TNPSC Current Affairs October 15, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 15, 2019
TNPSC Current Affairs October 15, 2019
TNPSC Current Affairs October 15, 2019
தேசிய நிகழ்வுகள்
நெதர்லாந்து மன்னர் - பிரதமர் மோடி சந்திப்பு 
  • நெதர்லாந்து மன்னர் வில்லம்-அலெக்சாண்டரும், ராணி மேக்சிமாவும் 6 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். 
  • அக்டோபர் 14-அன்று டெல்லியில் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். 
  • இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
  • மகாராஷ்டிரம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் நெதர்லாந்து மன்னரும், ராணியும் செல்கின்றனர். 
  • Netherlands King Willem-Alexander, Queen Maxima five-day visit.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-அமெரிக்கா கூட்டு இராணுவப் பயிற்சி 'வஜ்ரா பிரஹார்-2019'
  • இந்தியா-அமெரிக்கா நாடுகள் இடையிலான, 2019 வஜ்ரா பிரஹார் (Vajra Prahar 2019) கூட்டு இராணுவப் பயிற்சி, அமெரிக்காவில் நடைபெறுகிறது.
  • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான “வஜ்ரா பிரஹார்” இன் 10 வது பதிப்பு சியாட்டிலிலுள்ள (Seattle) லூயிஸ்-மெக்கார்ட் (JBLM) கூட்டுத் தளத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 28 வரை நடக்கிறது.
Vajra Prahar 2019 2020
  • வஜ்ரா பிரஹார் பயிற்சி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படும் சிறப்புப் படைகளின் கூட்டுப் பயிற்சி ஆகும்.
 முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் 
  • பெங்களூருவை மையமாகக் கொண்ட SSS டிஃபன்ஸ் நிறுவனம் (SSS Defence) முதன்முறையாக, 7.62x51 எம்எம் மற்றும் .338 லாபுவா மேக்னம் (7.62x51 mm and .338 Lapua Magnum platforms) ஆகிய இருவகையான துப்பாக்கிகளை தயாரித்துள்ளது. 
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கி 
    • இதன்மூலம் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கி (India'sIndia's First Indigenous Sniper Rifles) எனும் சிறப்பை பெருகிறது.
நியமனங்கள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) தலைவராக 'சவுரவ் கங்குலி' தேர்வு
    BCCI president
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) தலைவராக (BCCI president) முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) போட்டியின்றி தேர்வானார். 
  • மற்ற பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:
    • செயலாளர் - ஜெய்ஷா (மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன்)
    • பொருளாளர் - அருண்சிங் துமால் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் சகோதரர்)
    • இணைசெயலாளர் - ஜெயேஷ் ஜார்ஜ் 
    • IPL சேர்மன் - பிரிஜேஷ் பட்டேல்.
முதல் பார்வையற்ற பெண் IAS அதிகாரி 'பிராஞ்ஜல் பாட்டீல்' - பதவியேற்பு 
  • நாட்டின் முதல் பார்வையற்ற பெண் IAS அதிகாரியான பிராஞ்ஜல் பாட்டீல் (வயது 30) , கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் சார் ஆட்சியராக அக்டோபர் 14-அன்று பதவியேற்றார்.
Pranjal Patil
  • மகாராஷ்டிர மாநிலம், உல்லாஸ்நகரைச் சேர்ந்த பிராஞ்ஜல் பாட்டீல் (Pranjal Patil), 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வை மீண்டும் எழுதி, தரவரிசையில் 124-ஆவது இடத்தைப் பிடித்து அவர் வெற்றி பெற்றார். அதையடுத்து IAS பதவியைத் தேர்ந்தெடுத்த அவர், பயிற்சிக் காலத்தில் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக பணிபுரிந்தார். 
  • First visually challenged woman IAS officer Pranjal Patil
  • பயிற்சிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, திருவனந்தபுரத்தின் சார் ஆட்சியராக பதவியேற்றார்.
மாநாடு/விழா
பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் 2019
  • 2019 பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் (2019 BRICS Culture Ministers’ meet) அக்டோபர் 13-அன்று பிரேசிலின் குரிடிபா (Curitiba, Brazil) நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலத் சிங் படேல் பங்கேற்றார்.
 இராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ்-தேசிய கலாச்சார விழா 2019
  • மத்திய பிரதேசத்தில், ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ்-தேசிய கலாச்சார விழா (10th National Cultural Festival), இராஜஸ்தான் மாநிலத்தில், அக்டோபர் 14 முதல் 21 வரை நடைபெறுகிறது.
