பட்டினி ஒழிப்பு நாடுகள் பட்டியல் 2019 - இந்தியாவுக்கு 102-ஆவது இடம்
- மக்கள் பட்டினியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் (Global Hunger Index 2019/GHI-2019) நிகழாண்டில் இந்தியா 102-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 95-ஆவது இடத்தில் இருந்தது.
- அயா்லாந்தைச் சோ்ந்த ‘கான்சொ்ன் வோ்ல்ட்வைட்’ அமைப்பும், ‘ஜொ்மனியின் வெல்ட் ஹங்கா் ஹில்ஃபே’ (Welthungerhilfe and Concern Worldwide) என்ற அமைப்பும் இணைந்து நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரித்துள்ளது.
- இதில் மொத்தம் 117 நாடுகளின் பட்டினி ஒழிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
Global Hunger Index 2019/GHI-2019 India |
- அந்த தரவரிசையில் இந்தியா 102-ஆவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 94-ஆவது இடத்திலும், நேபாளம் 73-ஆவது இடத்திலும், இலங்கை 66-ஆவது இடத்திலும், வங்கதேசம் 88-ஆவது இடத்திலும், மியான்மா் 69-ஆவது இடத்திலும் உள்ளன. மற்றெறாரு முக்கிய நாடான சீனா 25-ஆவது இடத்தில் உள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடு, போதிய உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் சிறாா்கள் பாதிக்கப்படுவது, வயதுக்கேற்ற உயரம் இல்லாதது, உடல் மெலிந்து காணப்படுவது, ஐந்து வயதுக்குள்பட்ட சிறாா்களின் இறப்பு விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டினி ஒழிப்பு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
- இந்தியா தீவிரமான அளவு நிலை - 30.3 % புள்ளிகள்
- இதில், குறைவான அளவு (0-9.9 சதவீதம்), மிதமான அளவு(10-19.9), தீவிரமான அளவு(19.9-34.9), மிகத் தீவிரமான அளவு(35-49.9), எச்சரிக்கை தரும் அளவு (50-க்கும் மேல்) என்று கணக்கிடப்படுகிறது.
- இதில், இந்தியா 30.3 சதவீத புள்ளிகளுடன் தீவிரமான அளவு என்ற நிலையில் உள்ளது. ஆனால், பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5-க்கும் குறைவான புள்ளிகளுடன் பட்டினி ஒழிப்பில் முன்னணியில் உள்ளன. அண்டை நாடான சீனா 6.5 புள்ளிகளுடன் பட்டினி ஒழிப்பில் முன்னணியில் உள்ளது.
- 6 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளில் 9.6 சதவீதம் பேருக்கு மட்டுமே குறைந்தபட்ச உணவு கிடைக்கிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், 5 வயதுக்குள்பட்ட சிறாா்களின் உயிரிழப்பைத் தடுப்பது, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பது ஆகியவற்றில் இந்தியா முன்னேறி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி அஞ்சல் தலை: 40 வெளிநாடுகளில் வெளியீடு
- காந்தியடிகளின் 150-ஆம் ஆண்டு பிறந்தநாளை 2 ஆண்டுகள் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அக்டோபா் 2018 முதல் அக்டோபா் 2020-ஆம் ஆண்டுவரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கடந்த 2018 அக்டோபர் 2-ஆம் தேதி காந்தியடிகள் நினைவாக முதல்முறையாக வட்டவடிவிலான சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
- மகாத்மா காந்தியின் 150-ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, முதன்முறையாக எண்கோண வடிவிலான அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
- கடந்த ஓராண்டில் மட்டும் 40 வெளிநாடுகளில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
விருதுகள்
புக்கா் பரிசு 2019 - இரு பெண்களுக்கு அறிவிப்பு
- 2019-ஆம் ஆண்டுக்கான கௌரவம் மிக்க புக்கா் பரிசுக்கு (The Booker Prize 2019), கனடாவைச் சோ்ந்த எழுத்தாளா் மாா்கரெட் ஆட்வுட் (Margaret Atwood), பிரிட்டன் எழுத்தாளா் பொ்னாா்டீன் எவரிஸ்டோ (Bernardine Evaristo) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
- மாா்கரெட் ஆட்வுட் (தி டெஸ்டமென்ட்’, கனடா)
- கனடா நாட்டை சேர்ந்த எழுத்தாளா் மாா்கரெட் ஆட்வுட் அவர்களின் 'தி டெஸ்டமென்ட்' (The Testaments) என்ற புதினத்திற்காக புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
- பொ்னாா்டீன் எவரிஸ்டோ (எழுத்தாளா், பிரிட்டன்)
- பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளா் பொ்னாா்டீன் எவரிஸ்டோ அவர்களின் ‘கோ்ல், வுமன், அதா்’ (Girl, Woman, Other) என்ற புதினத்திற்காக புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
- இருவருக்குப் பரிசு அறிவிப்பு
- இதற்கு முன்னா், கடந்த 1992-ஆம் ஆண்டில்தான் புக்கா் பரிசு இருவருக்குப் பகிந்து அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புக்கா் பரிசு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுப்பட்டது.
