How To Prepare TNPSC Exams 2018 - Download Tips PDF
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? ஐந்து வெற்றிக் குறிப்புகள்) - Click Here Read and Download
TNPSC Group 2 Exam 2018 Preparation Steps
குருப் 2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? - வெற்றிக் குறிப்புகள் - Click Here Read and Download
How Success in TNPSC and other Competitive Exam
TNPSC தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
TNPSC தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்? இல்லை நான் சரியாகத்தான் படிக்கிறேனா?
தேர்வுக்கு படிக்கும் ஒவ்வொரு மாணவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது, இந்த கேள்விக்கான பதில் உங்களிடம் இருக்கிறதா? இல்லை என்றால்?
உங்களுடைய வெற்றிக்கு, உங்கள் தேர்வு தயாரிப்பு நுட்பங்களை சரி செய்ய வேண்டும்.
தேர்வு தயாரிப்புக்கான முக்கிய வெற்றிக் குறிப்புகள்
முதலில் நீங்கள் முடிவு செய்து விடுங்கள், இந்த தேர்வில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்! நிச்சயம் நான் இந்த வருடம் அரசு பணியில் சேர்ந்து விடுவேன்! என்று,
இந்த உங்கள் நம்பிக்கை உங்களுக்கு ஒரு தெளிவான மனநிலையை கொண்டு வரும், இந்த தெளிவு நிலை தேர்வில் கேள்விகளை எதிர்கொள்ளும் வலிமையை கொடுக்கும்.
வெற்றி என்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணருங்கள்! அது உங்களை வெற்றிக்கு கோட்டின் எல்லைகளை எளிதாக கடக்கும் ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும்.
உங்கள் வெற்றிக்கு உதவும் எளிமையான குறிப்புகள்:
விழுந்து, விழுந்து படிக்க வேண்டாம்! ஸ்மார்ட்டாக படியுங்கள்!
வெற்றிக்குத் கடின உழைப்பு தேவை என்றாலும், அதுவே வெற்றிக்கு போதுமானதாக இல்லை! அதே நேரத்தில் புத்திசாலித்தனமாக படியுங்கள்!
எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தின்படி (SYLLABUS), தேவையற்ற பகுதிகளை தவிர்த்து, தேவையான பாடங்களை மட்டும் படிப்பது, உங்கள் வெற்றியை மிக விரைவாக்கும்.
நடைமுறை அணுகுமுறை!
உங்களிடம் எல்லா பாட புத்தகங்களும் இருக்கும், ஆனால் எதில் இருந்து தொடங்குவது, எதை முதலில் படிப்பது, என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், சரியான நேரத்தில் சரியானவற்றை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, முதலில் நீங்கள் தமிழ்நாடு பாடப்புத்தகங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், பின்னர் பொதுவில் கிடைக்கும் சில புத்தகங்களை படிக்கலாம்.
தள்ளிப் போடுவதை நிறுத்துங்கள்!
ஒன்றை இழந்தால் தான்! ஒன்றை பெற முடியும்! நமக்கு தற்போது தேவையான பொன் மொழி இதுவாகும்.
திட்டமிட்டுவிட்டு, படிப்பதை தள்ளிவைக்காதீர்கள்!
இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு, இன்னைக்கு படம் ரிலீஸ் ஆகி இருக்கு, இவை போன்ற விஷயங்களை, பின்னொரு நாளில் நீங்கள் பார்க்க முடியும்,
ஆனால் தேர்வுகள், வாய்ப்புகள் உங்களுக்கு, மீண்டும் வராது, உங்கள் வயது, அல்லது தேர்வு அறிவிக்கைகள் உங்கள் இலக்குகளை
எட்டவிடாமல் செய்யலாம்.
நேரத்தை சரியாக பயன்படுத்துவது என்பது வெற்றியை விரைந்து சேர்க்கும் வழியாகும், இதை திறமையாக பயன்படுத்துவோம்.
இன்றே படிப்போம், இன்றே முடிப்போம், எதையும் தள்ளி வைக்காதீர்கள்! தாமதிக்காதீர்கள்!
தேர்வில் வெற்றிபெற்றோம் என்பது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும், அதற்காக நாம் நேரத்தையும், உழைப்பையும் அறிந்து பயன்படுத்துவோம்.
பயிற்சி, மேன்மேலும் பயிற்சி!
மாதிரி தேர்வுகள் தொடர்ந்து எழுத வேண்டும், மாதிரி தேர்வு பயிற்சிகள், நமக்கு நேர மேலாண்மையை கற்று கொடுக்கும், மேலும் தேர்வின் போது குறித்த நேரத்தில் சரியாக பதில் அளிக்க முடியும்.
வாரம் தோறும், முந்தைய ஆண்டு வினா-விடைகளை தொடர்ந்து பயிற்சி செய்து பார்க்க வேண்டும், பயிற்சி மற்றும் தொடர் முயற்சி நம்மை வெற்றி மகுடம் சூட வைக்கும்.
கேள்விகள் கேளுங்கள்!
படிக்கும் பொது, சந்தேகம் எழும் தருணத்தில், உடனே, உங்கள் சந்தேகங்களை விவாதிக்கவோ, தெரிந்தவர்களிடம் கேட்டு போக்கி கொள்வது முக்கியம்.
பலர் தங்கள் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு, தங்கள் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதில் வெட்கப்படுகிறார்கள்.
வெட்கப்படுவது.... நமக்கு வேட்டு வைக்கும், கேளுங்கள், உடன் எழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.
வெட்கத்தை விட்டு வெளியே வாருங்கள்... வானம் வசப்படும்....
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
நீங்கள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தை, கவனத்தை செலுத்தி, தவறுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள்
புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த முறை அதே தவறை மீண்டும் செய்யாதிருக்க வாய்ப்பு ஏற்படும், இதனால் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
மேலும் எளிய உடற்பயிற்சிகள், நடை பயிற்சிகள், தயாரிப்புகளில் கடினமான கட்டங்களை எதிர்கொள்ள வகையில் உங்களுக்கு உதவலாம்.
பிடித்தவற்றில் மனதை செலுத்துங்கள்!
படிப்புக்கான இடைவேளைகளில் சிறிது நேரம் உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
புத்தகங்கள் படித்து, உங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் விளையாட, உங்கள் நண்பர்களுடன் பேச, உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் மனதை செலுத்துங்கள், இந்த சிறிய விஷயங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும்.
விடாமுயற்சி முக்கியம், உங்கள் இலக்குகளை ஒருபோதும் இழக்காதீர்கள்.
உங்கள் இலக்கை நினைவில் வையுங்கள், ஆயிரம் கைகள் கூட சூரிய ஒளியை மறைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரியாக செய்தால், எதுவும் சாத்தியம். வெற்றி நமதே!