Daily Current Affairs Quiz 2019-2018 |
---|
Daily Current Affairs Notes 2019-2018 |
14500 Model Questions Answers |
இந்திய நிகழ்வுகள் / National Affairs
மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம் "HDFC Mutual Fund"
- இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக (AMC-Asset Management Company) HDFC Mutual Fund நிறுவனம் உருவாகியுள்ளது.
- 2019 ஜனவரி 4 அன்று, அண்டார்க்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் வின்சன் (Antarctica's Highest Peak - Mount Vinson), சிகரத்தை ஏறிய உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி (world’s first female Amputee) என்ற சிறப்பை இந்திய மருத்துவர் அருணீமா சின்ஹா (Dr. Arunima Sinha) பெற்றுள்ளார்.
- அமெரிக்கா (United States), அண்மையில் ஆசிய ஆதரவு புதுமுயற்சி சட்டம் (ARIA-Asia Reassurance Initiative Act) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
- கேரள மாநிலத்தின் திரூர் நகரில் உள்ள (Thunchath Ezhuthachan Malayalam University) துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மொழி மையம் (Centre for Classical Language) நிறுவ மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு (10% reservation for economically backward upper caste) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- கல்வி, வேலைவாய்ப்புகளில், நாடு முழுவதும் சாதி அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- தற்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க, அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
- இந்த அரசியல் சாசன திருத்த மசோதா, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு பெற வழிவகை செய்கிறது.
- தகுதி: ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள் / Conferencesஉலகளாவிய சுகாதார உச்சி மாநாடு (GHS) 2019
- 2019 ஜூலை 21 முதல் 24 வரை, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில், 13-வது உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு (GHS-Global Healthcare Summit-2019) நடைபெற உள்ளது.
சுற்றுச்சுழல் /Environmental Affairs
தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட "பபுக்" (Pabuk) புயல்
- அண்மையில் (2019 ஜனவரி) வெப்பமண்டல சூறாவளி 'பபுக்' (Tropical cyclone Pabuk) தாய்லாந்து நாட்டில் உருவானது. ஜனவரி 6 அன்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது.
பொருளாதார நிகழ்வுகள் / Economic Affairs
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-19-ஆம் நிதியாண்டு - கணிப்புகள்
- 2018-19 நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என பல்வேறு நிறுவனங்கள் கணிப்புகள் வெளியிட்டுள்ள, அவற்றின் விவரம்:
- மத்திய புள்ளியியல் அலுவலகம் - 7.2 %-
- ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) - 7.3 %
- பிட்ச் நிறுவனம் - 7.2 %
- நிதியாண்டு வாரியாக இந்திய பொருளாதார வளர்ச்சி:
- 2017-18-ஆம் நிதியாண்டு: 6.7%
- 2016-17 நிதியாண்டு: 7.1%
- 2015-16 நிதியாண்டு: 8.2%
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, 3 ஆண்டு சிறை தண்டனையால் பதவி இழப்பு
- பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
- 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், பாலகிருஷ்ண ரெட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 மற்றும் 192-ம் பிரிவுகளின் கீழ், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
- பாலகிருஷ்ண ரெட்டி, ஓசூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக இருந்தார்.
- பாலகிருஷ்ணரெட்டி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் - நிறுத்தம்
- கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணம் அடைந்ததால் காலியிடமாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs
கிரிக்கெட்
பார்டர்-கவாஸ்கர் கோப்பை 2018-19 (இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2019): தகவல் துளிகள்
- சாம்பியன்: இந்திய அணி
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற, 2019 பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
- இதன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
- ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
- விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியால் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது.
- 1947-ம் ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. தனது 12-வது முயற்சியில், 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
- டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கேப்டன் விராட்கோலியிடம் வழங்கினார்.
- தொடர் நாயகன் விருது, இந்திய மட்டை வீச்சாளர் சித்தேஸ்வர் புஜாரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- 1-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி (31 ரன்கள்)
- 2-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா வெற்றி (146 ரன்கள்)
- 3-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி (137 ரன்கள்)
- 4-வது டெஸ்ட் (சிட்னி) - டிரா
- வெளிநாட்டில் அதிக டெஸ்ட் தொடர்களை வென்று தந்த இந்திய கேப்டனான கங்குலியின் சாதனையை விராட்கோலி (4-வது முறை) சமன் செய்தார்.
அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
- சித்தேஸ்வர் புஜாரா (இந்தியா) - 521 ரன்கள்
- ரிஷப் பான்ட் (இந்தியா) - 350 ரன்கள்
அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
- ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா) - 21 விக்கட்டுகள்
- நாதன் லயன் - 21 விக்கட்டுகள்
கால்பந்து
அதிக கோல்களை அடித்த வீரர்கள்: "சுனில் சேத்ரி" - இரண்டாம் இடம்
- இந்தியா கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, சர்வேதேச கால்பந்து போட்டிகளில் தற்போது (7.1.2018) வரை, மொத்தம் 67 கோல்கள் அடித்துள்ளார்.
- இதன் மூலம் சுனில் சேத்ரி, சர்வேதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
சர்வேதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் (7.1.2018)
- கிறிஸ்டியானோ ரொனால்டோ - 85 கோல்கள் (154 போட்டிகள்)
- சுனில் சேத்ரி - 67 கோல்கள் (105 போட்டிகள்)
- லியோனல் மெஸ்ஸி - 65 கோல்கள் (128 போட்டிகள்).
டேபிள் டென்னிஸ்
- தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள் 2019
- 80-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (National Table Tennis Championship) போட்டிகள், 2019 ஜனவரி 4 முதல் கட்டாக் நகரில் உள்ள தொடங்கவுள்ளது.