நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2, 2019
TNPSC Current Affairs October 2, 2019 |
சர்வதேச நிகழ்வுகள்சீனாவின் தேசிய தினம் & 70-வது ஆண்டு விழா, அக்டோபர் 1, 2019
- சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்டு புரட்சியின் முடிவில் “சீன மக் கள் குடியரசு” தோற்றுவிக்கப்பட்டதன் 70-ம் ஆண்டு விழா, அதாவது சீனாவின் தேசிய தினம் அக்டோபர் 1-ஆம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் நடந்தன.
- விழாவில் சீன புரட்சியின் போது, உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- National Day of the People's Republic of China, 1 October, 2019.
- பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா செல்ல யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் வைத்துக்கொள்வது அவசியமாக உள்ளது.
- இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வது வழக்கமாகும்.
- கர்தார்பூர் சாலை வழித்தடம்
- பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கப்பட்டுவருகிறது.
- இந்த வழித்தடத்தில் விசா இல்லாமல் செல்ல முடியும்.
- குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன.
- குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது.
- இந்த கர்தார்பூர் வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
- அமரீந்தர் சிங் தலைமை
- கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவின் எல்லை தாண்டி கர்தார்பூருக்கு செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமை ஏற்கவுள்ளார்.
- இதன்பிறகு, குருத்வாராவுக்கு தினசரி 5,000 யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ளலாம்.
தேசிய நிகழ்வுகள்
வன்கொடுமை தடுப்பு சட்டம் - உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு - தீர்ப்பு
ரெயில் தாமதம்-பயணிகளுக்கு இழப்பீடு-தேஜஸ் ரெயிலில் அறிமுகம்- பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட (SC/ST Act, POA) வழக்குகளில் புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது.
- இந்த சட்ட பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடரப்பட்டது.
- 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியன்று 2 நீதிபதிகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி, உரிய அதிகாரியின் அனுமதியைப் பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
- 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
- 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் இனி புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை விசாரணையின்றி கைது செய்யலாம் என்று, தீர்ப்பு அளித்துள்ளது.
- SC/ST Act, POA: Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989.
- டெல்லி, லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்திய ரெயில்வேயின் துணை அமைப்பான இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) அக்டோபர் 4-ந் தேதி தொடங்குகிறது.
- ரூ.25 லட்சம் இலவச காப்பீட்டு வசதி
- இந்த ரெயிலில் பயணம் செய்கிற பயணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இலவச காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் வழங்குவது இதுவே முதல் முறை.
- காலதாமதம்-முதன்முதலாக-பயணிகளுக்கு இழப்பீடு
- தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக போய்ச்சேர்ந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1 மணி நேரத்துக்கு மேலாக ரெயில் தாமதமாக போய்ச் சேர்ந்தால் பயணிகளுக்கு தலா ரூ.100, 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.250 இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பற்றிய 'மகாத்மா லைவ்ஸ்/பாபு ஜிந்தா ஹை' நிகழ்ச்சி
- 2019 அக்டோபர் 1-2 தேதிகளில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) மற்றும் நாட்டின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் தொலைக்காட்சி, 'மகாத்மா லைவ்ஸ்' (Mahatma Lives) அல்லது 'பாபு ஜிந்தா ஹை' (Bapu Zinda Hain) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
- தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் யோசனைகள் மற்றும் போதனைகளை கொண்டாடுவது, அது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதே இந்த ஒளிபரப்பின் நோக்கம் ஆகும்.
பொதுத்துறை வங்கிகளின் சேவை நேரம் மாற்றி அமைப்பு
- நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய வங்கிகள் சங்கம், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, காலை 10 மணி முதல் 4 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என 3 வகையாக வாடிக்கையாளர் நேரத்தை அறிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர் சேவை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே மாதிரி மாற்றி அமைக்க என முடிவு செய்யப்பட்டது.
காந்தியடிகளின் பிறந்ததினம்- 600 சிறைக் கைதிகள் விடுதலை
- மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள், சிறப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2-அன்று விடுவிக்கப்பட உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு
- அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் 2019 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
- மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்பு/விண்வெளி
மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கு சென்னையில் பயிற்சி
- மாலத்தீவு நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படையினா் அளிக்கும் பயிற்சி முகாம் சென்னையில் அக்டோபர் 1-அன்று தொடங்கியது.
