Indian Railway, 2 lakh and 30 thousand jobs will be notified. This appointments will take place in 2 stages in 2019-2020.
ரெயில்வே பணி நியமனம் 2019-2020
- ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2 லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
- ரெயில்வேயில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுவார்கள். இந்த நியமனம் 2 கட்டங்களாக நடைபெறும்.
- இது தவிர்த்து மேலும் 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 பணியாளர்களை வேலையில் அமர்த்தும் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கி விட்டது.
- இந்திய ரெயில்வேயில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 598 ஆகும். 2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. மீதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 428 பணியிடங்கள் காலியாக இருக்கும்.
- 53 ஆயிரம் பேர் 2019-20 நிதி ஆண்டிலும், 46 ஆயிரம் பேர் 2020-21 நிதி ஆண்டிலும் ஓய்வு பெறுவார்கள். இதன்மூலம் மேலும் 99 ஆயிரம் காலி பணியிடங்கள் உருவாகும்.
Source: Dailythanthi, Dated 24.1.2019