TNPSC Current Affairs 10th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 10, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள்/ National Affairs 
ஹெலினா ஏவுகணை (Helina) சோதனை: குறிப்புகள்
  • ஒடிஸா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள சாந்திபூர் சோதனை மையத்தில், ஹெலிகாப்டரில் இருந்து எதிரிகளின் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கவல்ல இந்தியாவின் "ஹெலினா ஏவுகணை", 8.2.2019 அன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. (Helina, the helicopter-launched version of the Nag anti-tank Missile).
  • 7 முதல் 8 கி.மீ. வரையிலான தொலைவில் உள்ள எதிரிகளின் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய ஹெலினா, தனது இலக்கை அகச் சிவப்புக் கதிர்களைக் கொண்டு மிகத் துல்லியமாக குறிவைக்கிறது.
  • பீரங்கி வண்டிகளைத் தகர்க்கக் கூடிய இந்தியாவின் அதி நவீன நாக் ஏவுகணைகளை ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் வகையில் வடிவமைத்து ஹெலினா என்ற பெயரில் புதிய ஏவுகணையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா-மலேசியா இடையே கம்பெனி செயலர் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே கம்பெனி செயலாளர் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இருநாடுகளிலும் உள்ள தொழில் புரியும் கம்பெனி செயலாளர்களின் அந்தஸ்து மற்றும் கௌரவத்தை மேம்படுத்தவும், ஆசியா - பசிபிக் மண்டலத்தில் எல்லைக்கப்பால் அவர்கள் சென்று வருவதற்கு வசதி ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
இந்தியா-நார்வே இடையே கடல்சார் பேச்சு வார்த்தை புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • இந்தியா-நார்வே இடையே கடல்சார் பேச்சு வார்த்தை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் (6.2.2019) அளித்துள்ளது. 
  • இருநாடுகளும் நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும். நீலப்பொருளாதாரத் துறையில் சர்வதேச அளவில் முன்னணி நாடாக நார்வே விளங்குகிறது. 
நியமனங்கள்/ Appointments
UN FAO அமைப்பு பொது இயக்குனர் பதவிக்கு "ரமேஷ் சந்த்" பரிந்துரை
  • ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (UN’s FAO) பொது இயக்குனர் (DG, director general) பதவிக்கு பதவிக்கு NITI Aayog உறுப்பினர் "ரமேஷ் சந்த்" (Ramesh Chand), இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கே.ஞானதேசிகன்

  • தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக கே.ஞானதேசிகன் அவர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக அவர் 5 ஆண்டுகள் நீடிப்பார்.
  • தற்போது தமிழ்நாடு அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக உள்ளார். 
  • K Gnanadesikan appointed as new chairman of Tamil நாடு Real Estate Regulatory Authority.
  • தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (2017)
  • மத்திய அரசின் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016-ன்படி ஒவ்வொரு மாநிலமும் இந்த ஆணைய சட்டத்தை அமலாகி ஓராண்டுக்குள் தொடங்கியாக வேண்டும். 
  • அந்த வகையில், வீடுகள் வாங்குவதில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்காகவும் வீடு வாங்குவோரின் நலன் காக்கவும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் 2017-ம் ஆண்டு ஜூன் 22-ந்தேதி தொடங்கப்பட்டது. 
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு ஆணையம்

  • இந்த நிலையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி என்.பாலசுப்பிரமணியம் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி லீனா நாயர் ஆகியோரை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
‘மிஸ்டர் தென் இந்தியா’ மற்றும் ‘மிஸ் தென் இந்தியா’ தேர்வு 

  • ‘மிஸ்டர் தென் இந்தியா’ மற்றும் ‘மிஸ் தென் இந்தியா’ அழகிப்போட்டி முதல் முறையாக சென்னையில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையிலான 3 நாட்கள் ரூபாரு குழுமம் சார்பில் நடத்தப்பட்டது. 
  • ‘மிஸ் தென் இந்தியா’ அழகியாக ஐஸ்வர்யா ஷெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • ‘மிஸ்டர் தென் இந்தியா’ அழகனாக வேலு லட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெக்சாஸ் பயிற்சிக்கழகத்தலைவர் (Texas Lyceum) - சஞ்சய் ராமபத்ரன்