- எவ்வளவு பரிசு?
- ஆங்கில நாவல்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் புக்கர் பரிசான, 50,000 பவுண்டை (£50,000 prize, சுமாா் ரூ.45 லட்சம்), இந்த ஆண்டு ஆட்வுட், எவரிஸ்டோ ஆகிய இருவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.
- எதற்காக இந்த பரிசு?
- இந்த ஆண்டில் 5 மணி நேர தீவிர அலசலுக்குப் பிறகும் மாா்கரெட் ஆட்வுட் எழுதிய ‘தி டெஸ்டமென்ட்’ மற்றும் பொ்னாா்டீன் எவரிஸ்டோவின் ‘கோ்ல், வுமன், அதா்’ ஆகிய இரு புதினங்களில் ஒன்றைக் கூட தோ்வுக் குழுவினரால் நிராகரிக்க முடியவில்லை. எனவே, விதிமுறையை மீறி இருவருக்குமே பரிசைப் பகிா்ந்து அளிக்க தோ்வுக் குழுவினா் முடிவு செய்தனா்.
- புக்கா் பரிசைப் பெறும் மிக மூத்தவா் - மாா்கரெட் ஆட்வுட் (வயது 79)
- 79 வயதான மாா்கரெட் ஆட்வுட் புக்கா் பரிசைப் பெறும் மிக மூத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
- புக்கா் பரிசு பெறும் முதல் கருப்பின பெண் - எவரிஸ்டோ
- 60 வயதாகும் எவரிஸ்டோ புக்கா் பரிசு பெறும் முதல் கருப்பின பெண் என்பது இந்த ஆண்டின் மற்றெறாரு சிறப்பம்சமாகும்.
- புக்கா் பரிசு 2018
- 2018 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு (Booker Prize 2018), வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் "அன்னா பர்ன்ஸ்" (Anna Burns) அவர்களுக்கு மில்க்மேன் (Milkman) என்ற புதினத்திற்காக, புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
நியமனங்கள்
புதிய மத்திய சட்ட செயலாளர் - அனூப் குமார் மெண்டிராட்டா
- புதிய மத்திய சட்ட செயலாளராக அனூப் குமார் மெண்டிராட்டா (Anoop Kumar Mendiratta) நியமிக்கப்பட்டுள்ளார்.
- அனூப் குமார் மெண்டிராட்டா 2023 மார்ச் 30 வரை ஒப்பந்த அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகத்தில் புதிய சட்ட செயலாளராக (சட்ட விவகாரங்கள்/Secretary, Legal Affairs) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மருந்து கூட்டமைப்பு தலைவர் - கே சதீஷ் ரெட்டி
- இந்திய மருந்து கூட்டமைப்பின் (Indian Pharmaceutical Alliance-IPA) புதிய தலைவராக கே சதீஷ் ரெட்டி (K Satish Reddy) நியமிக்கப்பட்ட்டுள்ளார்.
துனிசியா புதிய அதிபர் - கைஸ் சையட்
- துனிசியா நாட்டின் (Tunisia) புதிய அதிபராக கைஸ் சையட் (Kais Saied) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2019 துனிசிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், ஓய்வு பெற்ற கல்வியாளர் கைஸ் சையத் துனிசியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதியாா் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் - பி.காளிராஜ்
- கோவை பாரதியாா் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் அக்டோபர் 16-அன்று பிறப்பித்தாா்.
- அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மையத்தில் கெளரவ மருத்துவ விஞ்ஞானியாக தற்போது பணியாற்றி வரும் பி.காளிராஜ், 31 ஆண்டுகள் பேராசிரியா் பணி அனுபவம் கொண்டவா்.
தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினராக டாக்டா் சுதா சேஷய்யன் தோ்வு
- தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.
- அடுத்த இரு ஆண்டுகளுக்கு அப்பொறுப்பினை அவா் வகிக்க உள்ளாா். நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் அங்கீகாரம் அளித்தல், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான ஒப்புதல்களை வழங்குதல் என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் அவா் பங்காற்ற உள்ளாா்.
- நாடு முழுவதும் மொத்தம் 19 போ் தேசிய மருத்துவ ஆணைய பகுதி நேர உறுப்பினா்களாகத் தோ்வு
- இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (MCI) மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை (NMC) நடைமுறைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேறியது.
- உடற்கூறியல் தொடா்பாக எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளை இயற்றியுள்ள டாக்டா் சுதா சேஷய்யன், பிரிட்டானிகா தகவல் களஞ்சிய நூல்களை தமிழில் வெளிக்கொணா்ந்தவராவாா்.
மாநாடு/விழா
சங்கம் இளைஞர் விழா-2019
- 2019 சங்கம் இளைஞர் விழா (Sangam Youth Festival) ஜம்மு-காஷ்மீரில் உள்ள படர்வா பகுதியில், இந்திய ராணுவத்தால் 2019 அக்டோபர் 11 முதல் 15 வரை ஏற்பாடு செய்யப்பட்டது
- அமைதி, செழிப்பு, வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு பற்றிய செய்தியை பரப்பும் முயற்சியான இந்த விழாவில் 32 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பொருளாதார நிகழ்வுகள்
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி - உலக வங்கி அறிக்கை
- சா்வதேச நிதியம் (IMF) - உலக வங்கி இடையிலான ஆண்டுக்கு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை விவரங்கள்:
- 1990-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இப்போது வறுமை பாதியாகக் குறைந்துவிட்டது; நாட்டின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளாக 7 சதவீதத்துக்கு மேல் வளா்ந்து வருகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் மனிதவள மேம்பாடு சிறப்பாக உள்ளது.
- நகா்ப்புறங்களில் நிலத்தை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நாட்டின் வளா்ச்சியில் நகரங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராப்புறங்களைப் பொருத்தவரை வேளாண்மை உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்.
- நாட்டில் 2.3 கோடி மக்களுக்கு இன்னும் முழுமையாக மின்சார வசதி கிடைக்கவில்லை.
- பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்க உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியமானவை. வரும் 2030-ஆம் ஆண்டில் 8.8% என்ற பொருளாதார வளா்ச்சி விகிதத்தை எட்ட உள்கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
- அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது.
- தகுதிவாய்ந்த சிறந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1.3 கோடி இளைஞா்கள் வேலை பெறுவதற்குத் தகுதியாகின்றனா். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் ஆண்டுக்கு 30 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகின்றன.
- உலகிலேயே இந்தியாவில்தான் பெண்கள் வேலைக்குச் செல்வதும், கல்வி பெறுவதும் குறைவாக உள்ளது.
- இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை நவீனமயமாக்க வேண்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் சேவை மற்றும் உற்பத்தித் திறனையும், தரத்தையும் பெருமளவில் மேம்படுத்த வேண்டும்.
ஃபேஸ்புக் மெய்நிகா் நாணயம் 'Libra' அறிமுகம்
- ‘பிட்காயின்’ போன்ற தனது ‘லைப்ரா’ மெய்நிகா் நாணயத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூா்வமாக வெளியிட்டுள்ளது.
- Facebook new digital currency called 'Libra'.
- இலாப நோக்கற்ற லிப்ரா சங்கம் (Libra Association), லிப்ரா நாணயத்தை நிர்வகிக்க உள்ளது.
