தேசிய மருத்துவர் தினம் - ஜூலை 1, 2019
- பி.சி. ராய் பிறந்த தினம்
- இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் ஜூலை 1-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- புகழ் பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க முதலமைச்சருமாக இருந்த பி.சி. ராய் என்ற டாக்டர் பிதன் சந்திர ராய் (Dr. Bidhan Chandra Roy) பிறந்த தினத்தை (1-7-1882), நினைவுகூறும் வகையில், 1991-ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- மருத்துவர், முதல்வர்
- 80 ஆண்டுகள் கழித்து இதே தினத்தில் அவர் மறைந்தார்.
- 1948-ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டார்.
- பாரத ரத்னா விருது
- இவரின் சேவையை பாராட்டிய மத்திய அரசு, அவரை கவுரவிக்கும் விதமாக 1961 ஆம் ஆண்டு பிதன் சந்திரா ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கியது.
- மருத்துவ சேவை-டாக்டர் பி.சி.ராய் விருது
- இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976 ஆம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- 1 July - National Doctors' Day in India 2019.