா (இந்தியா)
- இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதம், 2 சதம் உள்பட 529 ரன்கள் சேர்த்து தொடரில் முதலிடம் பிடித்தார். தொடர்நாயகன் விருதை (ரூ.2½ லட்சம் பரிசு) வென்றார்.
- தென்ஆப்பிரிக்காஆணியை ‘ஒயிட்வாஷ்’ (முழுமையாக) செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை விராட் கோலி பெற்றார்.
- அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 529 ரன்கள்
- மயங்க் அகர்வால் (இந்தியா) - 340 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 317 ரன்கள்
- டீன் எல்கர் (தென்னாபிரிக்கா) - 232 ரன்கள்
- ரஹானே (இந்தியா) - 216 ரன்கள்
- அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்
- அஸ்வின் (இந்தியா) - 15 விக்கெட்டுகள்
- முஹம்மது சமி (இந்தியா) - 13 விக்கெட்டுகள்
- ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - 13 விக்கெட்டுகள்
- உமேஷ் யாதவ் (இந்தியா) - 11 விக்கெட்டுகள்
- காகிஸோ ரபடா (தென்னாபிரிக்கா) - 07 விக்கெட்டுகள்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - முதலிடம்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம், 120 புள்ளிகளை பெற்றுள்ளது.
- ஒட்டுமொத்தமாக 240 புள்ளிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
டென்னிஸ்
1500-ஆவது ஆட்டத்தில் பங்கேற்கும் 'ரோஜர் பெடரர்'
- 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை புரிந்த சுவிற்சர்லாந்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் மற்றொரு மைல்கல்லாக 1500-ஆவது ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
- பேஸல் நகரில் நடைபெறவுள்ள ஸ்விஸ் உள்ளரங்க ATP போட்டியில் பங்கேற்கும் ரோஜர் பெடரர், ஜெர்மனியின் பீட்டர் கோஜோசிக்கை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறார்.
- பெடரருக்கு அடுத்து நடால் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
அக்டோபர் 20 - உலக எலும்புப்புரை தினம்
- ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வளர்சிதை மாற்ற எலும்பு நோய்களைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்வது குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20-ஆம் தேதி உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினத்தை (World Osteoporosis Day) அனுசரிக்கிறது.
- 2019 உலக எலும்புப்புரை தின மையக்கருத்து:
- 'Love your bones and Protect your future' உங்கள் எலும்புகளை நேசிக்கவும், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்' என்பதாகும்.
அக்டோபர் 21 - உலக அயோடின் குறைபாடு தினம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (World Iodine Deficiency Day) அனுசரிக்கப்படுகிறது.
- அயோடின் குறைபாடு மற்றும் மூளை வளர்ச்சியில் அதன் பேரழிவு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை இந்த தினம் ஏற்படுத்துகிறது.
அக்டோபர் 21 - தேசிய காவலர்கள் தினம்
- தேசிய காவலர்கள் தினம் இந்தியாவில் அக்டோபர் 21-அன்று கடைபிடிக்கப்பட்டது.
- கடந்த 1959-ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதலில், இந்திய எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட வந்த 10 போலீஸார் அக்டோபர் 21-ஆம் தேதி கொல்லப்பட்டனர்.
- இந்தச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி தேசிய காவலர்கள் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 24 - உலக போலியோ தினம்
- போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோய்க்கு முதன்முதலாக தடுப்பு ஊசி கண்டுபிடித்தவர் டாக்டர் யொனாசு சால்க் என்பவர் ஆவார். இளம்பிள்ளைவாதம் என்னும் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கின் நினைவைப் போற்றும் வண்ணம், அக்டோபர் 24-அன்று ஆண்டுதோறும் ரோட்டரி இண்டர்நேஷனல் உலகப் போலியோ தினத்தை (World Polio Day 24 October 2019) கடைபிடிக்கிறது.
அக்டோபர் 24 - ஐக்கிய நாடுகள் தினம்
- ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day 2019) அக்டோபர் 24 கடைபிடிக்கப்படுகிறது.1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்தப்பட்டது.
- 74-வது ஆண்டுவிழா:
- 2019 அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் அவை தனது 74- வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது.
- 75-வது ஆண்டு-2020
- ஐக்கிய நாடுகள் அவை தனது 75-வது ஆண்டு தினத்தை 2020-ஆம் ஆண்டு கொண்டாடுகிறது,
- UN75: 2020-க்கு அப்பால் - நம் எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைத்தல் (UN75: 2020 and Beyond - Shaping Our Future Together) என்ற கருப்பொருளில் கொண்டாடுகிறது.