TNPSC Current Affairs July 2-4, 2018 - Download as PDF


Current Affairs July 2-4, 2018 for TNPSC and Govt Exams, Tnpsc Current Affairs July 1, 2018, GK Today July 1, 2018, this covers July 2, July 3 and July 4th 2018 Current affairs an GK in tamil language, Read and Download as PDF File.

Current Affairs July 2, 2018 - Click Here

Current Affairs Quiz July 2-3, 2018 - Click Here

Current Affairs Quiz July 4, 2018 - Click Here

Important Days July, 2018 - Click Here

Current Affairs July month 2018 - Click Here

நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு ஜூலை 02-04, 2018

விருதுகள் (Awards)

ICC புகழ்பெற்ற வீரர்கள் (Hall of Fame) பட்டியல் 2018 

ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல் 2018 - இராகுல் டிராவிட் பெயர் சேர்ப்பு
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) புகழ் பெற்ற வீரர்களின் 2018 பட்டியலில் (Hall of Fame 2018) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இராகுல் டிராவிட் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல் 2018 
  1. இராகுல் டிராவிட் - இந்தியா
  2. ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா
  3. கிளார் டெய்லர் - இங்கிலாந்து 
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புகழ் பெற்ற வீரர்கள் பட்டியலில் இடம் பெறும் ஐந்தாவது இந்திய வீரர் இராகுல் டிராவிட் ஆவார்.
ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் பட்டியல் 
  1. கபில் தேவ் - 2009
  2. சுனில் கவாஸ்கர் - 2009
  3. பிஷன்சிங் பேடி - 2009
  4. அனில் கும்ப்ளே - 2015
  5. இராகுல் டிராவிட் - 2018
2018 தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருது பெறும் "மிலன் சங்கர் தாரே"
  • மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தைச் சேர்ந்த, மிலன் சங்கர் தாரே, 2018 தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மிலன் சங்கர் தாரேவின், கடலோர சகோதரத்துவத்தின் மிக உயர்ந்த மரபுக்காக, தன்னலமற்ற செயல்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 
நியமனம்/பதவியேற்பு (Appointments)
  • மெக்சிகோ அதிபராக "ஆண்ட்ரேஸ் மனுவல் லோப்பஸ் ஒப்ராடர்" - தேர்வு
  • லத்தீன் அமெரிக்க நாடான, மெக்சிகோவில் நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி கூட்டணி தலைவரான, "ஆண்ட்ரேஸ் மனுவல் லோப்பஸ் ஒப்ராடர்" தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
SBI வங்கியின் மேலாண்மை இயக்குனராக "அர்ஜித் பாசு" - பொறுப்பேற்பு
  • பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு, ஜூலை 4 அன்று பொறுப்பேற்றுள்ளார். அர்ஜித் பாசு, மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்திய நிகழ்வுகள் (National Affairs)

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் பதுக்கியவர்கள் பட்டியல் - இந்தியா 73-வது இடம்
  • சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளது. 
  • சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர ஆய்வறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது. முதல் 10 இடங்கள் பெற்றுள்ளவர்கள் விவரம்:
  1. இங்கிலாந்து
  2. அமெரிக்கா 
  3. மேற்கு இந்திய தீவுகள் 
  4. பிரான்ஸ்
  5. ஹாங்காங்
  6. பஹாமாஸ்
  7. ஜெர்மனி
  8. குருன்செவ்
  9. லக்சம்பர்க்
  10. கேமன் தீவுகள்
  • சீனா 20-வது இடத்திலும், ரஷ்யா 23-வது இடத்திலும், பிரேசில் 61-வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 67-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 72-வது இடத்தில் இருக்கிறது.
பான் (PAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு - நீட்டிப்பு
  • பான் (PAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2019 ஆம் ஆண்டு, மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து, ஜூன் 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
PAN: Permanent Account Number