- விரிவடைந்து வரும் கடல்சாா் பொருளாதார முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படை பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
- இந்தியா சாா்பில் அதிநவீன இடைமறிக்கும் படகு ஒன்று மாலத்தீவு நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநாடு/விழா
சீனா-இந்தியா இடையே பேச்சுவார்த்தை 2019, மாமல்லபுரம்
- காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு சீனா மற்றும் இந்தியா இடையே இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த அக்டோபர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
- இந்த நிகழ்வில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திரமோடி ஆகிய பங்கேற்கின்றனர்.
- யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைகல் ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை இரு நாட்டு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.
உலகளாவிய மாணவர் சூரியசபை 2019
- IIT மும்பை கல்வி நிறுவனத்துடன் இணைந்து மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் , மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, நிலையான வாழ்க்கை குறித்த காந்திய கருத்தை ஊக்குவிப்பதற்காகவும் 2019 அக்டோபர் 2-ஆம் தேதி உலகளாவிய மாணவர் சூரியசபை மாநாட்டை (Global Student Solar Assembly) நடத்தியது.
விருதுகள்/பரிசுகள்
காந்தியடிகள் காவலர் விருது 2019 - 05 பேருக்கு அறிவிப்பு
- தமிழ்நாடு அரசு சார்பில் கள்ள சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்கப்படுகிறது.
- 2019-ஆம் ஆண்டிற்கான ‘காந்தியடிகள் காவலர் விருது’ 05 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், 2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருதுடன் பரிசுத்தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
- விருது பெறுபவர்கள் விவரம்:
- திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.சந்திரமோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தே.ராஜசேகரன், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் த.பூங்கோதை, விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் என்.அழகிரி, கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலைய தலைமை காவலர் அ.பார்த்திபநாதன்.
- கவிதா கோபால் (Kavitha Gopal), சென்னை IIT கல்வி நிறுவனத்தில், இந்திய குடியரசுத்தலைவர் பரிசு வென்ற முதல் பெண் மாணவி என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
- முன்னதாக, ஆண் மாணவர்கள் மட்டுமே இதுவரை பரிசு வென்றிருந்தனர்.
பொருளாதார நிகழ்வுகள்செப்டம்பர் மாத சரக்கு-சேவை வரி - '19 மாதங்களில் குறைந்த வசூல்'
- 2019 செப்டம்பர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (GST) வசூல் கடந்த 19 மாதங்களில் இல்லாத வகையில் ரூ.91,916 கோடி என்ற அளவுக்கு குறைந்தது.
- இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.98,202 கோடியாக இருந்தது.
- கடந்த ஆண்டு செப்டம்பரில் GST வசூல் ரூ.94,442 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக GST வசூல் 7.82 சதவீதம் அதிகரித்துள்ளது.
- செப்டம்பரில் மத்திய GST-யாக ரூ.16,630 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,598 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.45,069 கோடியும் (இதில் ரூ.22,097 கோடி இறக்குமதி மூலம் கிடைத்தது), கூடுதல் வரி (செஸ்) மூலம் ரூ.7,620 கோடியும் கிடைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்கொடுங்கையூரில் 'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்' திறப்பு
- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் கொடுங்கையூரில் ரூ.348 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அக்டோபர் 1-அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
- இந்த நிலையம், நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
- குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டம்
- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
- நீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து சென்னை, பூண்டி ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- 2019 அக்டோபர் முதல் 2020-ம் ஆண்டு மார்ச் வரையிலான குறுவை பருவத்துக்கு, தமிழ்நாட்டிற்கு, 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 45 கிலோ எடையுள்ள யூரியா மூடையின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
- ‘உழவன்’ செயலி
- விவசாயிகள் ‘உழவன்’ செயலி மூலமும் அருகில் உள்ள கூட்டுறவு-தனியார் உர விற்பனை நிலையங்களில் உர இருப்பை அறியலாம்.
