TNPSC Current Affairs 15-17th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 15-17, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
"வாயு சக்தி -2019", போக்ரான், இராஜஸ்தான்
  • இராஜஸ்தான் மாநிலம் போக்ரான் நகரில், இந்திய விமானப்படையின் "வாயு சக்தி -2019" என்ற "சுடுதிறன்/குண்டு வீச்சு பயிற்சி நடவடிக்கை", 2019 பிப்ரவரி 10 முதல் 18 வரை நடைபெறுகிறது. 
  • "வாயு சக்தி பயிற்சி நடவடிக்கை" 1989 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, போக்ரான் பகுதியில் நடைபெறுகிறது. 
  • 'Exercise Vayu Shakti 2019' at Pokhran Field Firing Range, VAYUVayu Shakti 2019 Firepower Demonstration.
  • போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பயிற்சியில் ஈடுபட்டன. மிக்-29, சுகோய்-30, மிரேஜ்-2000, ஜாகுவார், மிக்-21, பைசான், மிக்-27, ஹெர்குலிஸ், ஏஎன்-32 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 137 போர் விமானங்கள் "வாயு சக்தி' ஒத்திகையில் ஈடுபட்டன.
  • இராணுவத் தலைமை தளபதி விபின் ராவத், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இ
வந்தே பாரத்’ ரெயில்: தொடங்கி வைப்பு 
  • நாட்டின் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் (Vande Bharat Express), டெல்லி-வாரணாசி இடையே 15.2.2019 அன்று டெல்லியில் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 
  • ‘வந்தே பாரத்’ ரெயில் 17.2.2019 முதல் வர்த்தக ரீதியிலான பயணத்தை தொடங்குகிறது. 
  • ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில், இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லா அதிவேக ரயில் (India’s first engine-less Semi-High Speed Train , SHST) ஆகும். 
கோவா மாநில பாரம்பரிய இசை கருவி - "Ghumot" 
  • கோவா மாநிலத்தின் பாரம்பரிய இசை கருவியாக "Ghumot" அறிவிக்கப்பட்டுள்ளது.
  • "Ghumot" என்பது ஒரு மண் பாத்திரத்தில் செய்யப்படும் தோல் இசை கருவி ஆகும். 
  • Ghumot declared as heritage musical instrument of Goa.
'Undaunted: Saving the Idea of India' - புத்தகம் வெளியீடு 
  • 'Undaunted: Saving the Idea of India' என்ற தலைப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் (P Chidambaram) எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நானக் சிங் கவிதை 'Khooni Vaisakhi' ஆங்கிலத்தில் வெளியீடு 
  • 1920-இல் ஜாலியன் வாலா படுகொலை பற்றி எழுதப்பட்ட கவிதை 'Khooni Vaisakhi' ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. 
  • நானக் சிங் (Nanak Singh) எழுதிய ஜாலியன் வாலா படுகொலை பற்றிய கவிதை 'Khooni Vaisakhi', தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
அனைத்து அவசர உதவிக்கும் ‘112’ எண் அறிமுகம் - குறிப்புகள் 
  • போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என எல்லா அவசர உதவிக்கும் ‘112’ என்ற ஒரே எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’ என்ற நடைமுறை, இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது.
  • தற்போது தமிழநாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 2019 பிப்ரவரி 19-ந்தேதி இத்திட்டத்தில் இணைகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.
  • தற்போது, அவசர போலீஸ் உதவிக்கு ‘100’ என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு ‘101’ என்றும், ஆம்புலன்சுக்கு ‘108’ என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு ‘1090’ என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் (HELPLINE) உள்ளன.
  • இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ‘112’ என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் ‘911’ என்ற ஒரே எண் இருப்பதுபோல், இந்தியாவில் இதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
  • இத்திட்டத்தில் இணைய ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக அவசர உதவி மையம் உருவாக்கப்பட வேண்டும்.இந்த மையங்கள், மாவட்ட கட்டுப்பாட்டு மையத்துடனும், அவசர உதவி வாகனங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கும். 
காஷ்மீரில் கார் குண்டு தாக்குதல் (Pulwama attack)
  • ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில், துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) விடுமுறையில் சென்றிருந்த 2 ஆயிரத்து 547 பேர் பிப்ரவரி 14 அன்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 
  • வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர், இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
PAN எண்ணுடன் AADHAR எண்ணை இணைப்பது கட்டாயம்
  • “வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) ஆதார் எண்ணை (AADHAR) இணைப்பது கட்டாயம். இப்பணியை 2019 மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, வருமான வரித்துறையை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 
இமாசல பிரதேசத்தில் 2-ஆவது அரசு மொழி - சம்ஸ்கிருதம் 
  • இமாசல பிரதேசத்தில் சம்ஸ்கிருத மொழியை, 2-ஆவது அரசு மொழியாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் 16.2.2019 அன்று நிறைவேறியது.
