Tuesday, 4 December Navy Day 2018 in India
இந்திய கடற்படை தினம் - டிசம்பர் 4, 2018
- இந்திய கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- இந்திய கடற்படை தினம் (Indian Navy Day), இந்திய கடற்படைகளின் சாதனைகள் மற்றும் பங்கை போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடபடுகிறது.
இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படும் பின்னணி
1971 டிசம்பர் 4 - கராச்சி துறைமுகம் தாக்குதல்
- 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது டிசம்பர் 4-ம் தேதி கராச்சி துறைமுகம் மீது, இந்திய கடற்படை ரகசிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகிய இரு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது. மேலும் ஷாஜகான் எனும் கப்பல் பலத்த சேதத்திற்கு உள்ளானது.
'திரிசூலம்' மற்றும் 'மலைப்பாம்பு'
- இந்த தாக்குதல்களுக்கு 'திரிசூலம்' மற்றும் 'மலைப்பாம்பு' எனப் பெயரிடப்பட்டது. இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Indian Navy Day