  • இராஜஸ்தானின் ஜபல்பூர், சாகர் மற்றும் ரேவா ஆகிய நகரங்களில் 'ஏக் பாரத் (Ek Bharat), ஸ்ரேஷ்ட பாரத் (Shreshtha Bharat) என்ற  பிரச்சாரத்தின் கீழ் மத்திய கலாச்சார அமைச்சகத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த விழாவில் 22 மாநிலங்களின் நாட்டுப்புற, கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் காண்பிக்கப்படுகின்றன.
விருதுகள் 
பொருளாதார நோபல் பரிசு 2019 
  • 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ((Economic Sciences in Memory of Alfred Nobel 2019), இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கணவர்-மனைவியாவர். பரிசு பெறுவோர் விவரம்:
  1. அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee)
  2. எஸ்தர் டஃப்லோ (Esther Duflo)
  3. மைக்கேல் கிரெமர் (Michael Kremer) 
Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2019

பொருளாதார நோபல் பரிசுக்கான காரணம் 
  • சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்களது பொருளாதார ஆய்வு சிறப்பாக உதவியதை கெளரவித்து நோபல் பரிசுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மூவரின் பொருளாதார ஆய்வுகளைப் பின்பற்றும் நாடுகள் வறுமை ஒழிப்பில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. 
வறுமை ஒழிப்பு சார்ந்த பொருளாதார ஆய்விற்குநோபல் பரிசு
  • சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் அடிப்படையில் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டாலே, ஒரு நாடு முன்னேற்றப் பாதைக்குத் திரும்பிவிடும். எனவே, வறுமை ஒழிப்பு சார்ந்த பொருளாதார ஆய்வில் முக்கியப் பங்காற்றிய மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர்களின் பொருளாதார ஆய்வு முறை மூலம் இந்தியாவில் சுமார் 50 லட்சம் சிறார்கள் பள்ளிக் கல்வி பெற்றுள்ளனர். இது நேரடியாக கிடைத்த பலனாகும். இது தவிர சுகாதாரத் துறையிலும் 
  • இவர்களின் பொருளாதாரத் திட்டங்கள் பயனளித்துள்ளன. முக்கியமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய்களைத் தடுப்பதற்கான மானியத் திட்டம் தொடர்பான ஆய்வு பல நாடுகளில் சிறப்பான பலனை அளித்துள்ளது.
பரிசுத்தொகை
  • இந்த நோபல் பரிசுடன் 9,18,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6.53 கோடி), தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் அடங்கும். பரிசுத் தொகை மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee) 
  • அபிஜித் பானர்ஜி, 21 பிப்ரவரி 1961, மும்பையில் பிறந்தவர்.
  • நிறுவனம்: மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), கேம்பிரிட்ஜ், அமெரிக்கா ( Massachusetts Institute of Technology (MIT), Cambridge, MA, USA)
  • பரிசுக்கான காரணம்: "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்கு (for their experimental approach to alleviating global poverty).
  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர், அபிஜித் பானர்ஜி (வயது 58), கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்த அபிஜித், பின்னர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 
  • பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், 1988-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். வளர்ச்சிப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவரான பானர்ஜி, தற்போது மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.
  • அபிஜித் பானர்ஜி, 2003-ஆம் ஆண்டில் அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையத்தை உருவாக்கினார். இதில் பானர்ஜியின் மனைவி எஸ்தர், தமிழகத்தைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார நிபுணருமான செந்தில் முல்லைநாதன் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். 
  • ஐ.நா. பொதுச் செயலருக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் அபிஜித் பானர்ஜி இடம்பெற்றுள்ளார்.
எஸ்தர் டஃப்லோ (Esther Duflo)
  • நிறுவனம்: மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), கேம்பிரிட்ஜ், அமெரிக்கா (Massachusetts Institute of Technology (MIT), Cambridge, MA, USA)
  • பரிசுக்கான காரணம்: "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்கு (for their experimental approach to alleviating global poverty).
  • இளம் வயதில் பொருளாதார நோபல் - எஸ்தர் டஃப்லோ
    • இதில் அபிஜித் - எஸ்தர் தம்பதி அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (MIT பணியாற்றி வருகின்றனர். கிரெமர் (54), ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். 