4G செல்பேசி பதிவேற்ற, பதிவிறக்க வேகப்பட்டியல் - ஜனவரி 2019 
  • 2019 ஜனவரி மாதத்தில் செல்பேசிகளின் பதிவேற்றம், பதிவிறக்க வேகம் குறித்த TRAI அமைப்பு "Myspeed" செயலி உதவியுடன் 2019 ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் புள்ளிவிவரங்களை வெளியீட்டுள்ளது. (4G download and upload speed chart january 2019). அவற்றின் விவரம்:
  • Mbps: Megabit Per Second 
  • 4G பதிவிறக்க வேகப்பட்டியல் (ஜனவரி 2019) 
    • (4G download speed chart) 
      • Reliance Jio - 18.8 Mbps
      • Bharti Airtel - 9.5 Mbps
      • Vodafone - 6.7 Mbps
      • Idea Cellular - 5.5 Mbps
  • 4G பதிவேற்றவேகப்பட்டியல் (ஜனவரி 2019) 
    • (4G upload speed chart) 
      • Idea Cellular - 5.8 Mbps
      • Vodafone - 5.4 Mbps
      • Reliance Jio - 4.4 Mbps
      • Bharti Airtel - 3.8 Mbps.
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
  • தேசிய அவசரநிலை சட்டம் பிரிவு 201-ன்படி நாட்டில் அவசர நிலை, எல்லை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
  • மெக்சிகோ எல்லை - தடுப்புச்சுவர்
    • மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.
    • மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக தற்போது நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உள்ளார். 
நியமனங்கள்/ Appointments
இந்திய தேர்தல் கமிஷனராக "சுஷில் சந்திரா" நியமனம்
  • இந்திய தேர்தல் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா அவர்கள் 14.2.2019 அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக "சுனில் அரோரா" உள்ளார். (Sushil Chandra appointed the new Election Commissioner).
  • தேர்தல் கமிஷனர்கள் 6 வருடங்கள் அல்லது 65 வயது வரை பணியாற்றுவார்கள். 
  • அசோக் லாவசா தேர்தல் ஆணையராக உள்ளார்.
  • இந்திய தேர்தல் தேர்தல் ஆணையர்கள்
    • சுனில் அரோரா - தலைமை தேர்தல் ஆணையர்
      • Sunil Arora, Chief Election Commissioner (CEC)
    • அசோக் லாவசா - தேர்தல் ஆணையர்
      • Ashok Lavasa, Election Commissioner (EC) 
    • சுஷில் சந்திரா - தேர்தல் ஆணையர்
      • Sushil Chandra, Election Commissioner (EC).
மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் "பிரமோத் சந்திர மோடி" 
  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes, CBDT) புதிய தலைவராக பிரமோத் சந்திர மோடி (Pramod Chandra Mody) 15.2.2019 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
  • மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக இருந்த சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 
அருண் ஜெட்லி நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பு 
  • மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக ஜனவரி 13-ந்தேதி அமெரிக்காவுக்கு சென்றார். இதனால் அவர் வகித்து வந்த நிதி அமைச்சக பொறுப்பு ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. 
  • உடல் நலம் தேறிய அருண் ஜெட்லி, நிதித்துறையை அமைச்சராக 15.2.2019 அன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 
சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் "கே.பிச்சுமணி" 
  • திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக "கே.பிச்சுமணி" நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
மாநாடுகள்/ Conferences
சர்வதேச அணைகள் பாதுகாப்பு மாநாடு-2019
  • ஐந்தாவது சர்வதேச அணைகள் பாதுகாப்பு மாநாடு-2019, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில், பிப்ரவரி 13 -14 தேதிகளில் நடைபெற்றது. இந்த அணைகள் பாதுகாப்பு மாநாடு, ஒடிசா அரசு மற்றும் உலக வங்கியின் கூட்டு முயற்சியாக நடைபெற்றது. 
  • 5th International Dam Safety Conference -2019, Bhubaneswar, Odisha.
உலக நிலையான வளர்ச்சி மேம்பாட்டு உச்சிமாநாடு-2019
  • உலக நிலையான அபிவிருத்தி உச்சிமாநாடு (WSDS 2019, World Sustainable Development Summit), 2019 பிப்ரவரி11-13 தேதிகளில், புதுடில்லியில், 'Attaining the 2030 Agenda: Delivering on Our Promise' என்ற மையக்கருத்தில், நடைபெற்றது.
  • பிஜி நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமரமா" (Frank Bainimarama) அவர்களுக்கு, இம்மாநாட்டில் 'நிலையான வளர்ச்சி மேம்பாட்டு தலைமை விருது 2019, வழங்கப்பட்டது. (Sustainable Development Leadership Award 2019). 
