TNPSC Current Affairs October 14, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 14, 2019
TNPSC Current Affairs October 2019
TNPSC Current Affairs October 14, 2019
சர்வதேச நிகழ்வுகள்
இமயமலை உயரத்தை மறு அளவு - நேபாளம்-சீனா முடிவு
  • இமயமலை உயரத்தை மறு அளவை செய்ய நேபாளம் மற்றும் சீனா நாடுகள் முடிவு செய்துள்ளன.
  • இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங், நேபாளம் செப்டம்பர் 12-அன்று சென்றார். 
  • இதுதொடர்பாக இரு நாடுகள் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை விவரம்;
    • இமயமலை உலகப் பிரசித்தி பெற்றது. இதில் நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா (Sagarmatha) சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுவதாகும். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இமயமலையை பாதுகாக்கும் விதமாக நேபாளம் மற்றும் சீனா இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. 
    • சகர்மதா மற்றும் ஸூமுலங்மா ஆகிய சிகரங்களில் அறிவியல் ரீதியிலான தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 
    • நேபாளம், சீனா இடையிலான இமயமலைப் பரப்பளவின் எல்லைப் பகுதி சுருங்கியுள்ளது. 
    • நேபாள அரசு சார்பில் இமயமலையின் சிகரத்தை அளவிட ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
    • நேபாளம் மற்றும் சீனா இணைந்து நடத்தும் இந்த மறு அளவை முடிவின் அடிப்படையில் (Nepal and China agreed to announce the re-measured height of Mount Everest) இமயமலை சிகரத்தின் அளவு அடுத்த ஆண்டுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இமயமலையின் சிகரம் - 8,848 அடி
    • 1954-ஆம் ஆண்டு இமயமலையின் சிகரம் 8,848 அடி என இந்தியவால் அளவிடப்பட்டதே தற்போது வரை அதிகாரப்பூர்வ அளவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
    • 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வுக்குப் பின் இமயமலையின் அளவு குறைந்துவிட்டதாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 ‘புனிதா்’ மரியம் திரேசியா - தகவல் தொகுப்பு
கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு ‘புனிதா்’ பட்டம் 
  • வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டா் சதுக்கத்தில், கேரளத்தைச் சோ்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு, ‘புனிதா்’ பட்டத்தை போப் பிரான்சிஸ் (Declared Saint By Pope Francis) அக்டோபர் 13-ஆம் தேதி வழங்கினாா்.
  • இந்நிகழ்ச்சியில், இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளிதரன் தலைமையிலான குழு பங்கேற்றது. மொத்தம் 5-பேருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
Mariam Thresia as Saint, Declared Saint By Pope Francis
Declared Saint By Pope Francis
‘புனிதா்’ பட்டம் வழங்கப்பட்டவர்கள் விவரம்:
  1. கன்னியாஸ்திரி மரியம் திரேசியா (இந்தியா),
  2. காா்டினல் ஜான் ஹென்றி நியூமேன் (பிரிட்டன்),
  3. மாா்கரெட் பேஸ் (ஸ்விட்சா்லாந்து),
  4. கன்னியாஸ்திரி டல்சி லோபஸ் (பிரேசில்),
  5. கன்னியாஸ்திரி கியூசிபினா வானினி (இத்தாலி). 
‘புனிதா்’ பட்டதிற்கான காரணம் 
  • மனித சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தன் வாழ்வை அா்ப்பணித்தமைக்காக, கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு ‘புனிதா்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாஸ்திரி மரியம் திரேசியா (1876-1926)
  • கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் கடந்த 1876-ஆம் ஆண்டு பிறந்த மரியம் திரேசியா (Mariam Thresia Chiramel), சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். ‘சிஸ்டா்ஸ் ஆஃப் தி ஹோலி ஃபேமிலி’ (புனிதக் குடும்பத்தின் சகோதரிகள்) என்ற பெயரில் குழு ஒன்றை 1914-ஆம் ஆண்டு தொடங்கிய இவா், ஏழை, எளியவா்களுக்கு சேவை செய்யும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டாா். 
  • 1926-ஆம் ஆண்டில் தனது 50-ஆவது வயதில் மரியம் திரேசியா இறைவனடி சோ்ந்தாா். தற்போது அவருக்கு புனிதா் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நான்காவது புனிதா் (Fourth Indian Declared as Saint by the Vatican)
  • கேரளத்தில் பழைமை வாய்ந்த சிரோ-மலபாா் திருச்சபையில் 4-ஆவது புனிதராக மரியம் திரேசியா உயா்ந்துள்ளாா். ஏற்கெனவே, கன்னியாஸ்திரி அல்போன்சா (2008), பாதிரியாா் குரியகோஸ் எலியாஸ் சாவரா (2014), கன்னியாஸ்திரி யூப்ரேசியா (2014) ஆகியோா் புனிதா்களாக அறிவிக்கப்பட்டிருந்தனா்.
