தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019
இணையதள விண்ணப்பம் - தகவல்கள்
இணையதள முகவரி
- என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 42 சேவை மையங்கள் - இணையதள முகவரி வெளியீடு
- தமிழகத்தில் BE மற்றும் B.TECH படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்காக 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நேரடியாக விண்ணப்பிக்க இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019-2020 - அறிவிப்பாணை
- தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், BE மற்றும் B.TECH போன்ற என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக, விண்ணப்பிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பானை வெளியிட்டு உள்ளது.
- அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு 2019-2020-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இதற்காக https://www.tneaonline.in, htpp://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மே 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், நெட்பேங்கிங் வாயிலாகவும் செலுத்தலாம்.
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலுமாக 42 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- இந்த மையங்கள் மூலம் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம்.
- அதேநேரம் ஆன்லைன் மூலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்களும், “செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை” என்ற பெயரில் DD-யாக எடுத்து இந்த மையங்களில் அளிக்கலாம்.
- கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை போன்றவை இணையதளம் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
- சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இ-மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய நாட்களில் விண்ணப்பப்படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
- விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டும் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டும் நடைபெறும்.
- என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம்:
- சென்னை மாவட்டம், சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி.
- கடலூர் - திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, விருத்தாசலம். அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
- காஞ்சீபுரம் - பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, சின்ன காஞ்சீபுரம். ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, பாரதிபுரம், குரோம்பேட்டை. திருவள்ளூர் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி.
- திருவண்ணாமலை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யார்.
- வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகாயம்.
- விழுப்புரம் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கண்டாச்சிபுரம்.
- கோவை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேடு. அரசு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, புது சித்தாபுதூர். கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை.
- தர்மபுரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செட்டிகரை.
- ஈரோடு - சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சக்திநகர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை. கிருஷ்ணகிரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர்.
- நாமக்கல் - என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை கல்லூரி, நாமக்கல். .
- நீலகிரி - அரசு கலை கல்லூரி, உதகமண்டலம்.
- சேலம் - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஓமலூர். திருப்பூர் - சிக்கன்ன அரசு கலை கல்லூரி, திருப்பூர்.
- கரூர் - அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை.
- மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, ஜெய்ஹிந்த் புரம். தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பரங்குன்றம்.
- ராமநாதபுரம் - அரசு கலை கல்லூரி, பரமக்குடி.
- தேனி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, போடிநாயக்கனூர்.
- திண்டுக்கல் - ஜி.டி.என். கலை கல்லூரி, திண்டுக்கல்.
- அரியலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழபழூர்.
- நாகப்பட்டினம் - வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, பால்பண்ணைசேரி.
- பெரம்பலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழகனவாய்.
- புதுக்கோட்டை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி.
- தஞ்சாவூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரெகுநாதபுரம். அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செங்கிப்பட்டி.
- திருச்சி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை. அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீரங்கம்.
- திருவாரூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான்.
- சிவகங்கை - ஏ.சி.அரசு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி.
- கன்னியாகுமரி - தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, கோட்டார், நாகர்கோவில்.
- திருநெல்வேலி (2 இடம்) - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, திருநெல்வேலி. ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை.
- தூத்துக்குடி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி. விருதுநகர் - வி.வி. வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.
- இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் கூறியுள்ளது..
- Source: தினத்தந்தி 26.4.2019.