சுவாமி மலை உலோக சிலைகளுக்கு - புவிசார் குறியீடு 
  • சுவாமி மலை உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • சுவாமி மலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு புவிசார் குறியீடுக்கான தனி முத்திரை அடையாளத்திற்குரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் சுவாமி மலையில் உள்ள உலோக சிலை தயாரிப்பாளர்கள் மட்டும்தான் சுவாமி மலை உலோக சிலை என்று தங்களது தயாரிப்புகளில் பயன்படுத்த முடியும். 
  • சுவாமி மலையில் சிலை செய்வதை குடிசை தொழிலாக 200 குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், டெல்லி
  • டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையத்தின் ‘சேவா பவன்’ வளாக அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2 அன்று நடைபெற்றது
  • தமிழ்நாட்டிற்கு, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. வரையறுத்துள்ளபடி புதுச்சேரிக்கு தமிழகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அமைச்சரவை கூட்டம் ஜூலை 4 - குறிப்புகள் 
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஜூலை 4 அன்று நடைபெற்றது, இதில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள், அலுவல்கள் விவரம்: 
  • மரபணு தொழில்நுட்ப (பயன் மற்றும் பயன்பாடுகள்) வரன்முறை மசோதா 2018-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உடன்படிக்கை 1996 மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 1996-க்கு உரிமை கொண்டாட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை உடன்படிக்கை மார்ச் 6, 2002 அன்று நடைமுறைக்கு வந்தது. 
மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம் 
  • திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை "மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர்" விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • 1923-ஆம் ஆண்டு திரிபுரா மாகாணத்தின் மன்னராக பொறுப்பேற்றவர் மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் ஆவார். 
தேர்தல் நடத்தை விதி மீறல் - “cVIGIL” செல்போன் செயலி - அறிமுகம்
  • தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய “cVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம் - தொடக்கம்
  • டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான (Happiness Curriculum) புதிய பாடத்திட்டத்தை திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா ஜூலை 4 அன்று தொடங்கி வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • டெல்லியில் ஆளும் அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான அதிகாரப் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் ஜூலை 4 அன்று தீர்ப்பளித்துள்ளது. 
  • துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரங்கள் கிடையாது. எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரவைக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை. 
  • நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு. காவல், பொது அமைதி ஆகிய விவகாரங்கள் மட்டும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உள்பட்டது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பொருளாதாரம் (Economics)

இந்தியாவில் அதிக முதலீடு - மொரீஷியஸ் முதலிடம்
  • இந்தியாவில், 2017-18-ஆம் நிதி ஆண்டில் அதிக முதலீடு செய்து மொரீஷியஸ் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் முக்கிய அன்னிய நேரடி முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியல், முதல் 5 நாடுகள் விவரம்: 
  1. மொரீஷியஸ் - 1,594 கோடி டாலர்
  2. சிங்கப்பூர் - 1,218 கோடி டாலர் 
  3. நெதர்லாந்து - 280 கோடி டாலர்
  4. அமெரிக்கா - 210 கோடி டாலர்
  5. ஜப்பான் - 161 கோடி டாலர் 
தமிழ்நாட்டு நிகழ்வுகள் (Tamil Nadu Affairs)

படுக்கை, கழிவறை வசதி கொண்ட குளிர்சாதன அரசு பேருந்துகள் - தொடக்கம் 
  • தமிழ்நாட்டில் படுக்கை, கழிவறை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன அரசு சொகுசு பேருந்துகள், உள்ளிட்ட மொத்தம் ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலான 515 புதிய பேருந்துகளை. முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஜூலை 3 அன்று சென்னையில் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் போக்குவரத்து கழக சேவை
  • தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 744 பேருந்துகளை, நாள்தோறும் 87.22 லட்சம் கி.மீ. தூரத்திற்கு இயக்கி வருகிறது. 
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சேவையின் மூலம், சுமார் 1 கோடியே 80 லட்சம் பயணிகள் நாள்தோறும் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு எச்.டி. செட்டாப் பாக்ஸ் திட்டம் - தொடக்கம் 

  • தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் (HD SET TOP BOX) வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில், ஜூன் 3 அன்று தொடங்கி வைத்தார். 
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு இட மாற்றம் - குறிப்புகள் 
  • சென்னை பாரிமுனையில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
புதுப்பாக்கம் - 5 ஆண்டு சட்டப் படிப்பு
  • இந்த கல்லூரிக்காக காஞ்சீபுரம் மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் கிராமத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • இங்கு 5 ஆண்டு சட்டப் படிப்பு, மாணவ, மாணவிகள் பயிலவுள்ளனர்.