விளையாட்டு நிகழ்வுகள்
தடகளம்உலக தடகள சாம்பியன்ஷிப் 2019 - பதக்க பட்டியல்
- 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்/வீராங்கனைகள், பிரிவுகள் விவரம்:
- உயரம் தாண்டுதல் (பெண்கள்)
- மரியா லசிட்ஸ்கேனி (பொதுவான வீராங்கனை) - தங்கப்பதக்கம் (2.04 மீ.)
- ரஷ்யா நாட்டை சேர்ந்த, மரியா லசிட்ஸ்கேனி, உலக போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2015, 2017, 2019) தங்கம் வென்ற முதல் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையை (‘ஹாட்ரிக்’ சாதனை) பெற்றுள்ளார்.
- ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக ரஷிய தடகள சம்மேளனம் தடை செய்யப்பட்டுள்ளது.
- இதனால், மரியா லசிட்ஸ்கேனி இந்த போட்டியில் பொதுவான வீராங்கனைகள் பட்டியலில் பங்கேற்றார்.
- 400 மீட்டர் தடை ஓட்டம் (ஆண்கள்)
- கார்ஸ்டென் வார்ஹோல்ம் (நார்வே) - தங்கப்பதக்கம் (47.42 வினாடி)
- 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் (ஆண்கள்)
- முக்தார் எட்ரிஸ் (எத்தியோப்பியா) - தங்கப்பதக்கம் (12 நிமிடம் 58.85 வினாடி)
- 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டம் (ஆண்கள்)
- இந்திய வீரர் அவினாஷ் சபில், 8 நிமிடம் 25.23 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் 7-வது இடம் பிடித்தார்.
கிரிக்கெட்இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினம்
- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
- இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2-அன்று தொடங்கியுள்ளது.
- ICC World Test Championship 2019, India vs South Africa at Visakhapatnam.
- 13-வது IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2020-ஆம் ஆண்டு நடக்கிறது.
- இந்த IPL (Indian Premier League) போட்டிக்கான வீரர்கள் ஏலம் (IPL Auction 2019), கொல்கத்தா நகரில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
- இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேட்மிண்டன்உலக பேட்மிண்டன் தரவரிசை (அக்டோபர் 1, 2019)
- BWF World Rankings (October 1, 2019)
- பெண்கள் தரவரிசை (முதலிடம் & இந்தியா வீரர்கள்)
- 1. தாய் சூ யிங் (சீன தைபே)
- 6. புசர்லா வி. சிந்து
- 8. சாய்னா நேவால்
- இந்த தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை, உலக சாம்பியன் பி.வி.சிந்து ஒரு இடம் சரிந்து 6-வது இடத்திற்கு பிடித்துள்ளார்.
- பெண்கள் இரட்டையர் பிரிவு
- 19. அஸ்வினி பொன்னப்பா-ரெட்டி என். சிக்கி-இணை (இந்தியா)
- ஆண்கள் தரவரிசை (முதலிடம் & இந்தியா வீரர்கள்)
- 1. கேண்டோ மோமோடா (ஜப்பான்)
- 9. கிடாம்பி ஸ்ரீகாந்த்
- 12. சாய் பிரணீத். பி
- 17. சமீர் வர்மா
- 25. பருப்பள்ளி காஷ்யப்
- ஆண்கள் இரட்டையர் பிரிவு
- 12. சாட்விக்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி-இணை (இந்தியா)
அக்டோபர் 2 (2019) - சர்வதேச அகிம்சை தினம்முக்கிய தினங்கள்
- மகாத்மா காந்தியடிகள் - 151-வது பிறந்த நாள்
- மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று ஆண்டுதோறும் சர்வதேச அகிம்சை தினமாக (International Day of Non-Violence) கடைபிடிக்கப் படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையினால் 2007 முதல் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- 1965 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டபோது அவர் அளித்த ‘ஜெய் ஜாவான், ஜெய் கிசான்’ என்று முழக்கம் இட்டவர் லால்பகதூர் சாஸ்திரி.
- விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 2 ஆகும்.
- 1964 ஜூன் 9 முதல் 1966 ஜனவரி 11 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தவர்.
- சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.