  • அமெரிக்காவின் டெக்சாஸ் பயிற்சிக் கழகத் (Texas Lyceum)) தலைவராக இந்திய-அமெரிக்கரான சஞ்சய் ராமபத்ரன் (Sanjay Ramabhadran) பொறுப்பேற்றுள்ளார். 
  • டெக்சாஸ் பயிற்சிக் கழகம், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சிறந்த தலைவர்களை உருவாக்கி வரும் பொதுநலத் தொண்டு நிறுவனம் ஆகும். 
மாநாடுகள்/ Conferences
சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு - PETROTECH 2019
  • சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு "PETROTECH 2019", புது டெல்லி தலைநகர் பகுதி, கிரேட்டர் நொய்டா நகரில் பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது. 
  • இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த "PETROTECH" மாநாடு, 13-வது மாநாடு ஆகும். 
  • இந்திய ஹைட்ரோகார்பன் துறையின் முக்கிய நிகழ்வான, "PETROTECH" மாநாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் (Indian hydrocarbon sector), தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் அறிவு, நிபுணத்துவம், அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 13-வது நிகழ்வு ஆகும்.
  • PETROTECH-2019’, 10th - 12th February 2019 at India Expo Centre, Greater Noida-Delhi NCR, India.
விருதுகள்/ Awards
2018 "ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர் (OBE) விருது" பெற்ற "துருவ் படேல்" 
  • பிரிட்டனில் வசிக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் "துருவ் படேல்" (Dhruv Patel) அவர்களுக்கு, பிரிட்டன் வாழ் இந்து மக்களுக்கு சிறந்த சேவை செய்ததற்காக இவருக்கு, 'ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்' (OBE, Order of the British empire) என்ற, அரச குடும்பத்தினரின், உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விழாவில், கேம்ப்ரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம், கவுரவ விருதை துருவ் படேலுக்கு வழங்கினார். ராணி எலிசபெத் பிறந்தநாளை முன்னிட்டு, (Queen’s Birthday Honours List 2018) ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவை செய்தவர்களுக்கு, இது போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • பார்மஸி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வர்த்தகம் செய்து வரும் இவர், 'ஹிந்துஸ் நெட்வர்க்' (City Hindus Network) என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். 
தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில்: தொடக்கம் 
  • சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 19 ஏ.சி. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உள்ளன. 
  • சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்து உள்ளது. (Chennai Metro Rail's phase I, Washermenpet and AG-DMS) 
  • சென்டிரலில் இருந்து விமானநிலையம் வரையிலும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
  • தற்போது, விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வழித்தடத்தில் 
  • மெட்ரோ ரெயில் போக்குவரத்தை, பிப்ரவரி 10 அன்று (10.2019) திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 
  • சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
புதுச்சேரியில் 11.2.2019 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் 
  • புதுச்சேரியில் 11.2.2019 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிக்கப்படவுள்ளது. 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
பேட்மிண்டன்

பி.வி. சிந்து-Li Ning நிறுவனம் இடையே ரூ.50 கோடி விளம்பர ஒப்பந்தம் 
  • இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் லி நிங் விளையாட்டு நிறுவனம், ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது (Chinese sports brand Li Ning). நான்கு வருடத்திற்கான இந்த விளம்பர ஒப்பந்தத்தில் சிந்து கையெழுத்திட்டுள்ளார்.
  • இந்திய பேட்மிண்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் (Kidambi Srikanth)ரூ.35 கோடியில் 4 ஆண்டுகளுக்கு லி நிங் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டார். 
  • ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஆவார். மேலும் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், பிவி சிந்து 7வது இடம் (PV Sindhu, listed as the world's seventh-highest paid sportswoman on the Forbes list in 2018) பிடித்தார்.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
புதுடெல்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 10, 1931
  • 1931-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ஆம் நாளில் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்திய நாடு, ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911-ம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது.
TNPSC Current Affairs 10th February 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post