TNPSC Current Affairs October 18, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 18, 2019
TNPSC Current Affairs October 18, 2019
TNPSC Current Affairs October 18, 2019
சர்வதேச நிகழ்வுகள்
ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து - புதிய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம்
  • ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக (Brexit) இங்கிலாந்து முடிவு எடுத்து, 2016-ல் அந்த நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் 52% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
  • அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்தது.
  • 2019 அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியாக வேண்டும்.
  • புதிய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 
    • இந்த நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜூன்சர் அக்டோபர் 17-அன்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமையைப் பெற்ற முதல் ரோபோ - இந்தியா வருகை 
    SOPHIA ROBOT
  • குடியுரிமை பெற்ற முதல் ரோபோவான ‘சோஃபியா’(Sophia Robot) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.
  • ‘சோஃபியா’. மனித வடிவிலான ரோபோ ஆகும். இதை ஹாங்காங்கை சோ்ந்த ‘ஹன்சன் ரோபோட்டிக்ஸ்’ என்ற நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு உருவாக்கியது.
  • ‘சோஃபியா’ ரோபாவுக்கு சவூதி அரேபிய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு குடியுரிமை வழங்கியது. இதன் மூலம், ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற முதல் ரோபோ என்ற பெருமையை ‘சோஃபியா’ பெற்றது.
  • IEEE மாநாடு (RO-MAN2019)
    • மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலாளா்கள் கூட்டமைப்பு (IEEE) சாா்பில் டெல்லியில் அக்டோபர் 14 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்ற ரோபோ மாநாட்டில், ‘சோஃபியா’ பங்கேற்றது.
IEEE RO-MAN2019
  • மாநாட்டில் பங்கேற்ற நபா்களின் பல்வேறு கேள்விகளுக்கு ‘சோஃபியா’ பதிலளித்தது. மாநாட்டில் பங்கேற்ற நபா் ஒருவரை ஓவியமாக வரைந்தது.
  • RO-MAN2019: 28th IEEE Conference on Robot and Human Interactive Communication. 
சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம்
  • யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் - திறப்பு 
    • இந்தியாவின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சீரமைக்கப்பட்டு (Jaffna International Airport) அக்டோபர் 17-அன்று திறக்கப்பட்டது.
Jaffna International Airport
  • அலையன்ஸ் ஏர் விமான போக்குவரத்து
    • இதையடுத்து 36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா அலையன்ஸ் ஏர் விமான போக்குவரத்து அக்டோபர் 17-அன்று தொடங்கியது. 
    • இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து ஏர்இந்தியா விமான சேவை நடைபெற்று வந்தது. 
    • 1983-ம் ஆண்டில் இருந்து இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கி தீவிரம் அடைந்ததால் சென்னையில் இருந்து யாழப்பாணத்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது.
தேசிய நிகழ்வுகள்
CBSE பள்ளிகளில் ‘நீா் மேலாண்மைத் திட்டம்’ 

  • இந்தியாவில் தில்லி, சென்னை உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீா் மட்டம் 2020-ஆம் ஆண்டுக்குள் அபாய நிலைக்கு சென்றுவிடும் என அண்மையில் நீதி ஆயோக் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நீா் மேலாண்மை திட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
‘உஜ்வலா’ திட்டம் - வடகிழக்கு மாநிலங்களில் ரூ. 3,000 கோடி முதலீடு 
    Ujjwala Yojana 2020
  • மத்திய அரசின் வீடுதோறும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான ‘உஜ்வலா’ திட்டத்தின் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் ரூ. 3,000 கோடி முதலீடு கிடைத்துள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 48.3 லட்சம் வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்தன. தற்போது அங்கு 94 லட்சம் வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. 
  • ‘உஜ்வலா’ திட்டம் (2016) 
    • சுற்றுச்சூழலுக்கும், பெண்களின் உடல்நலத்துக்கும் கேடு விளைவிப்பதை கருத்தில் கொண்ட மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு ‘உஜ்வலா’ திட்டத்தை (PMUY-Pradhan Mantri Ujjwala Yojana) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமாா் 5 கோடி குடும்பங்களுக்கு மலிவான விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டது.
உணவு பாதுகாப்பு மித்ரா திட்டம் 
    Food Safety Mitra 2020
  • உணவு பாதுகாப்பு மித்ரா (Food Safety Mitra) என்ற திட்டத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2019 உலக உணவு தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உணவு பாதுகாப்பு மித்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • உணவு பாதுகாப்பு மித்ரா (Food Safety Mitra) என்ற திட்டம் என்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் இந்திய உணவு பாதுகாப்பு சட்டம், விதிகள் கண்காணிப்பதற்காக மென்பொருளுடன் இணைக்கப்பட்ட, சான்றளிக்கும் ஒரு தனிப்பட்ட தொழில்முறை அமைப்பாகும் ஆகும்.
நியமனங்கள்
மத்திய பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை செயலாளர் - அமித் கரே
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையின் செயலாளராக, (Secretary of Department of School Education and Literacy) ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்த அமித் கரே (Amit Khare) என்ற IAS அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் - நியமனம் 
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் கொலீஜியம் உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து அக்டோபே ர் 7-அன்று உத்தரவிட்டுள்ளது. அவர்கள் விவரம்:
உயர்நீதிமன்றம் - புதிய தலைமை நீதிபதி (முதலில் இருந்த பதவி)
  • சென்னை உயர்நீதிமன்றம் - நீதிபதி ஏ.பி.சாஹி (பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்) 
  • மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் - ஏ.கே.மிட்டல் (மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்) 
  • பாட்னா உயர்நீதிமன்றம் - சஞ்சய் கரோல் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்).