    • எஸ்தர் டஃப்லோ, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண். மேலும், மிக இளம் வயதில் (வயது 46) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
    • எஸ்தர் 1972-ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்தவர். வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர், அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பல்வேறு நிலைகளில் மாசசூசெட்ஸ் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
    • வறுமை ஒழிப்பு, ஏழ்மையை அகற்றுவது தொடர்பாக பல ஆய்வுகளை நடத்தியுள்ளார். வறுமை ஒழிப்பு தொடர்பான இவரது புத்தகம் 17 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 
    • சர்வதேச அளவில் பொருளாதாரம் சார்ந்த பல விருதுகளையும் வென்றுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
மைக்கேல் கிரெமர் 
  • நிறுவனம்: ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா (Harvard University, Cambridge, MA, USA)
  • பரிசுக்கான காரணம்: "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்கு. (for their experimental approach to alleviating global poverty).
  • மைக்கேல் கிரெமரின் வளர்ச்சிக் கோட்பாடு
    • மைக்கேல் கிரெமர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமுக அறிவியலில் பட்டப்படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் முனைவரானார். வளர்ச்சி மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருளாதார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ள அவர், இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். 
    • 1993-இல் அவர் வெளியிட்ட "கிரெமரின் ஒ-ரிங் பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடு' மிகவும் பிரபலமானதாகும். சர்வதேச அளவில் சமுக-பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வுகளை அளித்துள்ளார்.
நோபல் பரிசை வென்றுள்ள தம்பதியர் (1903-2019)
  • 1903-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நோபல் பரிசை வென்றுள்ள தம்பதியர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவற்றின் விவரம்:
  • 2019-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியர் உட்பட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமர் ஆகியோருக்கு 2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃப்லோவும் கணவன் - மனைவியாவர். ஒரே துறையில் தம்பதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அபிஜித் பானர்ஜி, பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோவுக்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 
தம்பதியர்: மேரி கியூரி & பியூரி கியூரி
  • வருடம்: 1903
  • துறை: இயற்பியல்
தம்பதியர்:பிரடெரிக் ஜோலியோட் & ஐரீன் கியூரி 
  • வருடம்: 1935
  • துறை: வேதியியல்
தம்பதியர்: கெர்ட்டி கோரி & கார்ல் கோரி
  • வருடம்: 1947
  • துறை: மருத்துவம்
கணவர்: குன்னார் மிர்தால் 
  • வருடம்: 1974
  • துறை: பொருளாதாரம்
  • வருடம்: 1982
  • மனைவி: ஆல்வா மிர்தால் 
  • துறை: சமாதானம்
தம்பதியர்: மே பிரிட் & எட்வர்ட் மோஸர் 
  • வருடம்: 2014
  • துறை: மருத்துவம்
தம்பதியர்: அபிஜித் பானர்ஜி & எஸ்தர் டஃப்லோ
  • வருடம்: 2019
  • துறை: பொருளாதாரம்.
2018-19 தேசிய கிஷோர் குமார் சம்மான் விருது - இயக்குனர் பிரியதர்ஷன்
  • புகழ்பெற்ற பாடகரும் நடிகருமான கிஷோர் குமாரின் (Kishore Kumar) பிறப்பிடமான காண்ட்வாவில் நடைபெற்ற விழாவில் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனுக்கு, 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் தேசிய கிஷோர் குமார் சம்மான் விருது (National Kishore Kumar Samman for 2018-19) வழங்கப்பட்டது.
டான் விருது 2019 - ஆஷ்லீ பார்டி
  • ஆஸ்திரேலியா நாட்டின்  2019-ஆம் டான் விருது (The Don award) ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லீ பார்டி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • டான் விருது ஆஸ்திரேலியா நாட்டின் விளையாட்டுக்கான அதிகபட்ச தனிநபர் மரியாதை ஆகும்.
  • ஆஸ்திரேலியா வருடாந்திர விளையாட்டு  ஹால் ஆஃப் ஃபேம் விருது ‘தி டான்’ விருதை, ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லீ பார்டி (Ashleigh Barty), வென்றுள்ளார்.
ashleigh barty don award 2019
  • ஆஷ்லீ பார்டி, தற்போது  ஆஸ்திரேலியாவின் சிறந்த விளையாட்டு வீரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
  • ஆஷ்லீ பார்டி, 2019 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • தற்போது உலகின் பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
 பொருளாதார நிகழ்வுகள் 
ரூ.2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்
  • 2016-ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. 
