Daily Current Affairs Quiz 2019-2018 |
---|
Daily Current Affairs Notes 2019-2018 |
14500 Model Questions Answers |
உலக நிகழ்வுகள்/ International Affairs
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை 2019
- 28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. (Brexit 2019, Friday, 29 March, 2019)
- ‘பிரெக்ஸிட்’ 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு அளித்தனர்.
- ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு 2019 மார்ச் 29-ந் தேதி முடிவடைகிறது.
- ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக ஈரான் நாட்டுடன் "INSTEX" என்று அழைக்கப்படும் ஒரு கட்டண சேனலை (payment channel) நிறுவியுள்ளன.
- ஈரான் நாட்டுடன் வர்த்தகத்தைத் தொடரவும் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தடுக்கவும் இந்த INSTEX Payment Channel உதவுகிறது.
- உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 50 லட்சத்துக்கும் அதிகமான கழுதைகள் வாழ்கின்றன. சீனாக்கு பாரம்பரிய மருந்துகளை தயார் செய்ய கழுதைகள் தேவைப்படுவதால், பாகிஸ்தான் சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யவுள்ளது.
இந்திய நிகழ்வுகள்/ National Affairsமனித விண்வெளி விமான மையம் (HSFC), பெங்களூரு
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) "மனித விண்வெளி விமான மையத்தை" (Human Space Flight Centre, HSFC) பெங்களூரு நகரில் தொடங்கியுள்ளது.
- ISRO-வின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் (Gaganyaan project) திட்டங்களின் மையமாக Bengaluru, HSFC மையம் செயல்படும்.
- தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவகம் (NSSM), குஜராத் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.
- தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவகம் (National Salt Satyagraha Memorial, NSSM) குஜராத் மாநிலத்தின் நாவ்சரி மாவட்டத்தில் உள்ள தண்டி நகரில், ஜனவரி 30, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 2019 ஜனவரி 30 அன்று, காந்திய அடிகளின் 71-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- நாட்டில் மொத்தம் உள்ள, 4,378 நகரங்களில், 4,140 நகரங்களில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம், முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விருதுகள்/ Awards2019 விக்டோரியா இலக்கிய விருது: பௌரெஸ் பூனானி
- ஆஸ்திரேலியா நாட்டின் இலக்கியத்திற்கான உயர்ந்த "விக்டோரியா விருது" (2019 Victorian Prize for Literature), பௌரெஸ் பூனானி (Behrouz Boochani) என்ற .ஈரானிய புகலிடம் கோரும் அகதி பெற்றுள்ளார்.
- பெஹ்ரூஸ் பூனானி “No Friend But the Mountains: Writing from Manus Prison” என்ற தனது படிப்பிற்காக இந்த விருதை பெறுகிறார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairsசாலை பாதுகாப்பு வார விழா 2019
- பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கில் தமிழ் நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் “சாலைப் பாதுகாப்பு வாரம்” கடைப்பிடிக்கப்படுகிறது.
- 2019-ஆம் ஆண்டு, 30-வது சாலை பாதுகாப்பு வார விழா, 4-2-2019 முதல் 10-2-2019 வரை “சாலை பாதுகாப்பு உயிர்ப் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
- (Road Safety Week 2019: 4th-10th February 2019).
- தமிழ்நாட்டில் யானைகளுக்கு 101 வழித்தடங்கள் உள்ளன. 101 வழித்தடங்களும் வீடுகள், மற்ற இடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairsகிரிக்கெட்
இந்திய-நியூசிலாந்து ஒரு நாள் தொடர்: இந்திய அணி (4-1) வெற்றி
- இந்திய-நியூசிலாந்து அணிகள் இடையே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது. இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
- தொடர்நாயகன் விருது - முகமது ஷமி
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (4 போட்டிகள், 9 விக்கெட்ட்டுகள்) தொடர்நாயகன் விருதை பெற்றார்.
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் 2019
- 2019 தாய்லாந்து ஓபன் டென்னிஸ் (2019 Thailand Open tennis) போட்டியில் உக்ரைன் வீராங்கனை, டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா (Dayana Yastremska) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019உலக தொழுநோய் தினம் - கடைசி ஞாயிறுக்கிழமை, ஜனவரி
- உலக தொழுநோய் தினம் (World Leprosy Day) ஆண்டுதொறும் ஜனவரி மாத கடைசி ஞாயிறுக்கிழமை, கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2019) 27 ஜனவரி அன்று கடைபிடிக்கப்பட்டது.
- உலகளாவிய தொழுநோய் தினம் (WLD) ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஜனவரி மாதம் ஞாயிறன்று விழிப்புணர்வு, பாகுபாடு மற்றும் சமூக ஒற்றுமை தாக்கம் மற்றும் இந்த எதிர்மறை விளைவுகளை நோய் பரவுவதை நிறுத்த முயற்சிகள் தடுக்க எப்படி பற்றி விழிப்புணர்வு.
- இந்த ஆண்டு, 2019 உலக தொழுநோய் தின மையக்கருத்து:
- "பாகுபாடு, களங்கம் மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருதல்" (Ending discrimination, stigma and prejudice) என்பதாகும்.
TNPSC Current Affairs 4th February 2019 PDF
TNPSC Link
File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.