இந்திய நிகழ்வுகள் 
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க 'கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம்'
  • பெண்களுக்கு அதிகாரம் அளிக்க கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம் (Kanyashree University) அமைக்க மேற்கு வங்க  மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • மேற்கு வங்கம் நதியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணநகரில் கன்யாஸ்ரீ பல்கலைக்கழகமும் (Kanyashree University) மற்றும் மாநிலம் முழுவதும் கன்யாஸ்ரீ கல்லூரிகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி 
இந்தியா-ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சி ‘தர்மா கார்டியன் -2019’ 
  • இந்தியாவிற்கும் ஜப்பான் நாட்டிற்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது கூட்டு இராணுவப் பயிற்சி  ‘தர்மா கார்டியன் -2019’ (DHARMA GUARDIAN-2019), அக்டோபர் 19 முதல் 2019 நவம்பர் 2 வரை மிசோரம் மாநிலத்தில் நடைபெறுகிறது.
DHARMA GUARDIAN-2019
Dharma Guardian-2019
  • இருவார கால பயிற்சியின் நோக்கம், இரு நாடுகளுக்கிடையேயான இயங்குதளத்தை அதிகரிப்பது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகும்.
  • மேலும் இந்த பயிற்சி, காட்டில் மற்றும் நகர்ப்புற சூழ்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த படைப்பிரிவு அளவிலான கூட்டுப் பயிற்சியை உள்ளடக்கியது.
மாநாடு/விழா 
சாராஸ் மேளா 2019 - புதுதில்லியில் தொடக்கம் 
  • மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் புதுதில்லியில், 2019 சாராஸ் மேளாவை  (SARAS Ajeevika Mela) ஏற்பாடு செய்துள்ளது. இந்த மேளா அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை நடைபெறுகிறது.  
SARAS Ajeevika Mela 2019
SARAS Ajeevika Mela 2019
  • இந்த சாராஸ் மேளாவின் நோக்கம், தீண்டயல் அந்தோடயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கிராமப்புற பெண்கள் சுய உதவிக்குழுக்களை(SHGs) ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களின் திறன்களைக் காண்பிப்பதற்கும், அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கும் உதவுவதற்கும் ஆகும். 
  • DAY-NRLM: Deendayal Antyodaya Yojana-National Rural Livelihoods Mission.
விருதுகள் 
இந்திய விளையாட்டு மரியாதை 2019
  • இரண்டாவது இந்திய விளையாட்டு மரியாதை (Indian Sports Honours-ISH) விருதுகள் மும்பையில் வழங்கப்பட்டது.
  • ஆர்.பி-எஸ்.ஜி (RP-SG Group) குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா (Sanjiv Goenka) மற்றும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான விராட் கோலியின் முன்முயற்சியில் இந்த விளையாட்டு மரியாதைகள் இரண்டாவது ஆண்டாக வழங்கப்படுகின்றன. 
Indian Sports Honours-ISH 2019
Indian Sports Honours-ISH
  • ISH வாழ்நாள் சாதனையாளர் விருது 2019 -  'மில்கா சிங்' (Milkha Singh) 
    • வாழ்நாள் சாதனையாளர் விருது  ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்படும் 'மில்கா சிங்' (வயது 92) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்/வீராங்கனை விருது - ஸ்மிருதி மந்தனா
    • பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்/வீராங்கனை விருதைப் பெற்றார்.
  • ஆண்டின் சிறந்த அணி (Team of the Year) 
    • இந்திய கிரிக்கெட்டின் ஆண்கள் அணிக்கு (Indian Cricket’s men team) வழங்கப்பபட்டது 
சுற்றுச்சூழல் விருதுகள்
பாங்கியோ பூஜியா என்ற சிறிய வகை மீன் இனம் கண்டுபிடிப்பு 
  • பாங்கியோ பூஜியா (Pangio bhujia), என்ற சிறிய வகை மீன் இனத்தை, கோழிக்கோட்டை சேர்ந்த கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் குழு கண்டறிந்துள்ளது.
  • பாங்கியோ பூஜியா சுமார் 3 செ.மீ. நீளமும் இளஞ்சிவப்பு-சிவப்பு நிறமும் கொண்டது, மேலும் ஆழமான நிலத்தடி நீர்நிலைகளின் தூய்மையான நீரில் வாழ்கிறது.
Pangio bhujia
Pangio bhujia
  • இது உலகின் முதல் வகை ஈல்-லோச் (eel-loach) ஆகும், ஈல்-லோச்ச்கள் பொதுவாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேகமாக ஓடும் நீரோடைகளில் காணப்படுகின்றன.
புத்தக வெளியீடு
How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need - Bill Gates
    How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need
  • “ஒரு காலநிலை பேரழிவை எவ்வாறு தவிர்ப்பது: எங்களிடம் உள்ள தீர்வுகள் மற்றும் நமக்குத் தேவையான முன்னேற்றங்கள்”  (How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need) என்ற தலைப்பிலான புத்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் அமெரிக்க 'பில் கேட்ஸ்' எழுதியுள்ளார். 