  • அதைத்தொடர்ந்து ரூ.2,000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
  • ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் (2019-2020) இதுவரை ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும், ஊழலை தடுப்பதற்காகவும் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தெற்காசிய பொருளாதாரம் பற்றிய 'உலக வங்கி' அறிக்கை    
  • ‘தெற்காசியா பொருளாதார கவனம், மையப்படுத்தல் பணிகளை உருவாக்குதல்’ South Asia Economic Focus, Making (De) Centralization Work) உலக வங்கி சமீபத்தில் தனது அறிக்கையை வெளியிட்டது 
  • அறிக்கையின்படி, பூட்டானுக்குப் பிறகு தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் 2 வது பொருளாதாரமாக பங்களாதேஷ் மாறியுள்ளது.
  • பங்களாதேஷின் பொருளாதாரம் 7% க்கு மேல் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பணப்புழக்கத்தை அதிகரிக்க - ரூ.81,781 கோடி வங்கி கடன்
  • பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கிகள் மூலம் கடந்த அக்டோபர் 1-முதல், 9 நாட்களில் ரூ.81,781 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
ஜப்பானில் வீசிய "ஹகிபிஸ்' புயல் 
  • ஜப்பானில் வீசிய "ஹகிபிஸ்' புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. "ஹகிபிஸ்' புயல் அக்டோபர் 12-அன்று இரவு கரையைக் கடந்தது. 
  • நாட்டின் 47 மாகாணங்களில் 36 இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தப் புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அக்டோபர் 14, நிலவரப்படி 43-ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு 
  • சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வந்த ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி அக்டோபர் 13-ஆம் தேதி அன்றுடன் நிறைவு பெற்றது. ஐந்தாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது
  • ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில். 2020 ஜனவரியில் தொடங்க உள்ளது. 
  • கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை 3 கட்ட அகழாய்வுகளை மேற்கொண்டது. தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. 
  • இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றது. 
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 4 ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இதன் மூலம் கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் தொன்மையானது என்பது தெரியவந்தது. 
விளையாட்டு நிகழ்வுகள் 
கிரிக்கெட்
சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC-Super Over New Rules) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. 
  • இனிமேல் சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. அதாவது ICC 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி 
  • மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். 
  • போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ICC அறிவித்துள்ளது.
  • இங்கிலாந்தில் கடந்த மே மற்றும் ஜூலை மாதம் நடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு 
  • அணிகளும் தலா 241 ரன்கள் சேர்த்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. 
  • இதனை அடுத்து இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் (பெண்கள்) - இந்தியா கைப்பற்றியது 
  • இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 
  • மரிஜானே காப்
  • தென்ஆப்பிரிக்க வீராங்கனை மரிஜானே காப் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.
கால்பந்து
உலக கோப்பை தகுதி சுற்று போட்டி (கொல்கத்தா)
  • 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது.
  • உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் அக்டோபர் 15-அன்று நடைபெறுகிறது.
இந்தியாவின் முதன்மை கால்பந்து போட்டியாக இந்தியன் சூப்பர் (ISL) தோ்வு
  • இந்தியாவின் முதல்நிலை கால்பந்து போட்டியாக ஐ-லீக் போட்டிக்கு பதிலாக இந்தியன் சூப்பர் லீக் (ISL) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐ லீக் போட்டி: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) சார்பில் முன்னணி கிளப் அணிகளைக் கொண்டு ஹீரோ ஐ லீக் போட்டி கடந்த 2007-இல் தொடங்கப்பட்டது. 
  • இந்தியன்சூப்பர் லீக்: இந்நிலையில் கால்பந்துக்கு மேலும் உத்வேகம் தரும் வகையில் ஐபிஎல் போன்று அணிகளை உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி நடத்த ஏதுவாக இந்தியன் சூப்பர் லீக் போட்டி 2013-இல் தொடங்கப்பட்டது. 
International Day of Rural Women 2019முக்கிய தினங்கள் 
அக்டோபர் 15 - சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (International Day of Rural Women 2019) 
  • 2019 சர்வதேச கிராமப்புற பெண்கள் தின மையக்கருத்து (Theme):
    • 'வளர்ச்சிக்கு கிராமப்புற பெண்களின் மதிப்புமிக்க பங்களிப்பு' (The Invaluable Contribution of Rural Women to Development).
அக்டோபர் 15 - முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள்.
Post a Comment (0)
Previous Post Next Post