சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ‘தேசிய ஒற்றுமை விருது‘ - தகவல்கள்



சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ‘தேசிய ஒற்றுமை விருது‘ - அறிவிப்பு 
  • தேச ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அரும்பணி ஆற்றுபவர்களை பாராட்டும் வகையில், சர்தார் வல்லபாய் படேல் பெயரில் உயரிய ‘தேசிய ஒற்றுமை விருது‘ (Sardar Patel National Unity Award) தொடங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  கூடுதல் விவரங்கள்:
Sardar Patel National Unity Award Medal
Sardar Patel National Unity Award Medal

சர்தார் வல்லபாய் படேல் ‘தேசிய ஒற்றுமை விருது‘ - குறிப்புகள் 

  • இவ்விருது, பதக்கமும், பாராட்டு பத்திரமும் கொண்டது. 
  • நிதிஉதவியோ, ரொக்கப்பரிசோ கிடையாது. இந்த விருதை ஜனாதிபதி வழங்குவார்.
  • இந்த விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு அமைக்கப்படும். 
  • ஆண்டுதோறும், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி, விருதுக்கு உரியவர்கள் அறிவிக்கப்படுவார்கள். 
  • ஓராண்டில் 3 பேருக்கு மேல் விருது வழங்கப்படாது. அதுபோல், இறப்புக்கு பிந்தைய விருதாக யாருக்கும் வழங்கப்படாது.
  • விருதுக்கு தனிநபர்கள் பெயர்களை மாநில அரசுகளோ, அமைப்புகளோ சிபாரிசு செய்யலாம். 
  • இதற்கென உருவாக்கப்படும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
  • சாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைவரும் விருதுக்கு தகுதி உடையவர்கள் ஆவர்.
Post a Comment (0)
Previous Post Next Post