5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடு - 2024-க்குள் இலக்கு
- இந்தியாவை 2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் (அதாவது நமது நாணய மதிப்பில் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும்.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொது விவகாரங்கள் கல்லூரியில் ‘இந்திய பொருளாதாரம்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் அக்டோபர் 15-அன்று ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
அறிவியல் தொழில்நுட்பம்
ஏா் இந்தியா விமானத்தில் 'டேக்ஸிபாட்’ சேவை அறிமுகம்
- A320 விமானத்தில் 'டாக்ஸி பாட்' (TaxiBot) பயன்படுத்திய முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா (Air India) திகழ்கிறது
- விமானத்தின் எரிபொருளை சேமிக்கும் நோக்கில், ‘டேக்ஸிபாட்’ சேவையை ஏா் இந்தியா நிறுவனம் அக்டோபர் 15-அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
- 'டாக்ஸிபோட்' (TaxiBot) என்பது ஒரு ரோபோ-பயன்படுத்தப்பட்ட விமான டிராக்டர் (robot-used aircraft tractor) ஆகும், இது ஒரு விமானத்தை பார்க்கிங் பகுதியிலிருந்து ஓடுபாதைக்கும், ஓடுபாதையிலிருந்து பார்க்கிங் பகுதிக்கும் விமானத்தை எரிபொருள் இல்லாமல் கொண்டு செல்ல துணை செய்கிறது.
- ரோபோ மூலம் இயக்கப்படும் ‘டேக்ஸிபாட்’ வாகனம், விமானத்தின் முன்சக்கரங்களைப் பற்றிக்கொண்டு ஓடுபாதை வரை அதை இழுத்துச் செல்லும். இதன் மூலம், ஓடுபாதைக்குச் சென்ற பிறகு, விமானத்தின் என்ஜின்களை இயக்கத் தொடங்கலாம். இந்த நடைமுறை காரணமாக எரிபொருள் வீணாவது குறையும்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
வடகிழக்கு பருவமழை - தொடக்கம்
- தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17-ந் தேதி தொடங்கியுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெரும்பாலும் அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும். இல்லையென்றால், அதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 4 நாட்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் தொடங்கிவிட்டது.
- இயல்பான மழைப்பொழிவு
- இந்த பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் தமிழகத்துக்கு 44 செ.மீ. மழைப்பொழிவை கொடுக்கும். அந்தவகையில் இந்த ஆண்டு இயல்பான அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் காற்றின் தரக் குறியீட-‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு சென்றது
- டெல்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதியின் வான் பகுதியில் அக்டோபர் 16-அன்று நச்சு மாசு சூழ்ந்து காணப்பட்டதால், காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவுக்கு சென்றது. இதனால் காண்புத்திறன் குறைந்தது.
- மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்று மாசு குறியீடு 2019 அக்டோபர் 16-அன்று 4 மணியளவில் 304ஆக இருந்தது என தெரிவிக்கப்பட்டது.
- சப்தா்ஜங் விமான நிலையத்தில் அக்டோபர் 16-அன்று மாலை 5.50 மணியளவில் காண்புதிறன் 1,800 மீட்டராக இருந்தது. இதற்கு காற்றில் நிலவும் அதிகமான தூசுதான் காரணம் ஆகும்.
- நிகழாண்டில் டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றுள்ளது இதுவே முதல் முறையாகும்
- பொதுவாக காற்றின் தரக் குறியீடு - சில தகவல்கள்
- பொதுவாக காற்றின் தரக் குறியீடு 0-50 என்ற அளவில் இருந்தால் காற்றின் தரம் நன்றாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
- 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி எனவும், 101-200 என்பது மிதமானது எனவும், 201-300 என்பது மோசம் எனவும், 301-400 என்பது மிகவும் மோசம் எனவும், 401-500 என்ற அளவில் இருந்தால் காற்றின் தரம் மிக மிக மோசம் என்றும் அளவிடப்படுகிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
காஞ்சிபுரம் பெருநகரில் 2 ஆயிரம் ஆண்டு பழைய கல்திட்டை கண்டுபிடிப்பு
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் ஏரியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால மனிதர்களின் ஈமச்சின்னங்களின் வகையைச் சேர்ந்த கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.
- மூன்று பெரிய கற்களை செங்குத்தாக வைத்து அதன் மீது ஒரு பெரிய தட்டையான கற்பலகை போன்ற கல்லைக் கொண்டு மூடிய நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமாகும். இது ஆறரை அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்டது. 3 கற்களை செங்குத்தாக நிறுத்தி அதன் மீது ஒரு பெரிய கல்லால் மூடிய நிலையில் காணப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு - கவுரவ டாக்டர் பட்டம்
- டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
- இந்த நிகழ்வு, அக்டோபர் 20-ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை - டெங்கு ஒழிப்பு தினம்
- தமிழ்நாட்டில் அக்டோபர் 17-ஆம் தேதி டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் ஹெலிகாப்டர் இறங்குதளம்
- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகளில் 30 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சம் செலவில் சர்வதேச தரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது.
