TNPSC Current Affairs October 12-13, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 12-13, 2019
TNPSC Current Affairs October 2019
TNPSC Current Affairs October 12-13, 2019
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியா-சீனா முறைசாரா உச்சி மாநாடு 2019
  • இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, சென்னை
    • பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பங்கேற்ற தமிழ்நாட்டின் பண்டைய கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-12 தேதிகளில் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு (2nd India-China Informal Summit 2019) நடைபெற்றது.
    • இந்தியா, சீனா இடையே இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு சென்னை அருகே கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் அக்டோபர் 12-அன்று நடைபெற்றது.
    • இம்மாநாட்டில், பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சீன தரப்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 
    • இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, சுற்றுலா மேம்பாடு, விற்பனை சந்தையை விரிவுபடுத்துவது, தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடுகளை ஈர்ப்பது போன்றவை குறித்த ஆலோசனை நடைபெற்றது.
      India-China Informal Summit 2019
  • சீனாவுக்கு அழைப்பு
    • பேச்சுவார்த்தையின் போது இதுபோன்ற முறைசாரா மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு வருமாறு மோடிக்கு ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.
  • வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே
    • இந்த பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்த விவரங்கள்:
  • உயர்மட்ட குழு அமைக்க முடிவு 
    • இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை பற்றி பேசி தீர்வு காண்பதற்காகவும், முதலீடு, நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காகவும் சீன தரப்பில் அந்த நாட்டின் துணை அதிபர் ஹூ சுன் ஹுவாவையும், இந்திய தரப்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் கொண்ட உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. 
    • வர்த்தக பற்றாக்குறைகள் பற்றிய பேச்சுவார்த்தையை இந்த குழு நடத்தும். இது வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் சாதகமான முயற்சியாக அமைந்துள்ளது.
  • சென்னையில் சீன தூதரகம்
    • சென்னையில் சீன தூதரகத்தை தொடங்க அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இரு நாடுகளும் விரும்பும்போது அது அமைக்கப்படும். இந்த விஷயம் பற்றி தற்போது விவாதிக்கப்படவில்லை.
    • இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடிதான். சீனா-தமிழகம் இடையே கலாசார, வர்த்தக உறவு இருப்பதே இதற்கான அடிப்படையாகும்.
  • தமிழ்நாடு-சீனா கலாசார தொடர்புகள் குறித்து ஆராய தனி அகாடமி
    • தமிழகத்துக்கும், சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயான கலாசார தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்ய தனி அகாடமி அமைக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
  • ராஜாங்க உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு 
    • இந்தியா-சீனா இடையேயான ராஜாங்க உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 70 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 35 நிகழ்ச்சிகள் இந்தியாவிலும், 35 நிகழ்ச்சிகள் சீனாவிலும் நடத்தப்படும் என்றும், குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சி என்ற முறையில் இரு நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலாவது முறைசாரா உச்சி மாநாடு, வுஹான், சீனா (2018)
    • இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையே, 2018 ஏப்ரல் 27, 28, தேதிகளில் வுஹானில் நடைபெற்ற (India China Informal Summit 2018) முதல் முறைசாரா உச்சி மாநாட்டில் மோடியும் ஜீ ஜின்பிங்கும் சந்தித்தனர். 
    • இந்த சந்திப்பு இருதரப்பு மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கான அவரவர் பார்வைகளையும் முன்னுரிமைகளையும் விரிவாகக் கூறவும் தற்போதைய மற்றும் எதிர்கால சர்வதேச சூழல் குறித்து பரிமாறிக்கொள்வதற்கும் நடந்தது.
  • முறைசாரா உச்சி மாநாடுகள் - சில தகவல்கள் 
    • முறைசாரா உச்சி மாநாடுகள் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கும், ஜி 20 உச்சிமாநாடு, ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா உச்சிமாநாடு மற்றும் பிரிக்ஸ் உச்சிமாநாடு போன்ற பிற முறையான பரிமாற்றங்களுக்கும் துணை பரிமாற்றங்களாக செயல்படுகின்றன.
    • முறைசாரா உச்சி மாநாடுகள் ஒரு நிலையான வருடாந்திர அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என்ற கால அட்டவணையில் நடைபெறாது; சம்பந்தப்பட்ட நாடுகளால் அவர்களுக்கு ஒரு தேவை உணரப்படும்போது அவை நடைபெறுகின்றன
கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம்
  • கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது.
