TNPSC Current Affairs 21-22nd February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 21-22, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
நாட்டிலேயே முதல் முறையாக "கேரளஅலுவலக பணியில் ‘ரோபோ’
  • நாட்டிலேயே முதல் முறையாக கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் முதல் முறையாக ரோபோவை பணியில் அமர்த்தி அந்த மாநில போலீசார் சாதனை படைத்துள்ளனர். 
  • Robocop, Kerala Police launches KP-Bot, first humanoid robot cop in India
  • ‘கே.பி.பாட்’ என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள இந்த ரோபோவுக்கு முதல் கட்டமாக வரவேற்பாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது.
  • பெண் உருவத்தில் இருக்கும் இந்த ரோபோவால் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பேசவும் முடியும். மனித உருவில் தயாரிக்கப்பட்டு உள்ள இத்தகைய ரோபோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ரோபோவை கேரளா முதல்வர் பினராயி விஜயன் 19.2.2019 அன்று தொடங்கி வைத்தார்.
சர்வதேச அணுசக்தி கண்காட்சி 2019: ரஷியா 
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் வருகிற ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.
  • இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.
  • நவீன அணுசக்தி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பொறுப்பான முறையில் கையாள்வது, பசுமை திட்டங்களுக்கான முதலீடுகள், கார்பன் இல்லாத எரிசக்தி உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற உள்ளன.
  • அணுசக்தித்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், சர்வதேச வல்லுனர்களுக்கும் விருதுகள் அளிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் இந்த விருது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது 
சர்வதேச விமான கண்காட்சி 2019: பெங்களூரு
  • 2019 சர்வதேச விமான கண்காட்சி (12th edition of Aero India show 2019) கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பிப்ரவரி 20 முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
  • பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். 
ராணுவத்துறையில் "100 சதவீத அன்னிய நேரடி முதலீடு"
  • இந்தியாவில் ராணுவத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு விதிகளை தளர்த்தி, ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது, என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
  • பெங்களூரு-ஓசூர்-சென்னை இடையே ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப் பட்டு வருகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் ஒரு விமான வழித்தடம் அமைக்கப்படுகிறது. 
  • தமிழ்நாட்டில் உள்ள கோவையில் விமான தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65%
  • EPF என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, 2018-19நடப்பு நிதி ஆண்டில் 8.65 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் "கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம்" 
  • தூத்துக்குடியில் அமைந்து உள்ள "கடலோர காவல்படை நிலையம்" இந்தியாவின் 16-வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 
  • தூத்துக்குடி கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம், தொடக்க விழா 22.2.2019 அன்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் அவர்களால் புரோகித் தொடங்கி வைக்கப்பட்டது.
கொல்கத்தாவில் "இந்தியாவின் முதல் fulldome 3D திரையரங்கம்"
  • மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நகரத்தில், "இந்தியாவின் முதல் fulldome 3D திரையரங்கம்" (fulldome 3D Digital Theatre), மத்திய கலாசார அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்/ Environmental Affairs
அழிந்துவிட்ட"பெர்னாண்டினா" ஆமை இனம் கண்டுபிடிப்பு
  • தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் உள்ள காலபோகோஸ் தீவில், அரிய வகை ஆமை இனமான "பெர்னாண்டினா" என்று அழைக்கப்படும் ராட்சத ஆமை முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.
  • சுமார் 113 ஆண்டுகளுக்கு பிறகு காலபோகோஸ் தீவில் பெர்னாண்டினா ஆமை உயிர் வாழ்வதை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். ‘ராட்சத ஆமை மீட்பு மற்றும் மறுசீரமைப்பு’ என்கிற குழுவை சேர்ந்தவர்களின் ஆய்வு பயணத்தின் போது பெர்னாண்டினா இனத்தை சேர்ந்த பெண் ஆமை கண்டுபிடிக்கப்பட்டது.
நியமனங்கள்/ Appointments 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்பு
  • சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட செந்தில்குமார் ராமமூர்த்தி 22.2.2019 அன்று பதவியேற்று கொண்டார். 
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
  • இதன் மூலம் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. 
விருதுகள்/ Awards and Honors

கிராண்ட் கிராஸ் ஆஃப் சிவில் மெரிட்' விருது 2019: சுஷ்மா ஸ்வராஜ்
  • சமீபத்தில் ஸ்பெயின் அரசாங்கத்தின், 'கிராண்ட் கிராஸ் ஆஃப் சிவில் மெரிட்' விருது (Grand Cross of Order of Civil Merit' award) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் (Tamil Nadu Affairs)
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு 
  • பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை (20.2.2019) வெளியிடப்பட்டுள்ளது.
  • 16.10.2018 அன்று விளையாட்டு வீரர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டார்.
  • Tamil Nadu government 3% sports sub-quota for Government Jobs 2019
  • இந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கான கட் ஆப் தேதியாக 1.1.2018 தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 5 ஆண்டுகள், அதாவது 31.12.2022 வரை செய்த சாதனைகள் பரிசீலிக்கப்படும்.
  • அதிகபட்சமாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணியில் சேர்வதற்கான அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதியை வீரர்கள் பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். 
கிளாம்பாக்கம் புதிய புறநகர் பஸ் நிலையம்: அடிக்கல் நாட்டல் 
  • காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 
  • இப்புதிய பஸ் நிலையம், 44.74 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டுமானத்துடன் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயன்பெறும் வகையிலும், 250 பஸ்கள் ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடிய வகையிலும்அமைக்கப்பட உள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
குத்துச்சண்டை

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்- Puma இடையே ஒப்பந்தம் 
  • 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அவர்களை, சர்வதேச விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பூமா (India's Mary Kom as Women's Training Ambassador in Puma) விளம்பர தூதராக 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
துப்பாக்கி சுடுதல்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2019, டெல்லி
  • 2019 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ISSF World Cup of 2019), பிப்ரவரி 20 முதல் 28 வரை டெல்லியில் நடக்கிறது.
  • இந்த போட்டி, 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான 16 இடங்களுக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ளது. 
கிரிக்கெட்


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக "நீதிபதி டி.கே.ஜெயின்" நியமனம் 
  • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் (the first court-appointed ombudsman for the BCCI) அவர்களை நியமித்து உச்ச மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக வினோத்ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் உள்ளனர். 
  • நிர்வாக கமிட்டியின் 3-வது உறுப்பினராக ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் "ரவி தோட்ஜ்" நியமிக்கப்படுள்ளார்.
முக்கிய தினங்கள்/ Important Days

உலக சமூக நீதி தினம் - பிப்ரவரி 20

  • ஐக்கிய நாடுகளின் அமைப்பு ,ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20-ந் தேதி, “உலக சமூக நீதி தினமாக” (World Day of Social Justice 20 February) கடைப்பிடிக்கிறது. 
  • 2019 உலக சமூக நீதி தின மையக்கருத்து 
    • "நீங்கள் அமைதி மற்றும் மேம்பாட்டை விரும்பினால், சமூக நீதிக்கான வேலை பாருங்கள்" ( If You Want Peace & Development, Work for Social Justice).
சர்வதேச தாய் மொழி தினம் - 21 பிப்ரவரி
  • சர்வதேச தாய் மொழி நாள் - 21 பிப்ரவரி (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
  • 1952 பிப்ரவரி 21 அன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 
  • 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தாய் மொழி நாள் மையக்கருத்து (International Mother Language Day 2019 Theme): "உள்நாட்டு மொழிகள் வளர்ச்சி, அமைதி கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கம்" (Indigenous languages matter for development, peace building and reconciliation).
TNPSC Current Affairs 21-22nd February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post