  • இந்த மாநாடு எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) நடத்தும், வருடாந்திர நிகழ்வு ஆகும். (TERI, Energy and Resources Institute's).
இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம் 2019 
  • மூன்றாவது இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம் (Indo-German Environment Forum 2019) புதுடெல்லியில், 2019 பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. "சுத்த காற்று, பசுமை பொருளாதாரம்" (Cleaner Air, Greener Economy) என்ற தலைப்பில் இந்த கருத்துக்களம் நடைபெற்றது.
விருதுகள்/ Awards and Honors
தாகூர் கலாச்சார நல்லிணக்க விருதுகள் 2014, 2015 & 2016
  • 2019 பிப்ரவரி18 ஆம் தேதி, புது தில்லியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2014, 2015 & 2016 ஆம் ஆண்டுகளுக்கான நல்லிணக்கதிற்கான தாகூர் (Tagore Award for Cultural Harmony) விருதுகளை வழங்கினார். 
  • விருதுகள் பெற்றோர் விவரம்:
    • 2014 ராஜ்குமார் சிங்கஜித் சிங் (Rajkumar Singhajit Singh)
    • 2015 - சஹாய்னாட் (Chhayanaut, a cultural organization of Bangladesh)
    • 2016 - ராம் சூடர் வஞ்சி (Ram Sutar Vanji) 
பொருளாதார நிகழ்வுகள்/ Economic Affairs
பாகிஸ்தானுக்கு "வர்த்தக ரீதியில் ஆதரவான நாடு" தகுதி பறிப்பு 
  • காஷ்மீர் "புலவாமா" தாக்குதலை தொடர்ந்து ‘வர்த்தக ரீதியில் ஆதரவான நாடு’ என பாகிஸ்தானுக்கு அளித்திருந்த சலுகையை மத்திய அரசு பறித்துள்ளது.
  • இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக ஐ.நா. கணக்கிட்டு இருந்தது. 
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்/ Environmental Affairs
"மோசமான காற்று மாசு" பிரிவில் டெல்லி தலைநகர் பகுதி நீடிப்பு
  • டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் 16.2.2019 அன்று மிதமான மழையின் காரணமாக காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீட்டில் மோசமான காற்று மாசு பிரிவில் இடம்பெற்றது. 
  • P.M. 2.5 மாசு நுண்துகள் 165 ஆகவும், P.M. 10 மாசு நுண்துகள் 87 ஆகவும் பதிவானது.
  • காற்றின் தரக் குறியீடு
    • காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்ல பிரிவிலும், 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமான பிரிவிலும், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான பிரிவிலும் , 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/Tamil Nadu Affairs
தமிழ்நாடு அரசின் மணிமண்டபம், அரசு விழா - அறிவிப்புகள் 
  • தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 2019 பிப்ரவரி 14 அன்று விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மணிமண்டபம், அரசு விழா அறிவிப்புகள் விவரம்;
  • கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை - மணிமண்டபம் & நூலகம்
    • தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மாலை சூட்டி அழகு பார்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அவர் பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
  • இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம் & நூலகம்
    • இரட்டைமலை சீனிவாசன் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
  • வி.கே.பழனிசாமி கவுண்டர் - மணிமண்டபம் & நூலகம்
    • விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு திட்டம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • பெரும்பிடுகு முத்தரையர் - மணிமண்டபம் & நூலகம்
    • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில், பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
  • பென்னிகுயிக் பிறந்த நாள் - ஜனவரி 15 அரசு விழா
    • முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • காலிங்கராயன் நினைவாக - தை மாதம் 5-ந் தேதி அரசு விழா
    • பவானி ஆற்றின் வாய்க்கால் களை வெட்டிய காலிங்கராயனின் நினைவை போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்.
  • அழகுமுத்துக் கோன் - அரசு மரியாதை
    • சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் வீரத்தையும், வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக் கோனின் உருவச்சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11-ந் தேதி அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
  • ம.பொ.சிவஞானம் - அரசு மரியாதை
    • இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், முன்னாள் மேலவை தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராயநகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானமின் உருவச்சிலைக்கு அவரது பிறந்த நாளான ஜூன் 26-ந் தேதி அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
  • "நீதிக்கட்சியின் வைரத் தூண்" ஏ.டி.பன்னீர்செல்வம் - அரசு மரியாதை
    • "நீதிக்கட்சியின் வைரத் தூண்" என்று அழைக்கப்பட்ட ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
  • சி.பா.ஆதித்தனார் - அரசு மரியாதை
    • சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் உருவச் சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந் தேதி அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்
  • அல்லாள இளைய நாயகர் - குவிமாடம் & உருவச்சிலை
    • நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற ராஜ வாய்க்கால் ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகரை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு ஜேடர்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைக்கப்படும்.
