Daily Current Affairs Quiz 2019-2018 |
---|
Daily Current Affairs Notes 2019-2018 |
14500 Model Questions Answers |
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairsஇந்தியா-ஓமன் கூட்டு ராணுவப்பயிற்சி "Al Nagah 2019" தொடக்கம்
- இந்தியா-ஓமன் நாடுகள் இடையே ஓமன் நாட்டின், ஜபல் அல் அக்தர் மலைப்பகுதியில், அல் நாகா III (Exercise Al Nagah) எனப் பெயரிடப்பட்டுள்ள இருதரப்பு கூட்டு ராணுவப்பயிற்சி, 2019 மார்ச் மாதம்12 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
- அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் தயாரித்துள்ள "டிராகன்" (SpaceX Dragon) எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலம், ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து 2.3.2019 அன்று விண்ணில் செலுத்தியது.
- "டிராகன்" விண்கலம் 3.3.2019 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை (International Space Station) அடைந்தது.
- இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை (Samjhauta Express/Friendship Express) பாகிஸ்தான் 4.3.2019 முதல் மீண்டும் தொடங்கியது.
- புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியதால் சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது.
- சம்ஜெளதா விரைவு ரயில் சேவை: புதுதில்லி-லாகூர்
- தில்லியில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், லாகூரில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
- இந்தியப் பகுதியில் தில்லியில் இருந்து அட்டாரி வரையிலும், பாகிஸ்தான் பகுதியில் வாகாவில் இருந்து லாகூர் வரையிலும் இயக்கப்படுகிறது.
- சிம்லா ஒப்பந்தம் (1971)
- இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் கடந்த 1971-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகு சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது.
Pradhan Mantri Shram Yogi Maan-dhan "PM-SYM" திட்டம் - தொடக்கம்
- பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் வஸ்த்ரா நகரில் "பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (PM-SYM) யோஜனா" என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.
- PM-SYM என்பது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆகும்.
- PM-SYM: Pradhan Mantri Shram Yogi Maan-dhan
ஆதார் அவசரச் சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- வங்கிக் கணக்குத் தொடங்கவும், புதிய சிம் கார்டுகளை வாங்கவும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு (Aadhaar Ordinance 2019) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஆதார் சட்டத்தின் 57-ஆவது பிரிவில், ஆதாரை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்தின் மூலம், அது நீக்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்கான சிறந்த சேவை விருதுகள்
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில், 25 ஆண்டுகால சிறந்த சேவைக்காக, சூலூர் விமானப்படை 5-வது அணி பணிமனைக்கும், ஆந்திர மாநிலம் ஹகிம்பேட் விமானப்படை தளத்துக்கும் சிறந்த சேவை விருதுக்காக தனி கொடியை வழங்கினார்.
- குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 4.3.2019 அன்று தொடங்கி வைத்தார்.
- முதல் கட்டமாக 6.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. (Ahmedabad Metro first phase 2019)
- நர்மதை நதியில் மிகையாக ஓடும் நீரை சௌராஷ்டிர பகுதிக்கு பயன்படுத்தும் செளராஷ்டிர நர்மதா நீர்பாசனத் திட்டம், புதிய மருத்துவமனை உள்பட பல்வேறு திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார்.
ஒடிசா மாநில லோக்ஆயுக்தா தலைவராக "நீதிபதி அஜித் சிங்" நியமனம்
- ஒடிசா மாநில லோக்ஆயுக்தா அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் தலைமை "நீதிபதி அஜித் சிங்" நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்
பெண்கள் ஒரு நாள் போட்டி தரவரிசை 4.3.2019
- பேட்டிங் தரவரிசை
- பெண்களுக்கான ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை "ஸ்ம்ரிதி மந்தனா" முதலிடத்தில் நீடிக்கிறார்.
- ஸ்ம்ரிதி மந்தனா (இந்தியா)
- எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
- நியூசிலாந்து (சாட்டர்த்வெய்ட்)
- மிதாலிராஜ் (இந்தியா)
- பந்து வீச்சாளர் தரவரிசை
- பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
- ஜூலன் கோஸ்வாமி (இந்தியா)
- ஜெஸ் ஜோனசென் (ஆஸ்திரேலியா)
- சனா மிர் (பாகிஸ்தான்).
முக்கிய தினங்கள்/ Important Days and Observances
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day 2019) - மார்ச் 04
- ஆண்டுதோறும் மார்ச் 4 ஆம் தேதி, தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day 2019) இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
- தேசிய பாதுகாப்பு தினம் மார்ச் 4 முதல் 10 வரை (National Safety Week 4-10, March 2019) கடைபிடிக்கப்படுகிறது.
- 2019 தேசிய பாதுகாப்பு வாரம் மையக்கருத்து: நாட்டை கட்டமைப்பதற்கான நீடித்த அறுவடை பாதுகாப்புக்கான கலாச்சாரம் (Cultivate and Sustain a Safety Culture for Building Nation).
முக்கிய தினங்கள்/ Important Days and Observances
TNPSC Current Affairs 4-5th March 2019 PDF
TNPSC Link
File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.