கார்கில் போர் வெற்றி - 20 ஆண்டுகள் நிறைவு (ஜூலை 26, 2019)
- கார்கில் போர் வெற்றி தினம் (Kargil Vijay Diwas) ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- கார்கில் போர் (1999)
- காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அங்குள்ள ‘டைகர் ஹில்ஸ்’ உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து இருந்த பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடித்து, கார்கிலை மீட்பதற்காக இந்திய பாதுகாப்பு படைகள் உடனடியாக களமிறங்கின. இதற்காக இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தானுடன் தீவிரமாக போரில் ஈடுபட்டன.
- ஆபரேஷன் விஜய் (Operation Vijay)
- ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய இந்தபோர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டு கார்கில் பகுதி முற்றிலும் மீட்கப்பட்டது.
- கார்கில் போர் வெற்றி தினம் ஜூலை 26
- இந்த போர் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி முடிவுக்கு வந்தது. இந்த போர் வெற்றி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
- கார்கில் வெற்றி தினம் - 20 ஆண்டுகள் நிறைவு
- 2019 ஜூலை 26 தேதியுடன், கார்கில் போர் முடிவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஜூலை 25 முதல் 27 வரை 3 நாட்கள் இந்த வெற்றி தினம் (கார்கில் விஜய் திவாஸ்) கொண்டாடப்படுகிறது.
- கார்கில் போர் (1999)
- நடைபெற்ற பகுதி: கார்கில், ஜம்மு-காஷ்மீர்
- நடைபெற்ற நாட்கள்:
- 1999 மே 3 முதல் ஜூலை 26 வரை (2 மாதம், 3 வாரம், 2 நாட்கள்)
- முடிவு: இந்தியா தீர்க்கமான வெற்றி, பாகிஸ்தானால் ஆக்கிரிக்கமிக்கப்பட்ட கார்கில் பகுதியை இந்தியா மீட்டது.
- அப்போதைய பிரதமர்கள்:
- இந்தியா - அடல் பிஹாரி வாஜ்பாய்
- பாகிஸ்தான் - நவாஸ் ஷெரிஃப்