யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு 2018 - குறிப்புகள்


யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு 2018 - குறிப்புகள் 
  • ஆண்டுதோறும் சர்வதேச சகிப்புத்தன்மை தினம் (International Day for Tolerance) நவம்பர் 16 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16 அன்று, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிக்கும் வகையில் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize 2018) வழங்கப்படுகிறது. 
  • 2018 ஆம் ஆண்டுக்கான "யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிப்பு பரிசு", இருவருக்கு வழங்கப்படுகிறது. 
  1. மனோன் பார்பியூ (கனடா) 
  2. ஒன்றுசேர்ந்த முனைப்பு அமைப்பு (கென்யா) 
  • கனடா நாட்டை சேர்ந்த சமூகத் தொழில் முனைவர் & திரைப்பட தயாரிப்பாளர் "மனோன் பார்பியூ (Manon Barbeau)" மற்றும் கென்யா நாட்டின் "ஒன்றுசேர்ந்த முனைப்பு (The Coexist Initiative)" என்ற அரசு சாரா அமைப்பிற்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • யுனெஸ்கோவின் இயக்குனர்-ஜெனரல் ஆட்ரி அசூலே, இந்த விருதுகளை நவம்பர் 16 அன்று பரிசுகளை வழங்குகிறார். 
UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence

யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு (1995)
  • ஐக்கிய நாடுகள் சபை, சகிப்புத்தன்மை ஆண்டு நிறைவு விழா மற்றும் மகாத்மா காந்தி பிறந்த 125 வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 1995 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ, "சகிப்புத்தன்மை அகிம்சை ஊக்குவிப்பு பரிசு" என்ற பெயரில் ஒரு பரிசை (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) உருவாக்கியது. 
  • யுனெஸ்கோ, சகிப்புத்தன்மை அகிம்சை ஊக்குவிப்பு பரிசு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, அறிவியல், கலை, கலாச்சார அல்லது தகவல்தொடர்பு துறைகளில் கணிசமான பங்களிப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. 
தேர்வுக்கு குழுத் தலைவர் - நந்திதா தாஸ்
  • இந்தியாவை சேர்ந்த நடிகை நந்திதா தாஸ், 2018 யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசு தேர்வுக்கு குழுவின் தலைவராக செயல்பட்டார்.
Post a Comment (0)
Previous Post Next Post