  • ஒண்டிவீரன் - மணிமண்டபம் புனரமைப்பு 
    • திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், அந்த வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
  • வீரன் சுந்தரலிங்கனார் - மணிமண்டபம் புனரமைப்பு 
    • தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், ஒரு நூலகமும் அதிலேயே இந்த அரசு அமைக்கும்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (2008)

  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 12-10-2004 அன்று தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.சூட்டப்பட்டது. 19-05-2008 அன்று "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்" துவங்கப்பட்டது. 
275 புதிய பேருந்துகள் - துவக்கிவைப்பு 
  • தமிழ்நாட்டில் ரூ.69 கோடி மதிப்பிலான 275 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு பேருந்து சேவை (21 ஆயிரத்து 678 பேருந்துகள்)
  • பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மூலமாக 21 ஆயிரத்து 678 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
புலவாமா தாக்குதல்: இரு தமிழ்நாடு வீரர்கள் "நல்லடக்கம்' 
  • காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 
  • இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் உயிரிழந்தனர்
  • சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்தவர். சுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரியை சேர்ந்தவர் ஆவார்.
  • தமிழ்நாடு வீரர்கள் 2 பேரின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் (16.2.2019 அடக்கம் செய்யப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்

இரானி கோப்பை கிரிக்கெட் 2019: "விதர்பா அணி" சாம்பியன்
  • நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. 
  • இப்போட்டியில் ‘டிரா’ ஆனது. முதல் இன்னிங்சில் முன்னிலை அடிப்படையில் "விதர்பா அணி" இரானி கோப்பையை கைப்பற்றியது.
  • நடப்பு ஆண்டு (2018-2019) "ரஞ்சி சாம்பியன் பட்டத்தையும் விதர்பா அணி' வென்றுள்ளது. 
தென்ஆப்பிரிக்கா-இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை சாதனை 
  • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பன் நகரில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இன்னல்கள் அணி படைத்த சாதனைகள் விவரம்:
  • இலக்கை வெற்றிகரமாக அடைந்த இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர் என்ற சிறப்பை குசல் பெரேரா (153 ரன்) பெற்றுள்ளார்.
  • வெளிநாட்டு மண்ணில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது இதுவே முதல் முறையாகும்.
பேட்மிண்டன்

தேசிய பேட்மிண்டன் 2019: "சாய்னா நேவால்" சாம்பியன்
  • 83-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  (Badminton Senior National Championships 2019) போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. 
  • "சாய்னா நேவால்' சாம்பியன்: 
    • பெண்கள் பிரிவில் சாம்பியன்ஷிப்பட்டத்தை "சாய்னா நேவால்' வென்றுள்ளார். 
    • சாய்னா நேவால், 21-18, 21-15 என்ற நேர் செட்டில் பி.வி. சிந்துவை வீழ்த்தினார். சாய்னா நேவால், தேசிய பேட்மிண்டன் வெல்வது இது 4-வது (2006, 2007, 2018, 2019) முறையாகும். 
  • "சவுரப் வர்மா' சாம்பியன்: 
    • ஆண்கள் பிரிவில் "சவுரப் வர்மா' சாம்பியன்ஷிப் பட்டத்தை, வென்றுள்ளார். 
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிசுற்றில் சவுரப் வர்மா 21-18, 21-13 என்ற நேர் செட்டில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி, 3-வது முறையாக (2011, 2017, 2019) வாகை சூடினார். 
தேசிய விளையாட்டு

2022 தேசிய விளையாட்டு போட்டி சின்னமாக "Clouded Leopard" தேர்வு
  • 2022 ஆண்டு மேகாலயா மாநிலத்தில் நடைபெறும் 39-வது தேசிய விளையாட்டு போட்டிக்கான (39th National Games 2022, Meghalaya) அதிகாரப்பூர்வ சின்னமாக மேகக்கணிந்த சிறுத்தை (Clouded Leopard) தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
தேசிய ஓபன் நடைப்பந்தயம் 2019, சென்னை
  • 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 16.2.2019 அன்று தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோமீட்டர் தூர நடைப்பந்தயம் நடந்தது. 
  • இர்பான் சாம்பியன்: ஆண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த இர்பான் ஒரு மணி 26 நிமிடம் 19 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
  • சவுமியா சாம்பியன்: பெண்கள் பிரிவில் கேரள வீராங்கனை சவுமியா 1 மணி 40 நிமிடம் 25 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
TNPSC Current Affairs 15-17th February 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post