"CSE" அமைப்புக்கு இந்திரா காந்தி விருது 2018
- அமைதி மற்றும் வளர்ச்சிக்கான "இந்திரா காந்தி விருது' (2018 Indira Gandhi Prize) டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான "CSE"-க்கு (அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கை
- சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நிலையான பங்களிப்பை செய்துவருதற்காகவும், இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அந்த அமைப்பு வழங்கியுள்ள பங்களிப்புகளும் கருத்தில் கொண்டு சிஎஸ்இ அமைப்புக்கு இந்திரா காந்தி விருது வழங்கப்படுகிறது.
CSE அமைப்பு
- 1980-ஆம் ஆண்டு அனில் குமார் அகர்வால் என்ற சுற்றுச்சூழலியலாளரால் தொடங்கப்பட்ட சிஎஸ்இ அமைப்பானது, 40 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்திரா காந்தி விருது
- இந்திரா காந்தி விருதை வழங்கும் இந்திரா காந்தி அறக்கட்டளையானது, முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை தலைவராகக் கொண்டதாகும்.
- சர்வதேச அமைதி, வளர்ச்சி, ஆக்கப்பூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பங்களிப்பு செய்துவரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது.
- CSE: Centre for Science and Environment