முக்கிய தினங்கள் - ஏப்ரல் 2019
April 1st - National and International days
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துவங்கிய தினம் - ஏப்ரல் 1
முட்டாள்கள் தினம் - ஏப்ரல் 1
- RBI DAY 2019 - APRIL 1
- முதல் உலகப் போருக்குப் பின், இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்க்க, 'ஹில்டன்- யங்' ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, 1935 ஏப்ரல் 1 ஆம் தேதி, மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில் துவங்கப்பட்டது. 1937 இல், மும்பைக்கு மாற்றப்பட்டது.
- ரிசர்வ் வங்கிவங்கியின் முதல் கவர்னர், சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித் ஆவார்.
- 1943-இல், கவர்னராக பதவி வகித்த, முதல் இந்தியர், சி.டி.தேஷ்முக்.
- தேசிய மயமாக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (1949)
- இந்தியா சுதந்திரமடைந்த பின், 1949 ஜனவரி 1 ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது.
- கவர்னர் தலைமையில், மத்திய நிர்வாக இயக்குனர்கள் அடங்கிய குழு, ரிசர்வ் வங்கியை நிர்வகிக்கிறது.
- பர்மா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு, சில ஆண்டுகள், அந்நாடுகளின் மத்திய வங்கியாக, இவ்வங்கி செயல்பட்டது.
- இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்
- இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், முத்திரைத் தாள்களை அச்சிடல்; தேசிய நிதிக்கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்; இந்திய வங்கிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்துதல், வினியோகித்தல் ஆகியவை, இவ்வங்கியின் முக்கிய பணிகள் ஆகும்.
- பிரான்சில் முதன்முதலில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது. 16 ஆம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 தான், புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்ரவரி 29 இல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.இதில் ஜனவரி 1, புத்தாண்டாக மாற்றப்பட்டது.
- 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை, ஒவ்வொரு ஏப்ரல் 1-ந்தேதியும் அவர்களுக்கு வெற்று பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்து அவர்களை ஏமாற்றினர். இதை 'முட்டாள்கள் தினம்' என அழைத்தனர்.
ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் - ஏப்ரல் 1
- ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள், 1936 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது. இந்த நாள் "உட்கல் திவாஸ்" (Odisha Formation Day, Utkal Divas) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
உலக குழந்தைகள் புத்தகத் தினம் - ஏப்ரல் 2
- குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் நினைவாக, அவர் பிறந்த ஏப்ரல் 2-ந்தேதி உலகக் குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாடப்படுகிறது.
- வாசிப்பு பழக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தைகள்உணரச்செய்வது, இந்த நாளின் நோக்கமாகும்.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 2
- World Autism Awareness Day 2 April 2019
- ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு ஆகும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக ஆட்டிசம் தினம் (World Autism Awareness Day) ஏப்ரல் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்கள் ஆட்டிசம் என்பதாகும்.
- 2019 World Autism Awareness Day Theme
- Assistive Technologies, Active Participation.
- 2019 உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் மையக்கருத்து:
- "துணை தொழில்நுட்பங்கள்,செயலில் பங்கேற்பு" என்பதாகும்.
April 4th- National and International days
சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாள் - ஏப்ரல் 4
- ஆண்டுதோறும் ஐ. நா. அவை, ஏப்ரல் 4 ம் தேதி அன்று சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக (International Day for Mine Awareness and Assistance in Mine Action) கடைபிடிக்கிறது.
- உலகெங்கிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை பற்றிய விழிப்புணர்வை இந்நாள் ஏற்படுத்துகிறது.
- 2019 சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தின மையக்கருத்து (2019 Theme):
- United Nations Promotes SDGs – Safe Ground – Safe Home என்பதாகும்.
தேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5
- இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் SS Loyalty, 1919, ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. இதை நினைவுகூறும் வகையில் 1964 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் (National Maritime Day 2019) கொண்டாடப்படுகிறது.
- 56-வது ஆண்டு தேசிய கடல்சார் தினம், 2019 ஏப்ரல் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2019 தேசிய கடல்சார் தினம் 2019-இன் கருப்பொருள்:
- “இந்திய பெருங்கடல்- பெருங்கடல் வாய்ப்புகள்” (Indian Ocean-An Ocean of opportunity) என்பதாகும்.
- இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதம், துறைமுகங்கள் மூலமே நடைபெறுகிறது.
- இந்தியாவில் ஹல்டியா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, பனாஜி, நேரு துறைமுகம் (மும்பை), கண்ட்லா என 13 பெரிய துறைமுகங்கள், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.
- முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் "பாபு ஜெகஜீவன் ராம்" அவர்களின் 111-ஆவது பிறந்த நாள் ஏப்ரல் 5, 2019 அன்று கடைபிடிக்கப்பட்டது.
- இந்த நாள் "சம்தா திவாஸ்" என்று அழைக்கப்படுகிறது.
- பாபு என அழைக்கப்படும் ஜெகஜீவன்ராம், பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பிறந்தவர்.
- 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர்.
- 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979 வரை இந்தியத் துணை பிரதமர் பதவி வகித்தவர்.
- இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.