Current Affairs July 7th, 2018 in Tamil for TNPSC Exams
நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு - ஜூலை 7, 2018
உலக நிகழ்வுகள் (INTERNATIONAL AFFAIRS)
இலங்கை அம்பாந்தோட்டை விமான நிலைய மேம்பாடு: இந்தியா பங்கேற்பு
- இலங்கையின் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மட்டாலா ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை அந்நாட்டுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
- பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் (ஜூலை 6) தீர்ப்பளித்துள்ளது.
பூடான் பிரதமர் "ஷெரிங் டோப்கே" - இந்தியா வருகை
- பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜூலை 6 அன்று சந்தித்துப் பேசினார்.
- பாதுகாப்புத் துறை, வர்த்தகம், ராஜ்ஜிய ரீதியிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஆந்திராவில் அரசு திட்டத்தில் 3 லட்சம் வீடுகள் - பெண்களின் பெயரில் பதிவு
- ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் NTR நகர்புற வீட்டமைப்பு திட்டம் , பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்புறம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-ஊரகப்பகுதி ஆகியவற்றின் கீழ் ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன, இந்த வீடுகள் அனைத்தும், பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா-UNESCO இடையே "கேமிங் டிஜிட்டல் கற்றல் மைய ஒப்பந்தம்"
- ஆந்திர மாநில அரசு மற்றும் ஐ. நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) பிரதிநிதிகள், சமீபத்தில் மாநிலத்தில் ஒரு கேமிங் டிஜிட்டல் கற்றல் மையத்தை (Gaming Digital Learning Hub) நிறுவுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டப் பட்டுள்ளது.
- UNESCO: United Nations Educational, Scientific and Cultural Organisation
வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்: டெல்லி அரசு ஒப்புதல்
- பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை, வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தலைமை நீதிபதிக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- அரசியல் சட்டத்தில் தலைமை நீதிபதியின் இந்த அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதியிடம் இருப்பது அவசியம். எனவே, வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு.
- தலைமை நீதிபதி, கொலீஜியம் அமைப்பின் மூத்த நீதிபதிகளிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் "அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து பரிசோதனை"
- பஞ்சாப் மாநிலத்தில், அரசு ஊழியர் நியமனம், பதவி உயர்வு மற்றும் குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் நடக்கும் மருத்துவ பரிசோதனையின்போது போதை மருந்து பரிசோதனை நடத்த அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
- துப்பாக்கி உரிமம் கோருவோருக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நியமனம்/பதவியேற்பு (APPOINTMENTS)
தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக "நீதிபதி ஆதர்ஷ் குமார்" - நியமனம்
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal) தலைவராக "நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்" நியமிக்கப்பட்டுள்ளார்.
- நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்.
- தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக பணியாற்றி வந்த நீதிபதி ஸ்வாதந்தர் குமார், 2017 டிசம்பர் 20-ந் தேதி ஓய்வு பெற்றார்.
- பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த நீதிபதி உமேஷ் தத்தாத்ரேயா, 2018 பிப்ரவரி 13-ந் தேதி பணி ஓய்வு பெற்றார்.
- நீதிபதி ஜாவத் ரகிம் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் (2010)
- இந்திய சுற்றுப்புறச்சூழலுக்கு மிகப்பெரிய பாதுகாவலனாக விளங்குவது தேசிய பசுமை தீர்ப்பாயம், 18.10.2010 அன்று ஏற்படுத்தப்பட்டது.
- காற்று மாசுபாடு, கங்கை புனரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுச்சூழல் தொடர்பான புகார்களை தேசியப் பசுமை தீர்பபாயம் விசாரித்து வருகிறது.
- தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு டெல்லியில் உள்ளது.
- போபால், புனே, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மண்டல அமர்வுகள் செயல்படுகின்றன.
சீன பன்னாட்டு வர்த்தகப் பள்ளி தலைவராக "தீபக் ஜெயின்" நியமனம்
- சீனாவில் உள்ள பன்னாட்டு வர்த்தகப் பள்ளியின் தலைவராக தீபக் ஜெயின் என்ற இந்திய பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தீபக் ஜெயின், தற்போது அமெரிக்காவில் முன்னணி பேராசிரியராக பணியாற்றி வருபவர். தீபக் ஜெயின், அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்.
இந்திய கொடுப்பனவுகள் கவுன்சில் தலைவாக "விஸ்வாஸ் படேல்" - நியமனம்
- இந்திய கொடுப்பனவுகள் கவுன்சில் புதிய தலைவராக "விஸ்வாஸ் படேல்" (Vishwas Patel, Chairman of Payments Council of India) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள் (CONFERENCES)
2018 உலகத் தமிழ் இணைய மாநாடு - கோவையில் தொடக்கம்
- உத்தமம் அமைப்பு மற்றும் தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு ஆகியவை இணைந்து நடத்தும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடுயில் ஜூலை 6 முதல் 8 வரை, கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.
விருதுகள் (AWARDS)
2018 சிற்பி இலக்கிய விருது பெறும் - கவிஞர் மகுடேசுவரன்
- 2018 ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது, கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிற்பி அறக்கட்டளை’ ஆண்டுதோறும் தமிழின் தலைசிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது.
பொருளாதாரம் (ECONOMICS)
GST வருவாய் - நாட்டிலேயே தமிழ்நாடு நான்காவது இடம்
- சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) புதிதாக பதிவு செய்வோர் எண்ணிக்கை மற்றும் வருவாயில் நாட்டில் 4-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
- தமிழ்நாடு மண்டலத்தில் கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரொக்கம் மற்றும் உள்ளீட்டு வரியாக ரூ.2.26 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று GST முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிகழ்வுகள் (TAMILNADU AFFAIRS)
தஞ்சாவூரில் அமையும் - ஐந்திணைப் பூங்கா
- சங்க கால நிலத்திணைகள் குறித்து இளம் தலைமுறையினருக்கு விளக்கும் விதமாக, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் "ஐந்திணைப் பூங்கா"வை தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை அமைக்கிறது.
கன்னியாகுமரியில் "சவுகாச் ஆபரேஷன்" ஒத்திகை
- கடல் வழி தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க, கன்னியாகுமரி கடல் பகுதியில், 'சவுகாச் ஆபரேஷன்' என்ற பெயரில், ஜூலை 5 அன்று நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வுகள் (SPORTS AFFAIRS)
2018 உலக கோப்பை கால்பந்து - குறிப்புகள்
- பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
- பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - தோனி சாதனை
- 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடி மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார். இதுவரை 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 T20 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இந்தியராக இந்த சாதனையை படைத்துள்ளார்.
500 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் விவரம்:
- சச்சின் டெண்டுல்கர் - 664
- மஹேல ஜெயவர்தனெ - 652
- குமார் சங்ககாரா - 594
- சனத் ஜெயசூர்யா - 586
- ரிக்கி பாண்டிங் - 560
- ஷாஹித் அஃப்ரிடி - 524
- ஜாக்கஸ் கலீஸ் - 519
- ராகுல் டிராவிட் - 509
- மகேந்திர சிங் தோனி - 500
முக்கிய நிகழ்வுகள் (IMPORTANT DAYS)
சர்வதேச கூட்டுறவு தினம் - ஜூலை 7
- ஆண்டுதோறும் ஜூலை 7 அன்று, சர்வதேச கூட்டுறவு தினம் (International Day of Cooperatives) கடைபிடிக்கப்படுகிறது.
- 2018 சர்வதேச கூட்டுறவு தின கருப்பொருள்: ஒத்துழைப்பு மூலம் நிலையான சமூகங்கள் (Sustainable societies through cooperation)