  • நீதிபதி ஏ.பி.சாஹி (1959) 
    • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி என்கிற ஏ.பி.சாஹி 1959-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி பிறந்தவர். 2018 நவம்பர் 17-ந்தேதி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்று அங்கு பணியாற்றி வருகிறார். 
பாதுகாப்பு/விண்வெளி
சந்திரயான்-2 - ஸ்பெக்ட்ரோமீட்டா் கருவி மூலம் ஆய்வு தொடக்கம் 
  • நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டரில் உள்ள இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டா் கருவி மூலமான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • சந்திரயான்-2 ஆா்பிட்டரில், டிஎம்சி-2 (டெரைன் கேமரா), எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டா் (கிளாஸ்), சூரியசக்தி எக்ஸ்ரே மானிட்டா் (எக்ஸ்.எம்.எஸ்.), ஆா்பிட்டா் உயா் தர கேமரா (ஓ.ஹெச்.ஆா்.சி.), இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டா் (ஐஐஆா்எஸ்), இரட்டை அதிா்வலை ரேடாா் (டி.எப்.எஸ்.ஏ.ஆா்.) உள்பட 8 கருவிகள் இடம்பெற்றுள்ளன. முதன் முறையாக ஐஐஆா்எஸ் கருவி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
  • இந்த கருவி, நிலவின் ஏற்ற - இறக்கம் கொண்ட பரப்பின் மீது பட்டு எதிரொலிக்கும் சூரிய ஒளிக் கதிரை அளவீடு செய்து, நிலவின் பரப்பில் இடம்பெற்றிருக்கும் தனிமங்களை மட்டுமல்லாமல், நிலவின் தோற்றத்தையும் அது படிப்படியாக உருவான வரலாற்றையும் அறிய உதவியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மாநாடு/விழா
சா்வதேச இந்திய திரைப்பட விழா 2019 (கோவா)
  • 2019-ஆம் ஆண்டிற்கான கோவா திரைப்பட விழா (International Film Festival of India 2019/IFFI19), நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ளது. இது 50-ஆவது ஆண்டு திரைப்பட விழா ஆகும்.
  • இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.
  • சா்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம் ஆகும்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
அனைத்து வகை பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி - தடை விதிப்பு
  • இந்தியாவில் அனைத்து வகையான நெகிழி (பிளாஸ்டிக்) இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. 
  • இதன் மூலம் உள்ளூரில் பழைய நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிலை ஏற்படும் எனவும் இதனால் நாடு முழுவதும் 40 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு-கேரளா நதிநீர் பிரச்சினை - குழுக்கள் அமைப்பு
  • தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இடையிலான சந்திப்பு செப்டம்பர் 25-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. 
  • இந்த பேச்சுவார்த்தையில், பரம்பிகுளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறுஆய்வு மற்றும் அதனை சார்ந்த இனங்களை செயல்படுத்துவது குறித்து ஒரு குழுவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மற்றொரு குழுவும் இரு மாநில அரசு செயலாளர்கள் நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
  • தற்போது அக்டோபர் 17-அன்று நதிநீர் பிரச்சினை குறித்து கேரள அரசுடன் பேச தமிழக அரசு சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம்:
  • பரம்பிகுளம்-ஆழியாறு திட்டக்குழு
    • பரம்பிகுளம்-ஆழியாறு திட்டக்குழுவில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற சிறப்பு தலைமை பொறியாளர் டாக்டர் ஆர்.இளங்கோவன், கண்காணிப்பு பொறியாளர் பொ.முத்துசாமி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கண்காணிப்பு பொறியாளர் ஏ.முனாவர் சுல்தானா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • பாண்டியாறு-புன்னம்புழா
    • பாண்டியாறு-புன்னம்புழா திட்டக்குழுவிலும் டாக்டர் க.மணிவாசன், ஆர்.சுப்பிரமணியன், ஏ.முனாவர் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17%-ஆக உயர்வு
  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படுகிறது.
நான்காம் காவல் ஆணையம் அமைப்பு 
  • ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஷீலாபிரியா தலைமையில் நான்காம் காவல் ஆணையத்தை (TN Police Commission) அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • காவல்துறையின் சேவைகள், கடமைகள், பொறுப்புகள், நலன் மற்றும் நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் உள்ள நிலை பற்றி ஆராய்வதற்காக இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் 1969-ம் ஆண்டில் போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. 
  • 1989-ம் ஆண்டு மே மாதம் இரண்டாம் போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் 2006-ம் ஆண்டு ஆகஸ்டில் 3-வது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.
  • இந்தக் கமிஷன் மூலம் காவல் பணிகள் மற்றும் காவலர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றிய ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
விளையாட்டு நிகழ்வுகள் 
கிரிக்கெட்
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் 2020 (இந்தியா)
  • சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கிறார்கள். 
T20 உலக கோப்பை தகுதி சுற்று 2019 (துபாய், அபுதாபி)
  • 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
  • 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 6 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
  • தகுதி சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் அக்டோபர் 18-அன்று தொடங்கி நவம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post