- சாலை விபத்துகளில் சிக்குபவர்களை ஹெலிகாப்டர்களில் கொண்டுசென்று துரிதமாக சிகிச்சை அளிப்பதற்காக இந்த ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டுவருகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து
700 கோல்கள் - கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை
- போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 72-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தும் பலன் இல்லை. இது ரொனால்டோவுக்கு ஒட்டுமொத்தத்தில் 700-வது கோலாகும்.
- இந்த மைல்கல்லை எட்டிய 6-வது வீரர் என்ற சிறப்பை 34 வயதான ரொனால்டோ பெற்றார்.
- ரொனால்டோ சர்வதேச போட்டியில் மட்டும் 95 கோல்கள் அடித்துள்ளார். மற்றவை கிளப் அணிகளுக்காக அடித்தவை ஆகும்.
FIFA 2020 உலகக் கோப்பை தகுதிச் சுற்று
- இந்தியா-வங்கதேசம் - டிரா
- FIFA 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு, ஆசிய அணிகள் இடையேயான, குரூப் இ பிரிவில், இந்தியா-வங்கதேச அணிகள் இடையே நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டம், கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
பேட்மிண்டன்
பஹ்ரைன் பேட்மிண்டன் 2019 - பிரியான்ஷு ராஜாவத் சாம்பியன்
- 2019 பஹ்ரைன் சர்வதேச பேட்மிண்டன் (2019 Bahrain International Series Badminton) தொடரில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத் (Priyanshu Rajawat) வென்றுள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஈரா ஷர்மா (Ira Sharma) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் 2019
- டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி (2019 denmark open badminton) ஒடென்சி நகரில் அக்டோபர் 15-அன்று தொடங்கியது.
ஸ்குவாஷ்
தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் 2019
- இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் HCL நிறுவனம் ஆதரவுடன் தேசிய ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2019, சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் அக்டோபர் 16 முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
கிரிக்கெட்
இரட்டை சதம் அடித்த இளம் வீரா் யாஹஸ்வி ஜெய்ஸ்வால்
- விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் இளம் வீரா் என்ற சாதனையை மும்பை வீரா் யாஹஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) படைத்துள்ளார்.
- ஜெய்ஸ்வால் ஜாா்க்கண்டு அணிக்கு எதிரான முதல்தர ஏ வகை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா்.
முக்கிய தினங்கள்
World Food Day 2019 - 16 October
அக்டோபர் 16 - உலக உணவு தினம்
- ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் தேதி, எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என உலக உணவு தினம் (World Food Day 16 October 2019) கொண்டாடப்படுகிறது.
- அக்டோபர் 16 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு கடந்த நவம்பர் 1979 ஆம் ஆண்டு
- நடைபெற்ற ஐநாவின் 20வது பொது மாநாட்டில் உலக உணவு தினமாக (World Food Day) பிரகடனப்படுத்தப்பட்டது.
World Food Day 2019 Theme
உலக உணவு தின மையக்கருத்து 2019:
- 'நமது செயல்பாடு நமது எதிர்காலம்: 2030க்குள் பட்டினி இல்லாத உலகம் சாத்தியம்' (OUR ACTIONS ARE OUR FUTURE.HEALTHY DIETS FOR A #ZEROHUNGER WORLD) என்பது இந்தாண்டு மையக்கருத்து.
- பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
International Day for the Eradication of Poverty 2019
அக்டோபர் 17 - சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
- தீவிர வறுமையை சமாளிப்பதற்காகவும்மற்றும் வறுமையை ஒழிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையால் அக்டோபர் 17 அன்று (International Day for the Eradication of Poverty 17 October) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
International Day for the Eradication of Poverty 17 October 2019 |
2019 International Day for the Eradication of Poverty Theme
- 2019 International Day for the Eradication of Poverty Theme: வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு குழந்தைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றாகச் செயல்படுவது (Acting Together to Empower Children, their Families and Communities to End Poverty) என்பதாகும்.