List of Yuva Puraskar and Bal Sahitya Puarakar Award Winners 2018 PDF


Yuva Puraskar 2018 and Bal Sahitya Puarakar 2018 Award Winners List (Tamil)

2018 சாகித்ய அகாடமியின் இளைஞர், சிறார் இலக்கிய விருதுகள் - பட்டியல் - சிறப்புத் தகவல் குறிப்புகள்

2018-ம் ஆண்டுக்கான "இளைஞர் படைப்பு மற்றும் சிறார் இலக்கியங்களுக்கான" சாகித்ய அகாடமி விருதுகள் (யுவ புரஷ்கார், பால சாகித்ய புரஷ்கார்), ஜூன் 22 அன்று அறிவிக்கப்பட்டன.
  • மொத்தம் 21 பேருக்கு யுவ புரஷ்கார் விருதும், 23 பேர் பால சாகித்ய புரஷ்கார் விருதும் பெறுகின்றனர். இதில் 2 பிரிவிலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
  • குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந்தேதி பால சாகித்ய புரஷ்கார் விருதுகள் வழங்கப்படுகிறது. யுவ புரஷ்கார் விருது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.
Yuva Puraskar 2018 for Tamil Language

2018 யுவ புரஷ்கார் விருது - சுனீல் கிருஷ்ணன் (அம்பு படுக்கை)
  • "அம்பு படுக்கை" என்ற சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களுக்கு யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • சுனீல் கிருஷ்ணன், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்.
  • செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது.
Bal Sahitya Puraskar 2018 for Tamil Language

2018 பால சாகித்ய புரஷ்கார் விருது - கிருங்கை சேதுபதி (சிறகு முளைத்த யானை)
  • "சிறகு முளைத்த யானை" என்ற கவிதை நூலை எழுதிய கிருங்கை சேதுபதி அவக்களுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது வழங்கப்படுகிறது. 
  • கிருங்கை சேதுபதி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்.
சாகித்ய அகாடமி விருதுகள்
  • ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன.
யுவ புரஷ்கார் விருது
  • இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமியின் "யுவ புரஷ்கார் விருதுகள்" வழங்கப்படுகின்றன. 
பால சாகித்ய புரஷ்கார் விருது
  • சிறார்களுக்காக எழுதப்படும் சீரிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமியின் "பால சாகித்ய புரஷ்கார் விருதுகள்" வழங்கப்படுகின்றன.
List of Yuva Puraskar and Bal Sahitya Puarakar Award Winners 2018 - Download PDF

Complete List of Yuva Puraskar 2018 Winners - Click Here Download PDF

Complete List of Bal Sahitya Purakar 2018 Winners - Click Here Download PDF
Post a Comment (0)
Previous Post Next Post