உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக "இந்து மல்கோத்ரா" பதவியேற்பு
- உச்சநீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக பணியாற்றி வந்த இந்து மல்கோத்ரா "நேரடியாக நீதிபதியாக" நியமனம் பெற்றுள்ளார். "நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற முதல் பெண் வக்கீல்" இந்து மல்கோத்ரா ஆவார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய நீதிபதி "இந்து மல்கோத்ரா" அவர்களுக்கு ஏப்ரல் 27 அன்று பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.
- நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் முதல் பெண் வக்கீல் "இந்து மல்கோத்ரா" (வயது 61).
இந்து மல்கோத்ரா - 7-வது உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி
- உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1989-ல் பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தின் 7-வது பெண் நீதிபதி ஆவார். மற்ற பெண் நீதிபதிகள் அனைவரும் உயர்நீதிமன்றங்களில் இருந்து பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் ஆவர்.
உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் (1950-2018)
2018 ஆம் ஆண்டு வரை 65 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் மொத்தம் "07 பெண் நீதிபதிகள்" பதவியேற்றுள்ளார்கள். அவர்கள் விவரம்:
- பாத்திமா பீவி
- சுஜாதா வி மனோகர்
- ரூமா பால் (நீண்ட காலம் பெண் நீதிபதியாக இருந்தவர்)
- கியான் சுதா மிஸ்ரா
- ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
- ஆர். பானுமதி (தமிழ்நாட்டை சேர்ந்தவர்)
- இந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)
தற்போது உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளாக உள்ளவர்கள்: இருவர் ஆவார்கள் விவரம் (ஏப்ரல் 30, 2018)
- ஆர். பானுமதி
- இந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)