Current Affairs July 1, 2018 for TNPSC and Govt Exams, Tnpsc Current Affairs July 1, 2018, GK Today July 1, 2018, Read and Download as PDF File
Current Affairs July 1, 2018 - Click Here
Current Affairs Quiz July 1, 2018 - Click Here
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு ஜூலை 01, 2018
உலக நிகழ்வுகள் (International Affairs)
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல் 2018 - நான்கு சின்னங்கள் - சேர்ப்பு
- 42nd session of the World Heritage Committee, Manama, Bahrain (24 June to 4 July 2018)
- பஹ்ரைன் நாட்டின், மனாமா நகரில், 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டம், 2018 ஜூன் 24 முதல் ஜூலை 4 வரை அன்று நடைபெறுகிறது.
- ஜூன் 30 அன்று நடைபெற்ற கூட்டத்தில், புதிதாக நான்கு பாரம்பரிய சின்னங்கள் (New Inscribed Properties-2018), யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- இதில், இந்தியாவின், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, "விக்டோரியன் கோத்திக் மற்றும் ஆர்ட் டெக்கோ கட்டடகலைகள்" அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு (Victorian Gothic and Art Deco Ensemble of Mumbai) , பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
Victorian Gothic and Art Deco Ensemble of Mumbai |
புதிய நான்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் (ஜூன் 30, 2018)
- விக்டோரியன் மற்றும் ஆர்ட் டெக்கோ கட்டடங்கள், மும்பை, இந்தியா
- சசானித் தொல்பொருள் நிலவியல், ஃபார்ஸ் பிராந்தியம், ஈரான்
- 12 கிறிஸ்துவ தேவாலயங்கள் நாகசாகி பிரதேசம், ஜப்பான்
- சன்ஸா, மலை புத்தமடாலயங்கள், தென் கொரியா.
நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு - கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் - சேர்ப்பு
- நிதி மோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பை கட்டுபடுத்துவதற்காக, 1989-ம் ஆண்டு ‘நிதி செயல்பாட்டு நடவடிக்கைக்குழு’ (FATF) என்ற பெயரில் சர்வதேச குழு அமைக்கப்பட்டது.
- நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழுவின் (FATF) சிறப்பு கூட்டம் 2018 ஜூன் 27-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது.
- பயங்கரவாதிகள் மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குழுக்கள் நிதி சேகரிப்பதை தடுக்க தவறியதற்காக "பாகிஸ்தான் நாடு கருப்பு பட்டியலில்" சேர்க்கப்பட்டுள்ளது.
- FATF: Financial Action Task Force
இந்திய நிகழ்வுகள் (National Affairs)
2018 உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு: இந்தியா 35-வது இடம்
- 2018 ஆண்டின், உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு (Global Real Estate Transparency Index 2018) பட்டியலில், இந்தியா 35-வது இடத்தை பிடித்துள்ளது.
2018 இந்திய அழகி - அனுகீர்த்தி வாஸ் - குறிப்புகள்
- ‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி மும்பையில் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது.
- இதில் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் (வயது 19) இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Miss India 2018 Anukreethy Vas |
- 2017 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த "மனுஷி சில்லர்", அனுகீர்த்தி வாஸுக்கு மகுடம் சூட்டினார்.
- அனுகீர்த்தி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார்.
- உலக அழகிப்போட்டி சீனாவில் 2018 டிசம்பர் மாதம் நடக்க உள்ளது.
புவனேசுவரத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தால் - ரூ.50 அபராதம்
- ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்று புவனேசுவரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் "முதல் திருநங்கை வழக்கறிஞர் - சத்யஸ்ரீ ஷர்மிளா"
- தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை "சத்யஸ்ரீ ஷர்மிளா" இந்தியாவின் "முதல் திருநங்கை வழக்கறிஞர்" என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
Indias first Trangender Lawyer Sathyasri Sharmila |
- சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஜூன் 30 அன்று, சத்யஸ்ரீ ஷர்மிளா (வயது 36) வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையான சத்யஸ்ரீ ஷர்மிளா வழக்கறிஞர் ஆகியுள்ளார்.
- இராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் சத்தியஸ்ரீ சர்மிளா ஆவார்.
- தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி "இந்தியாவின் முதல் பெண் சப்-இன்ஸ்பெக்டராக" சென்னையில் ஏற்கனவே பணியில் சேர்ந்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரன்ஞால் பாடில் - பதவியேற்பு
- இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரன்ஞால் பாடில் (Pranjal Patil) ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
- தற்போது பிரன்ஞால் பாடில், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு துணை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
மாநாடுகள் (Conferences)
இந்தியத் தூதரக அதிகாரிகள் மாநாடு 2018 - டெல்லியில் தொடக்கம்
- பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் மாநாடு டெல்லியில் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை நடைபெறுகிறது.
முக்கிய தினங்கள் (Important Days)
தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1
- மருத்துவ வல்லுநரான பாரதரத்னா பி.சி. ராய் அவர்களின் பிறந்தநாள் (ஜூலை 1) “தேசிய மருத்துவர்கள் தினமாக” கொண்டாடப்படுகிறுது.
- 1962-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் பி.சி. ராய் அவர்களின் அவர்களுடைய பிறந்த நாளும் மறைந்த நாளுமாகிய ஜூலை 1-ந்தேதி மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது.
- பி.சி.ராய் 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
உலக நகைச்சுவை தினம் - ஜூலை 1
விளையாட்டு நிகழ்வுகள் (Sports Affairs)
கால்பந்து
2018 உலக கோப்பை கால்பந்து, இரஷ்யா - குறிப்புகள்
வெளியேறும் சுற்று (நாக்-அவுட்) போட்டிகள்
- பிரான்ஸ் அணி, வெளியேறும் சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா அணியை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.
- உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.
இளம் வயதில் இரட்டை கோல் அடித்த "கைலியன் பாப்பே"
- 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் குறைந்த வயதில் இரட்டை கோல் அடித்தவர் என்ற சிறப்பை "கைலியன் பாப்பே" பெற்றார்.
- பிரான்ஸ் அணியின் வீரர் 19 வயதான கைலியன் பாப்பே, அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை கோல் அடித்தார்.
கபடி
2018 மாஸ்டர்ஸ் கபடி: இந்தியா ‘சாம்பியன்’
- 2018 மாஸ்டர்ஸ் கபடி போட்டி, துபாய் நகரில் நடந்தது. ஆறு நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி 44-26 என்ற புள்ளி கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வேன்றது.
Current Affairs Quiz July 1, 2018 - Click Here and Test
Current Affairs July 1, 2018 - Click Here Download PDF