TNPSC Current Affairs 25th, January 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 25th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
இந்தியாவின் முதல் "DRONE Air Taxi"
  • இந்தியாவில் முதன் முறையாக ‘DRONE’ மூலம் வானில் பறக்கும் ‘ஏர் டாக்சி’யை (India’s first Air taxi, Drone Air Taxi), அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ‘தக்‌ஷா’ மாணவர் குழு (Anna University MIT’s 12-Member Daksha Team) தயாரித்துள்ளது. 
  • DRONE ‘ Air Taxi’
    • 80 கிலோ எடை கொண்ட மனிதர்களை தூக்கிச் செல்லும் திறனுடன் 20 கி.மீ. தூரம் பறந்து செல்லும் வகையில் இந்த ‘ஏர் டாக்சி’ வடிவமைக்கப்பட்டு உள்ளது. 
    • இந்த ‘ஏர் டாக்சி’ சென்னையில் நடைபெற்ற 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இடம்பெற்றிருந்தது.
    • நடிகர் அஜித்குமாரை தொழில்நுட்ப வழிகாட்டியாக கொண்டது "தக்‌ஷா" மாணவர் குழு.
    • இந்த "ஏர் ஆம்புலன்சில்" சென்னையில் இருந்து வேலூர் வரை பறக்க முடியும். 
    • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் உடல் உறுப்பு பாகங்களை இந்த ‘ஏர் ஆம்புலன்சு’ மூலம் எளிதாக கொண்டு சென்று நோயாளிகளுக்கு பொருத்தி காப்பாற்ற முடியும்.
EWS 10% இடஒதுக்கீடு: பிப்ரவரி 1, 2019 முதல் அமல்
  • மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்த உத்தரவை மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. 
  • மத்திய அரசு பணிகள் மற்றும் சேவைகளில் பிப்ரவரி 1-ந்தேதி அல்லது அதற்கு பின்வரும் அனைத்து நேரடி ஆள் சேர்ப்பிலும் வழங்கப்படவுள்ளது.
  • 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் சதுர அடியோ, அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீடு, 300 சதுர அடியோ அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீட்டு மனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடியோ அதற்கு மேலோ வீட்டுமனை உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது. 
  • EWS quota: Economically Weaker Sections
அசோக் சக்ரா விருது 2019: காஷ்மீர் ராணுவ வீரர் "நசிர் அகமது வானி" 
  • 2019 குடியரசு தினவிழாவில் அசோக் சக்ரா விருது காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் நசிர் அகமது வானி அவர்களுக்கு மரணத்திற்கு பிறகு வழங்கப்படுகிறது. (Lance Naik Nazir Wani, Ashok Chakra 2019). 
  • முதல் முறையாக காஷ்மீரை சேர்ந்த ஒருவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
  • ராணுவத்தில் வீரதீர செயல் மற்றும் தன்னலமற்ற உயிர் தியாகத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மிக உயரிய காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த நசிர் அகமது வானி (வயது 38) என்ற அந்த வீரர், 2018 நவம்பர் 25-ந் தேதி சோபியானில் 6 பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் சண்டையில் "நசிர் அகமது வானி" வீரமரணம் அடைந்தார். 
  • நசிர் அகமது வானியின், தீரமிக்க செயலாற்றல், உயர்தியாகத்தை பாராட்டி அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. 
  • டெல்லியில் 26.1.2019 அன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவரது மனைவி மகஜாபீனிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்குகிறார்.
  • நசிர் அகமது வானி, முதலில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருந்தார் நசிர், மனம் மாறி 2004-ல் ராணுவத்தில் சேர்ந்தார்.
கிராம சபைக் கூட்டம் 
  • கிராம சபை கூட்டம் (Gram Sabha. So a meeting), இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
  • இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். 
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: தமிழ்நாடு அரசுக்கு 2 விருதுகள் 
  • டெல்லியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் (24.1.2019), பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாடு அரசுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் 2 விருதுகள் வழங்கப்பட்டன.
  • மத்திய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இந்த விருதுகளை வழங்கினார்.