  • ஜூன் 24, 2020 அன்று இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.
பொருளாதார நிகழ்வுகள் 
இந்தியப் பொருளாதார வளா்ச்சிமதிப்பீடு 6 % - உலக வங்கி கணிப்பு 
world bank on indian growth
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2019-20-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. (World Bank on India's growth).
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2017-18-இல் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாகவும், 2018-19-இல் 6.8 சதவீதமாக இருந்தது. 
  • சா்வதேச செலாவணி நிதியத்துடன் (IMF) உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தை (Annual Meetings 2019 World Bank Group) விரைவில் நடத்தவுள்ளது. இதனையொட்டி தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை உலக வங்கி (World Bank) வெளியிட்டுள்ளது. அதன்விவரம்:
  • தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில், 
  • 2021-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாகவும், 
  • 2022-ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
குத்துச்சண்டை
பெண்கள் உலக குத்துச்சண்டை 2019 - மஞ்சு ராணி வெள்ளிப்பதக்கம்
  • 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி (2019 AIBA Women's World Boxing Championships) 
  •  ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்தது. 
  • இதில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • இந்தியா - 4 பதக்கங்கள் 
    • இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 4 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 3 வெண்கலம்) ஒன்பதாவது இடத்தை பிடித்தது. 
  • ரஷ்யா 3 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 6 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 
2019 AIBA Women's World Boxing Championships madal tally india
2019 AIBA Women's World Boxing Championships-India
தடகளம்
தேசிய ஓபன் தடகளம் - டுட்டீ சந்த் - தங்கப்பதக்கம்
  • 59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ராஞ்சியில் நடந்தது. பதக்கம் வென்ற வீரர்/வீராங்கனை விவரம்:
  • 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டுட்டீ சந்த் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • 200 மீட்டர் ஓட்டம் (பெண்கள்) 
    • டுட்டீ சந்த் - தங்கப்பதக்கம் (23.17 வினாடிகள்)
பேட்மிண்டன்
நெதர்லாந்து பேட்மிண்டன் 2019 - 'லக்‌ஷயா சென்' சாம்பியன்
    2019 Dutch Open
  • நெதர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி (2019 Dutch Open) அல்மேரே நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இந்தியாவின் வளரும் நட்சத்திரமான 18 வயதான லக்‌ஷயா சென், பேட்மிண்டன் உலக டூர் வகை பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
கிரிக்கெட் 
இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் 2019  
  • 2-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி 
    • இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடந்தது. இதில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி (2-0) 
    • இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய அணி 
    • இந்தியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது.
  • உலக சாம்பியன்ஷிப்
    • இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கியதாகும். இந்த வெற்றிக்கு கிடைத்த 40 புள்ளிகளோடு இந்தியா இதுவரை 200 புள்ளிகள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
கோலியின் தலைமையில் 30-வது வெற்றி
  • விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி 50-வது டெஸ்டில் பங்கேற்று அதில் பெற்ற 30-வது வெற்றி இதுவாகும். 
  • கேப்டனாக முதல் 50 டெஸ்ட் போட்டிகளில், அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் வரிசை: 
    1. ஸ்டீவ் வாக் (37 வெற்றி)
    2. ரிக்கிபாண்டிங் (35 வெற்றி)
    3. விராட் கோலி (30 வெற்றி)
  • கோலியின் கேப்டன்ஷிப்பில் உள்நாட்டில் இந்தியா 17 வெற்றிகளும் (23 டெஸ்ட்), வெளிநாட்டில் 13 வெற்றிகளும் (27 டெஸ்ட்) பெற்றுள்ளன.
CPL கிரிக்கெட் 2019 - பார்படோஸ் அணி ‘சாம்பியன்’
  • வெஸ்ட் இண்டீசில் நடந்த 7-வது கரிபீயன் பிரிமீயர் லீக் (Caribbean Premier League) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஜாசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி (Trinbago Knight Riders), கோப்பையை வென்றது.
டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 2019 - மெட்விடேவ் சாம்பியன் 
    Daniil Medvedev
  • சீனாவில் நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் (shanghai masters 2019) போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் (DaniilMedvedev) சாம்பியன் பட்டம் வென்றார்.
  • உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் 23 வயதான மெட்விடேவுக்கு இந்த வெற்றியின் மூலம் ரூ.9¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. இந்த ஆண்டில் அவர் வென்ற 4-வது பட்டம் இதுவாகும்.
ஜிம்னாஸ்டிக்ஸ்
உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் 25 பதக்கங்கள் - சிமோன் பைல்ஸ்  சாதனை 
  • உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்தது. அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் இந்த தொடரில் ஐந்து தங்கபக்கங்களை வென்றார். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இவர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக்ஸ் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
  • இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றவர்.
Post a Comment (0)
Previous Post Next Post