National Milk Day 2018
Verghese Kurien, known as ‘Father of the White Revolution’
தேசிய பால் தினம் - நவம்பர் 26
தேசிய பால் தினம் - நவம்பர் 26
National Milk Day - November 26, 2018 |
- ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று தேசிய பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவின் "வெள்ளைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன்" அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான நவம்பர் 26 அன்று "தேசிய பால் தினம்" கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவில் பால் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் பிரபலமான பால் நிறுவனமான அமுல் நிறுவவனத்தை நிறுவியவர் ஆவார்.
- உலக அளவில் பால் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக பால் உற்பத்தியில், 18.5 சதவீதம் இந்தியாவின் பங்காகும்.
- 2014-15ல் உற்பத்தி அளவு, 146.3 மில்லியன் டன். இதுவே, 2013-14ல், 137.69 மில்லியன் டன்னாக இருந்தது. இது, 6.26 சதவீத வளர்ச்சி. இந்தியாவில் தனி நபருக்கான பாலின் அளவு, 1990-91ல், நாளொன்றுக்கு, 176 கிராமாக இருந்தது. இதுவே, 2014-15ல், 322 கிராமாக அதிகரித்தது. இது, உலக சராசரியை விட அதிகம்.