  • தமிழ்நாடு அரசு பெற்ற 2 விருதுகள்
    • மத்திய அரசின் திட்டமான ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்‘ என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது.
    • மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
  • சிறப்பு அழைப்பாளர் - மாணவி நந்தினி 
    • குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - தகவல் தொகுப்பு 
  • தமிழ்நாடு அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஜனவரி 23-24 தேதிகளில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 
  • இம்மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தொழில் துறையில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடு செய்யப்படஉள்ளது.
  • 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் புகழ் பெற்ற வெளிநாட்டு நிறுவனங்களான ஜப்பான், கொரியா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் நிறுவனங்களின் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
  • அதிக முதலீடு செய்யவுள்ள நிறுவனங்கள் - இடங்கள் 
    • CPCL நிறுவனம் (Chennai Petroleum Corporation Limited)
    • நாகப்பட்டினம் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 400 கோடி ரூபாயை முதலீடு 
    • ஹூண்டாய் நிறுவனம் (Hyundai Motor)
    • ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு
    • எலெக்ட்ரானிக் கார்களை தயாரிக்க தொடங்குகிறது.
    • MRF நிறுவனம் 
    • ரூ. 3 ஆயிரத்து 100 கோடி முதலீடு-எம்.ஆர்.எப். நிறுவனம் விரிவாக்கம் - பெரம்பலூர், வேலூர் மாவட்டங்கள் 
    • Foxconn நிறுவனம்
    • ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதலீடு
    • பாக்ஸ்கான் நிறுவனம் பிரிமியம் வகை ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பு - ஸ்ரீபெரும்புதூர்
    • Adani குழுமம் 
    • அதானி குழுமம் (Adani Group) - ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
    • துறைமுக விரிவாக்கம், காட்டுப்பள்ளி, சென்னை 
    • BSA-France நிறுவனம் 
    • ரூ. 250 கோடி முதலீடு - பியுகோட் கார் உற்பத்தி, திருவள்ளூர் மாவட்டம் 
  • சிறு, குறு நிறுவனங்கள்
    • இந்த மாநாடு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே ஆனது அல்ல. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் சிறப்பு கவனம் தரப்பட்டது. அந்த துறையில் மட்டும் 32 ஆயிரத்து 206 கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • உணவு உற்பத்தி தொழிற்சாலைகளையும் இந்த மாநாடு ஈர்த்து உள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மெகா உணவு பூங்காவை அமைக்க ஜி.எஸ்.இ. அவினா நிறுவனம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து உள்ளது.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015 
    • 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10-ந் தேதிகளில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
    • 2015 மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 
முக்கிய தினங்கள் / Important Days
தேசிய பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24
  • ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day January 24) கொண்டாடப்படுகிறது.
  • 2019 தேசிய பெண் குழந்தைகள் தின மையக்கருத்து: "ஓளிமயமான எதிர்காலத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் (Empowering Girls for a Brighter Tomorrow)" என்பதாகும். 
தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25
  • 2011-ம் ஆண்டில் இருந்து "தேசிய வாக்காளர் தினம்" (National Voters' Day) ஆண்டுதொறும், ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது. (Friday, 25 January National Voters' Day 2019 in India).
  • 2019 ஜனவரி 25, வெள்ளிக்கிழமை, 9-வது தேசிய வாக்காளர் தினம் (National Voters' Day) மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • ஜனநாயக தேர்தல் முறைகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கிறது.
  • 2019-ஆம் ஆண்டின் (2019 National Voters' Day Theme) மையக்கருத்து: 
    • "எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது" என்பதாகும். 
  • கூடுதல் தகவல்கள் 
    • 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு நாடானது.
    • தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி பொறுப்பு ஏற்றது. 
    • இந்தியாவில் 16 முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 
    • 1984-ம் ஆண்டு முதல் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் ஓட்டுரிமை பெற தகுதி உள்ளவர்களாக ஆக்கப்பட்டனர்.
TNPSC Current Affairs 25th  January 2019 PDF
TNPSC Link File Size 0.6 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post