Daily Current Affairs Quiz 2019-2018 |
---|
Daily Current Affairs Notes 2019-2018 |
14500 Model Questions Answers |
இந்திய நிகழ்வுகள் / National Affairs
தேர்தலில் "டிஜிட்டல் ஊடக பிரச்சாரம்" குறித்த "உமேஷ் சின்ஹா" அறிக்கை
- தேர்தலுக்கு முன்பான 48 மணி நேரத்தில், டிஜிட்டல் ஊடக பிரச்சாரம் (Digital media and campaigning during last 48 hours before polls) குறித்த அறிக்கையை "உமேஷ் சின்ஹா" (Umesh Sinha Committee) தலைமையிலான குழு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை (Leh-Ladakh solar power generation programme) அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை, லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சுமார் ரூ.45000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டம் 2023-ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
- தற்போது சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு (10% Economically Weaker Sections Quota) வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 7.1.2019 அன்று ஒப்புதல் அளித்தது.
- 124-ஆவது திருத்த சட்ட முன்வடிவுக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8.1.2019 அன்று ஒப்புதல் பெறப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் 9.1.2019 அன்று நிறைவேறியது.
- இந்த மசோதாவை சட்டமாக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 12.1.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
- முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு "எதிராக அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம்" ஆகியவை அண்மையில் பிறப்பிக்கப்பட்டன. இந்த 3 அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 12.1.2019 அன்று ஒப்புதல் அளித்தார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் "சார்தாம்" (Char Dam Project) என அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு அனைத்து காலநிலையிலும் சென்று வரக்கூடிய வகையில் இந்த இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
முக்கிய தினங்கள் / Important Days
குரு கோவிந்த் சிங் - 350-ஆவது பிறந்ததினம்
- 10-வது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்ததினத்தையொட்டி (13 January, Guru Gobind Singh Jayanti 2019), அவரது நினைவாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி (ஜனவரி 13, 2019) நாணயம் வெளியிடுகிறார்.
- குரு கோவிந்த் சிங், சீக்கியர்களைக் கொண்டு "கல்சா (Khalsa) என்னும் படைப் பிரிவை" உருவாக்கினார்.
மாநாடுகள் / Conferences
சர்வதேச ஒட்டக விழா
- ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் சர்வதேச ஒட்டக விழா 12.1.2019 அன்று தொடங்கியுள்ளது. 2 நாட்கள் ஒட்டக விழா நடைபெறுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairsசிட்னி மைதான கௌரவ உறுப்பினர்களான "வீரர் விராட் கோலி, ரவி சாஸ்திரி
- சிட்னி கிரிக்கெட் மைதான கௌரவ உறுப்பினர் (SCG-Sydney Cricket Ground honorary membership) என்ற சிறப்பை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Indian skipper Virat Kohli, coach Ravi Shastri) ஆகியோர் பெற்றுள்ளனர்.
- சிட்னி கிரிக்கெட் மைதான கௌரவ உறுப்பினர் என்ற சிறப்பை, விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் தவிர சச்சின் டெண்டுல்கர் மற்றும் ப்ரெய்ன் லாரா ஆகியோர் பெற்றுள்ளனர்.
- இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் இடையே, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- இந்திய வீரர் ரோகித் சர்மா 133 ரன்கள் எடுத்தார்.
- ஆயிரம் வெற்றிகள் - ஆஸ்திரேலியா சாதனை
- இந்தியாவிற்கு எதிரான, சிட்னியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் ஆயிரமாவது வெற்றி இதுவாகும் ((டெஸ்ட், ஒரு நாள், T20 போட்டிகள்).
- சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் வெற்றிகள் பெற்றுள்ள முதல் அணி ஆஸ்திரேலியா ஆகும்.
- அதிக வெற்றிகளை பெற்றுள்ள அணிகள் விவரம்:
- ஆஸ்திரேலியா - 1000 வெற்றிகள்
- இங்கிலாந்து - 774 வெற்றிகள்
- இந்தியா - 711 வெற்றிகள்
- ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் - ரோகித் சர்மா
- ரோகித் சர்மா, ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 64 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
- இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம். எஸ். தோனி ஒரு நாள் ஆட்டத்தில் (50 ஓவர்கள்) 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் திராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரர் தோனி ஆவார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
தமிழ்நாடு அரசின் "கல்வி தொலைக்காட்சி"
- தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்காக கல்வி தொலைக்காட்சி ஜனவரி 21-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் - வெளியீடு
- காலை 5 மணி முதல் இரவு 1 மணி வரை 17 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
- குறளின் குரல்
- இந்த நாள் இனிய நாள்
- நலமே வளம்
- குருவே துணை
- ஓடி விளையாடு பாப்பா
- வல்லது அரசு
- வரலாற்று பார்வை
- இரவு 11.30 மணி முதல் 12 மணி வரை - ‘NEET’, TNPSC, போன்ற போட்டி தேர்வுகளுக்கான கற்பித்தல் நிகழ்ச்சி.
TNPSC Current Affairs 13th and 14th January 2019 PDF
TNPSC Link
File Size 1.1MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.