  • இறைப்பணி ஆற்றிய கன்னியாஸ்திரி மரியம் திரேசியா கடந்த 1926-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு 2000-ம் ஆண்டு முக்திபேறு பெற்றவர் என்ற பட்டம் அப்போதைய போப் 2-ம் ஜான் பாலால் வழங்கப்பட்டது.
  • இந்தியாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா அவர்களுக்கு வாடிகனில் அக்டோபர் 13-அன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தலைமையில் சிறப்புக்குழு பங்கேற்கிறது. 
UK ஏசியன்ஸ்’ இங்கிலாந்தின் செல்வாக்குள்ள நபா்கள் பட்டியல்
  • ‘UK ஏசியன்ஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தின் செல்வாக்குள்ள நபா்களின் பட்டியல் செப்டம்பர் 10-அன்று வெளியிடப்பட்டது. 
  • தொடா்ந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் நிதி அமைச்சா் சஜித் ஜாவித் முதலிடத்திலும், பிரிட்டன்  உள்துறை அமைச்சராக உள்ள இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.
தேசிய நிகழ்வுகள்
பிரதமரின் புதுமையான கற்றல் திட்டம் 'DHRUV'
  • 'DHRUV' என்ற பிரதமரின் புதுமையான கற்றல் திட்டத்தை மத்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • அக்டோபர் 9, அன்று, பிரதான் மந்திரி புதுமையான கற்றல் திட்டம் “DHRUV” மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்கினால் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தலைமையகத்திலிருந்து தொடங்கப்பட்டது. 
  • நாட்டில் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொண்டு வருவதற்கு, மாணவர்களின் புதுமையான கற்பனை, திறன்கள் மற்றும் அறிவை கூர்மைப்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டத்திற்கு துருவ நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது, இதில் ஒவ்வொரு மாணவரும் ‘DHRUV TARA’’ என்று அழைக்கப்படுவார்கள்.
நேஷனல் நவோதயா லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட் நிறுவனம் - தொடக்கம் 
  • நாடு முழுவதும் 5 ஜவஹர் நவோதய பள்ளிகள், 13 கேந்திரிய வித்யாலயங்கள் ஆகியவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக செப்டம்பர் 11-அன்று தொடக்கி வைத்தார். 
  • ஒடிஸாவின் புரி நகரில் தொடங்கப்பட்டுள்ள, நேஷனல் நவோதயா லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தையும் (National Navodaya Leadership Institute) தொடக்கி வைத்தார். 
  • புதிய நவோதய பள்ளிகளில், உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மற்றும் காசிராம் நகரில் தலா ஒரு பள்ளியும், குஜராத் மாநிலத்தின் நவசாரி மற்றும் தாங் பகுதிகளில் தலா ஒரு பள்ளியும், ஒடிஸாவின் மல்காங்கிரி பகுதியில் ஒரு பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது. 
  • 13 கேந்திரிய வித்யாலயங்களில், அஸ்ஸாமில் 3, குஜராத்தில் 2, மத்தியப் பிரதேசத்தில் 2, பிகார், கர்நாடகம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்றும் திறக்கப்பட்டுள்ளன. 
  • ஊரகப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் வகையில் நாட்டில் 661 ஜவாஹர் நவோதய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 
  • இருபால் மாணவர்களுக்கான பள்ளிகள், உண்டு-உறைவிடப் பள்ளிகளாகவும் செயல்பட்டுவரும் நவோதய பள்ளிகளை, நவோதய வித்யாலய சமிதி தனது 8 மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வகித்து வருகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு, அதன் விவரம் வெளியிடப்பட்டு வருகிறது.
  • 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு (2021 Census of India)  தொடங்கவுள்ளது. 
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2021-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது.
  • பனிப்பொழிவு அதிகம் காணப்படும் ஜம்மு-காஷ்மீா், இமாசலப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது.
  • வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை செல்லிடப்பேசி செயலி வழியாக, இணைய வழியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 16 மொழிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ.16,000 கோடி செலவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஔரங்கபாத்- உதய்ப்பூா் இடையே ஏா் இந்தியா விமான சேவை
  • புராதன சின்னங்கள் உள்ள மகாராஷ்டிர மாநிலம் ஔரங்கபாத்- உதய்பூா் இடையே, ஏா் இந்தியா நிறுவனம் தனது சேவையைத் அக்டோபர் 19-அன்று தொடங்க உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான "பகல்நேர பராமரிப்பு பொழுதுபோக்கு மையம்" லே-வில் திறப்பு 
  • மூத்த குடிமக்களுக்கான முதலாவது அரசு நிதியுதவியுடன் இயக்கப்படும் பகல்நேர பராமரிப்பு பொழுதுபோக்கு மையத்தை (Day Care Recreation Centre), ஜம்மு காஷ்மீரின், லே நகர்த்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி எஸ். அப்துல் நசீர் அண்மையில் திறந்து வைத்தார்.
  • லடாக் பிராந்தியத்தின் வயதான மக்களுக்கு பொழுதுபோக்கு, மருத்துவ சேவைகள் மற்றும் சட்ட உதவிகளுக்கான ஒரு மையமாக இது செயல்படும்.  
  • இது முதியோர் பராமரிப்பு, சுகாதார ஆலோசனைகள் மற்றும் சோதனைகள், பிசியோதெரபி மற்றும் மூத்த குடிமக்கள் பல்வேறு சட்ட சிக்கல்களில் தேவைப்படும் சட்ட சேவை உள்ளிட்ட மருத்துவ வசதிகளையும் வழங்கும்.  
e-Dantsevaவாய்வழி சுகாதார விழிப்புணர்வு குறித்த “இ-தாந்த் சேவா” 
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து வாய்வழி சுகாதார விழிப்புணர்வு (oral health awareness) குறித்த முதல் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டை  “இ-தாந்த் சேவா” என்ற (e-Dantseva) பெயரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. 
பாதுகாப்பு/விண்வெளி  
காற்று விண்வெளியைச் சந்திக்கும் இடத்தை ஆராயம் "ICON" செயற்கைக்கோள் 
    Icon-Ionospheric Connection Explorer
  • காற்று விண்வெளியைச் சந்திக்கும் இடத்தை ஆராய, NASA விண்வெளி நிறுவனம் ஐகான் (ICON) என்ற செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புதிய அயனோஸ்பெரிக் இணைப்பு எக்ஸ்ப்ளோரர் (Icon-Ionospheric Connection Explorer) செயற்கைக்கோள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்த அண்மையில் ஏவப்பட்டது.  
  • குளிர்சாதன பெட்டி அளவிலான ஐகான் செயற்கைக்கோள் அயனோஸ்பியரில் உள்ள வாயுக்களிலிருந்து உருவாகும் காற்றோட்டத்தைப் பற்றி ஆய்வு செய்யும், மேலும் 360 மைல் உயரமுள்ள (580 கிலோமீட்டர் உயர) விண்கலத்தைச் சுற்றி சார்ஜ் செய்யப்பட்ட சூழலையும் அளவிடுகிறது.  
ஆழ்கடல் மீனவர்களுக்கான செயற்கைக்கோள் சேவை 'ஜெமினி'
  • ஆழ்கடல் மீனவர்களுக்கு ஜெமினி (GEMINI) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான ஆலோசனை மாற்று வழிகாட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜெமினி (GEMINI) என்ற  மீனவர்களுக்கான செலுத்தும் வழி மற்றும் தகவலுக்கான கருவி முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இது வரவிருக்கும் பேரழிவுகளை பற்றி ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கும் அமைப்பாகும்.
  • INCOIS: Indian National Centre for Ocean Information Services
  • AAI: Airport Authority of India
  • GEMINI: GAGAN Enabled Mariner’s Instrument for Navigation and Information.
சூரிய கதிர் வீச்சைப் பதிவு செய்த - சந்திரயான்-2
  • நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 2019 ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 ஆா்பிட்டா், சூரியனின் எக்ஸ்ரே கதிர் வீச்சைப் பதிவு செய்து, அளவீடு செய்திருக்கிறது.  அதன் விவரம்:
  • சூரியனின் மேற்பரப்பிலிருந்து பிழம்பாக வெளிவரும் எக்ஸ்ரே கதிா்வீச்சை, ஆா்பிட்டா் பதிவு செய்து அளவீடு செய்திருக்கிறது. ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும், எக்ஸ்.எஸ்.எம். என்ற கதிா்வீச்சு கண்காணிப்புக் கருவி, சூரியனின் சிறிய அளவிலான எக்ஸ்ரே கதிா்வீச்சை அளவீடு செய்து, பூமிக்கு தகவல் அனுப்பியிருக்கிறது. சூரியனின் எக்ஸ்ரே கதிா்வீச்சை பயன்படுத்தியே, நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த ஆய்வை ஆா்பிட்டா் மேற்கொள்ள உள்ளது எனவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (isro) தெரிவித்துள்ளது.
இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி 2019
  • முதலாவது இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி 2019 (IICTF-India International Cooperatives Trade Fair) புது டெல்லி பிரகதி மைதானத்தில், அக்டோபர் 11 அன்று தொடங்கியது.
  • மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இட்டன கண்காட்சி, இந்திய கூட்டுறவு விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய தளமாகும், இது மேம்பட்ட கிராமப்புற மற்றும் பண்ணை செழிப்புக்கு வழிவகுக்கும். 36 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி 2019
  • முதலாவது இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி 2019 (IICTF-India International Cooperatives Trade Fair) புது டெல்லி பிரகதி மைதானத்தில், அக்டோபர் 11 அன்று தொடங்கியது.
  • மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இட்டன கண்காட்சி, இந்திய கூட்டுறவு விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய தளமாகும், இது மேம்பட்ட கிராமப்புற மற்றும் பண்ணை செழிப்புக்கு வழிவகுக்கும். 36 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு 2019 - அபி அகமது அலி (எத்தியோப்பிய பிரதமர்)
  • எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி (Abiy Ahmed Ali) அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize 2019) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமைதிக்கான நோபல் பரிசு
    • Nobel Peace Prize 2019
    • அமைதிக்கான நோபல் பரிசு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில், உலக அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அவர்களுக்கு வழங்கப்படுவதாக நோபல் குழு, செப்டம்பர் 11-அன்று அறிவித்தது.
  • 2019 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதன் நோக்கம் 
    • “அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக அபி அகமது முயற்சி எடுத்தார். குறிப்பாக அண்டை நாடான எரித்ரியாவுடனான 20 ஆண்டு கால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு அபி அகமதுவுக்கு வழங்கப்படுகிறது” என நோபல் குழு (Norwegian Nobel Committee) அறிவித்தது.
  • அபி அகமது அலி  (Abiy Ahmed Ali) 
    • இளம் தலைவரான அபி அகமது (43 வயது), 2018 ஏப்ரல் மாதம் 2-ந் தேதி எத்தியோப்பிய பிரதமர் பதவியை ஏற்றார்.
    • அதைத் தொடர்ந்து அவர் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தொடங்கினார். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினரை விடுதலை செய்தார்.
    • எரித்ரியாவுடனான 20 ஆண்டு கால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். இதுதான் இப்போது அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை தேடித்தந்துள்ளது.
    • எரித்ரியாவுடன் நீடித்து வந்த பகைமையை ஒழிக்க அபி அகமது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவா் நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். எத்தியோப்பியா, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைதி ஏற்படுவதற்குத் துணைநின்ற அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    • சுமார் 9 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6 கோடியே 30 லட்சம்) ரொக்க தொகை, ஒரு தங்க பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை கொண்டதாகும்.
    • அமைதிக்காக வழங்கப்படவுள்ள 100-ஆவது நோபல் பரிசு இதுவாகும், டிசம்பர் மாதம் ஆஸ்லோவில் நடக்கிற விழாவில் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • எரித்திரியா விவகாரம் 
    • காலனிய ஆட்சியின் கீழ் இருந்த எரித்ரியா, ஐ.நா. சபை முடிவின்படி 1952-ஆம் ஆண்டு தன்னாட்சி அதிகாரம் பெற்றது. எனினும், 10 ஆண்டுகளுக்கு எரித்ரியாவின் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களை அண்டை நாடான எத்தியோப்பியா நிா்வகிக்கும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • ஆனால், 1962-ஆம் ஆண்டு எரித்ரியாவின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அதை தங்கள் நாட்டுடன் இணைத்தது எத்தியோப்பியா. இதனால், எரித்ரியாவில் உள்நாட்டுப் போா் வெடித்தது. நீண்ட ஆண்டுகளாக நீடித்த சுதந்திரப் போரின் முடிவாக, 1993-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவிடமிருந்து எரித்ரியா விடுதலை பெற்றது.