பட்டரைப்பெரும்புதூர் - 3 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்பு (LLM)
  • திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பட்டரைப்பெரும்புதூர் கிராமத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • இங்கு 3 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்பு (LLM), மாணவ, மாணவிகள் பயிலவுள்ளனர். 
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி (1891) 
  • 1891-ம் ஆண்டு முதல் சென்னை பாரிமுனையில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியம் கொண்டது. 
நீதிபதி ப.சண்முகம் விசாரணை ஆணையம் - பரிந்துரை
  • இந்த சட்டக்கல்லூரி, நீதிபதி ப.சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதமாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எம்.எல்.வசந்தகுமாரி - தபால்தலை வெளியீடு
  • கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் (ஜூலை 3, 2018) 90-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவம் பொறித்த தபால்தலையை மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்கா ஜூலை 3 அன்று சென்னையில் வெளியிட்டார்.
சாதி, வருமான, பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் பெற புதிய செயலி - அறிமுகம் 
  • தமிழ்நாட்டில் வீட்டில் இருந்தபடியே, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ்களை பெறும் வகையிலான "UMANG" செயலியை (APP) முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • இச்செயலி மூலம், 24 மணி நேரமும் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும்.
விளையாட்டு நிகழ்வுகள் (Sports Affairs)

கால்பந்து

2018 உலக கோப்பை கால்பந்து - குறிப்புகள்
  • வெளியேறும் (நாக்-அவுட்) சுற்று முடிவில், கால்இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் விவரம்: பிரான்ஸ், உருகுவே, பிரேசில், பெல்ஜியம், இங்கிலாந்து, சுவீடன், ரஷியா, குரோஷியா
டென்னிஸ்

2018 விம்பிள்டன் டென்னிஸ் - லண்டனில் தொடக்கம்
  • 2018 ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டன் நகரில் ஜூலை 2 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • ஆண்டுதோறும் நான்து வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயர்வாக, கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆகும்.
ஆக்கி 

2018 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி - ஆஸ்திரேலியா அணி சாம்பியன்

  • 37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி 2018, நெதர்லாந்து நாட்டின் பிரிடா நகரில் நடைபெற்றது. ஆறு நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் ஆஸ்திரேலியா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 
  1. ஆஸ்திரேலியா அணி - தங்கப்பதக்கம்
  2. இந்திய அணி - வெள்ளிப்பதக்கம்
  3. நெதர்லாந்து அணி - வெண்கலப்பதக்கம்.
2018 ஆசிய விளையாட்டு போட்டி, ஜகர்தா-இந்தோனேஷியா 
  • 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தா நகரில், 2018ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடக்கிறது. .
இந்திய அணியில் 524 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடிப்பு 
  • இந்திய அணியில் 524 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். 277 வீரர்கள், 247 வீராங்கனைகள், மொத்தம் 36 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். 
கிரிக்கெட் 

சர்வதேச 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் குவித்து "ஆரோன் பிஞ்ச்" - சாதனை 
  • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து சாதனையை படைத்துள்ளார், 
  • "சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்" இதுவாகும். 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆரோன் பிஞ்ச், 156 ரன்கள் எடுத்திருந்தார். 
முக்கிய தினங்கள் (Important Days)

விவேகானந்தர் நினைவு நாள் - ஜூலை 4 
  • சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 12-1-1863 அன்று பிறந்தார். 
  • 1893-ம் ஆண்டு சிகாகோ நகரில் கொலம்பியன் கண்காட்சி அரங்கில் சர்வ மத மகா சபையில், அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே என்று சுவாமி உரையாற்றினார். 1902-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி மறைந்தார்.
மேரி கியூரி நினைவு தினம் - ஜூலை 4 
  • 1867-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி போலந்து நாட்டில் பிறந்தவர். 
  • உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார். அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது.
  • மேரி கியூரி, 1903-ம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். 
  • மேரி கியூரி, 1911-ம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றுள்ளார்.
TNPSC Current Affairs July 2-4, 2018 - Download as PDF

 Download Current Affairs and GK July 2-4, 2018
Post a Comment (0)
Previous Post Next Post