    • இரு நாடுகளுக்கிடையேயான எல்லை விவகாரத்தில் தொடா்ந்து பிரச்னை நீடித்து வந்ததால், 1998-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே கடும் போா் மூண்டது. 
    • 2018 ஜூலை மாதம் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் வா்த்தக நடவடிக்கைகள், எல்லை தாண்டிய வணிகம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
    • The Nobel Peace Prize 2019 was awarded to Abiy Ahmed Ali "for his efforts to achieve peace and international cooperation, and in particular for his decisive initiative to resolve the border conflict with neighbouring Eritrea."
அருண் ஜோசப் இயக்கி விருது பெற்ற “ஸ்பிரிட் ஆஃப் கேரளா” குறும்படம் 
  • அருண் ஜோசப் இயக்கிய “ஸ்பிரிட் ஆப் கேரளா” (Spirit Of Kerala), சமீபத்தில் முடிவடைந்த மை ரோட் ரீல் திரைப்பட போட்டியில் (My Rode Reel film competition) மக்கள் தேர்வு விருதைப் People’s Choice Award) பெற்ற முதல் இந்திய குறும்படமாக மாறியுள்ளது. 
  • ரோட் ரீல் திரைப்படப் போட்டி ‘உலகின் மிகப்பெரிய குறும்படப் போட்டி’ என்று அழைக்கப்படுகிறது.
பொருளாதார நிகழ்வுகள் 
கேரள வங்கி-க்கு RBI அனுமதி
  • ‘கேரள வங்கி’ என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க கேரள மாநில அரசுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (RBI) அனுமதியளித்துள்ளது.
  • கேரளத்திலுள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும், கேரள கூட்டுறவு வங்கியுடன் ஒன்றிணைத்து ‘கேரள வங்கி’ என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்கப்படுகிறது.
  • இதன் மூலம் மாநிலத்தின் பெரிய வங்கியாக ‘கேரள வங்கி’ உருவெடுக்கவுள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயல் (அக்டோபர் 12, 2019)
  • ஜப்பானில் அக்டோபர் 12-அன்று ‘ஹகிபிஸ்‘ புயல் தாக்கியது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம்பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ஆளில்லா சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு 
  • தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் கிராமத்தில் ஆளில்லா சிறு விமானம் (டிரோன்) மூலம் பயிா் நிலையை ஆய்வு மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம், மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து நிரந்தர பசுமைப் புரட்சித் திட்டத்தின்கீழ் இத்தொழில்நுட்பத்தைப் பரிசோதனை அடிப்படையில் அக்டோபர் 11-அன்று அறிமுகம் செய்தன.
சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வருகை 
  • சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக செப்டம்பர் 11-அன்று, சென்னை வந்தார். 
  • சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘ஏர் சீனா’ இரண்டடுக்கு தனி விமானத்தில் சென்னை வந்த சீனா அதிபருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
  • பிரதமர் நரேந்திரமோடி கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். 
  • சீன அதிபர் ஜின்பிங், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். 
  • ‘ஹாங்கி’ கார் 
    • சீன தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கொள்கை காரணமாக அதிபர் ஜின்பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 57 கி.மீ. தூரம், சீனாவில் இருந்து விமானத்தில் வரவழைக்கப்பட்டு இருந்த ‘ஹாங்கி’ என்ற காரிலேயே பயணம் செய்தார்.
    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனரான மாசே துங் காலத்தில் இருந்தே அக்கட்சியின் தலைவர்கள் ஹாங்கி என்ற குண்டு துளைக்காத காரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஹாங்கி என்றால் சீனாவின் மாண்டரின் மொழியில் "செங்கொடி" என்று அர்த்தம்.
  • மாமல்லபுரம் வருகை புரிந்த இரண்டாவது சீன அதிபர் ஜீ ஜிங்பிங்
    • மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த இரண்டாவது சீன அதிபர் ஜீ ஜிங்பிங் ஆவார்.
    • 1956-ல் மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் சூ யென் லாய் மற்றும் இந்திய பிரதமர் நேரு ஆகியோர் வருகை தந்தனர்.
    • 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாமல்லபுரம் வருகை தந்தார்.
    • மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த மூன்றாவது இந்திய பிரதமர் மோடி ஆவார்.
  • மொழி பெயர்ப்பாளராக செயல்பட்ட மதுசுதன் ரவீந்திரன்
    • சென்னையை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரி மதுசுதன் ரவீந்திரன். சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளராக (அரசியல்) பணியாற்றி வரும் இவர் பிரதமர் மோடி சீனா அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி -ஜின்பிங் சந்திப்பின்போதும் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார்.
சென்னைக்கு முதல்முறையாக வந்த 2 பிரமாண்ட விமானங்கள்
  • பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். இதற்காக சீன அதிபருடன் சீன மந்திரிகள், அதிகாரிகள் கொண்ட குழுவும் சென்னை வந்து இருந்தது. 
  • இவர்கள் அனைவரும் போயிங் 747-800 கோட்-எப் ரகத்தை சேர்ந்த 2 ஜம்போ (பிரமாண்டமான) விமானங்களில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து இறங்கினர். இதுபோன்ற பெரிய ரக விமானங்கள் சென்னைக்கு வந்தது இதுவே முதல்முறையாகும்.
முக்கிய நபர்கள்
விண்வெளியில் நடை போட்ட முதல் வீரர் "அலெக்சி லியோனவ்"
  • விண்வெளியில் நடைபோட்ட முதல் வீரர் ரஷியாவை சேர்ந்த அலெக்சி லியோனவ் ஆவார்.  
  • அலெக்சி லியோனவ், 1965-ம் ஆண்டு, விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்தபோது, வோஸ்கோட்-2 விண்கலத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் நடை போட்டார். அவரது நடைப்பயணம், 12 நிமிடங்கள், 9 வினாடிகள் நீடித்தது. இதன்மூலம் விண்வெளியில் நடை போட்ட முதல் வீரர் என்ற பெருமையை அலெக்சி பெற்றார்.
  • 85 வயதான அலெக்சி, உடல்நலக்குறைவால் செப்டம்பர் 11-அன்று காலமானார்.
  • அலெக்சி, அந்த நாட்டின் உயர் விருதான ‘சோவியத் யூனியன் ஹீரோ’ விருதை 2 முறை பெற்றவர்.
சாக்சபோன் இசை கலைஞர் - கத்ரி கோபால்நாத் 
  • கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் கத்ரி கோபால்நாத் (70 வயது). சாக்சபோன் இசை கருவி வாசிப்பு மூலம் புகழ் பெற்றவர். மங்களூருவில் செப்டம்பர் 11-அன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
  • மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, மத்திய இசை நாடக அகாடமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது  விருதுகளை பெற்றுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்
விஜய் ஹசாரே கோப்பை 2019
  • 18-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.
  • சஞ்சு சாம்சன் சாதனை (212 ரன்கள்)
    • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் 212 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
    • ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் (சர்வதேச ஒரு நாள் மற்றும் முதல்தர ஒரு நாள் போட்டி இரண்டையும் சேர்த்து) இரட்டை சதம் நொறுக்கிய 6-வது இந்தியர் என்ற சிறப்பை 24 வயதான சஞ்சு சாம்சன் பெற்றார்.
கிங்ஸ் லெவன் அணி பயிற்சியாளராக 'அனில் கும்ப்ளே' நியமனம்
  •  IPL கிரிக்கெட்  அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.  
 அதிக இரட்டை சதங்கள் ருசித்த இந்திய வீரர் - விராட் கோலி
  • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனே நகரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் குவித்தார்
  • விராட் கோலி எடுத்த 7-வது இரட்டை சதம் இது வாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் ருசித்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோர் தலா 6 இரட்டை சதங்கள் எடுத்திருந்தனர்.
  • டெஸ்ட் விளையாடிய 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் கோலிக்கு இரட்டை சதம் அடிக்கவில்லை.
  • இந்திய கேப்டன் விராட் கோலி 200 ரன்களை எடுத்த போது டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை தாண்டிய 7-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.
  • கோலிக்கு கேப்டனாக இது 50-வது டெஸ்டாகும். கேப்டனாக 50-வது டெஸ்டில் சதம் அடித்த 4-வது வீரர் கோலி ஆவார்.
தடகளம் 
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2019 (ராஞ்சி)

  • 59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது.  
  • பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை சி.கனிமொழி 14.05 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். 
செஸ்
உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2019
    praggnanandhaa U 18
  • உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2019, மும்பை நகரில் நடந்தது. 
  • இப்போட்டியில் 18, 16, 14 வயதுப் பிரிவுகளில் ஆடவர், மகளிர் போட்டிகள் நடைபெற்றன.
  • பிரக்ஞாநந்தா சாம்பியன்
    • இந்த போட்டியில் 18 வயது ஓபன் பிரிவில் தங்கப்பதக்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் 14 வயது கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞாநந்தா. 
    • இப்போட்டியில் இந்தியா 3 வெள்ளிப்பதக்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. உலக இளையோர் செஸ் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.
  • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்/வீராங்கனைகள் 
    1. பிரக்ஞாநந்தா - தங்கப்பதக்கம் (18 வயது ஓபன் ஆண்கள் பிரிவு)
    2. வந்திகா அகர்வால் - வெள்ளிப்பதக்கம் (16 வயது ஓபன் பெண்கள் பிரிவு)
    3. ஆரோன்யக் கோஷ் - வெண்கலப்பதக்கம் (16 வயது ஓபன் ஆண்கள் பிரிவு)
    4. எல்.ஆர். ஸ்ரீஹரி - வெள்ளிப்பதக்கம் (14 வயது ஓபன் ஆண்கள் பிரிவு)
    5. திவ்யா தேஷ்முக்  - வெள்ளிப்பதக்கம் (14 வயது ஓபன் பெண்கள் பிரிவு)
    6. ஸ்ரீஷ்வன் - வெண்கலப்பதக்கம் (14 வயது ஓபன் ஆண்கள் பிரிவு)
    7. ரக்ஷிதா ரவி - வெண்கலப்பதக்கம் (14 வயது ஓபன் பெண்கள் பிரிவு)
  • இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் 
    • சென்னையை சேர்ந்த  பிரக்ஞாநந்தா ஏற்கெனவே 8 வயது, 10 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.  
    • 12 ஆண்டுகள், 10 மாதம், 13 நாள்கள் இருந்த நிலையில் பிரக்ஞாநந்தா இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.
குத்துச்சண்டை
பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2019
  • 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் அக்டோபர் 12-அன்று இந்திய வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் விவரம்:

  1. மேரி கோம் - வெண்கலப்பதக்கம் (51 கிலோ பிரிவு) 
  2. ஜமுனா போரோ - வெண்கலப்பதக்கம் (54 கிலோ பிரிவு)
  3. லவ்லினா போரோகைன் - வெண்கலப்பதக்கம் (69 கிலோ பிரிவு)

  • உலக குத்துச்சண்டை போட்டியில் அதிக பதக்கம் வென்றவர்-மேரி கோம் (8 பதக்கங்கள்)
    • 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான மேரிகோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்கமும் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), ஒரு வெள்ளிப்பதக்கமும் (2001) வென்றுள்ளார். தற்போது 8-வது பதக்கத்தை வென்ற மேரிகோம் உலக குத்துச்சண்டை போட்டியில் அதிக பதக்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார். 
    • இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சவோன் உலக குத்துச்சண்டையில் 7 பதக்கம் (6 தங்கம், ஒரு வெள்ளி) கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 12, 2019 - உலக இடம்பெயர்வு பறவைகள் தினம்
  • உலக இடம்பெயர்வு பறவைகள் தினம் (World Migratory Bird), ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019 உலக இடம்பெயர்வு பறவைகள் தின மையக்கருத்து:
    • 'பறவைகளைப் பாதுகாப்போம்: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வாக இருங்கள்' (Protect Birds: Be the Solution to Plastic Pollution) என்பதாகும்.
      World Migratory Bird

அக்டோபர் 13  - பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் 
International Day for Disaster Risk Reduction 2020
  • ஆபத்து-விழிப்புணர்வு மற்றும் பேரழிவு குறைப்பு ஆகியவை குறித்த உலகளாவிய கலாச்சாரத்தை ஊக்குவிக்க, பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் (International Day for Disaster Risk Reduction 13 October), கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தின மையக்கருத்து: 
    • 'முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் பேரழிவு சேதத்தை குறைத்தல்'  (Reduce disaster damage to critical infrastructure and disruption of basic services) என்பதாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post