Daily Current Affairs Quiz 2019-2018 |
---|
Daily Current Affairs Notes 2019-2018 |
14500 Model Questions Answers |
இந்திய நிகழ்வுகள் / National Affairsஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 78ஆவது இடம்
- ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.
- சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாக அமைப்பால் (Transparency International) 2018ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.
- சீனா 87-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 117-வது இடம் பிடித்துள்ளது.
- ஊழல் மிக குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க், நியூசிலாந்து நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ளன.
- சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன.
- உத்தரபிரதேச மாநிலத்தில் 600 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான ‘எக்ஸ்பிரஸ் சாலை’ (World's longest expressway) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த சாலை ரூ.36 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு "கங்கா எக்ஸ்பிரஸ் சாலை" (Ganga Expressway) என பெயரிடப்பட்டுள்ளது.
- 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக, 'தேசிய சாம்பிள் சர்வே' அறிக்கை (National Sample Survey Office, NSSO) தெரிவித்துள்ளது.
- 2017-18-ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட அறிக்கையை 'பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு' என்னும் பொருளாதார நாளேடு ஆய்வு செய்து 'தேசிய சாம்பிள் சர்வே' என்னும் தகவல் சேகரிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்து விட்டது.
- இந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நாட்டில் நிலவியதற்கு ஒப்பாகும்.
- இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவீதம் உயர்ந்து தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- நகர்ப்புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும்,
- கிராமப்புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாகவும் இருந்துள்ளது.
- 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முதல் முழுமையான ஆய்வு அறிக்கை இதுவாகும்.
- இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசு கூறி வந்தாலும், போதுமான அளவு இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
- தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இத்தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துகள் (Ninu Duck) வாழ்ந்து வந்தன.
- தற்போது உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இனத்தின் கடைசி வாத்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள் / AppointmentsWHO தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனரான "டாக்டர். பூனம் கெர்தாபல் சிங்" நியமனம்
- உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய (South-East Asia regional director of WHO) இயக்குனரான டாக்டர். பூனம் கெர்தாபல் சிங் (Dr. Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (UPSC) உறுப்பினராக "ராஜீவ் நயன் செளபே" (Rajiv Nayan Choubey) நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) உள்பட பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி அமைப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது.
- UPSC தலைவராக "அரவிந்த் சக்சேனா" உள்ளார்.
மாநாடுகள் / Conference
சர்வதேச புலிகள் கணக்கெடுப்பு மாநாடு 2019
- 2019 ஜனவரி 28-29 தேதிகளில், புது டெல்லியில் மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation 2019) நடைபெற்றது.
விருதுகள் / Awards
ஸ்வஸ்த் பாரத் யாத்ரா: சிறந்த மாநிலமாக "தமிழ்நாடு" தேர்வு
- 2019 ஜனவரி 28 ஆம் தேதி, 'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' (‘Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலமாக (Best State Overall) அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' பிரச்சாரம் இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) 100 நாள் நுகர்வோர் சேவை திட்டம் ஆகும், இது அக்டோபர் 16, 2018 அன்று தொடங்கப்பட்டது.
- 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட 24 இலக்கியவாதிகளுக்கு டெல்லியில் சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர கம்பரா ஜனவரி 29 அன்று விருது வழங்கினார்.
- தமிழ் மொழியில், ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
- 2018 சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றோர் விவரம்: Click Here
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs2019 ஜனவரி "தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதம்" - வடக்கு கரோலினா அறிவிப்பு
- ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் அறிவித்துள்ளது.
- அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
- வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடப்பு 2019 ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்டது.
- தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 23,197 வாக்காளர்கள் உள்ளனர்.
- 2.92 கோடி ஆண் வாக்காளர்கள்
- 2.98 கோடி பெண் வாக்காளர்கள்
- 5,472 மூன்றாம் பாலினத்தவர்.
- அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர்
- தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இதில் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர்.
- குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம், சென்னை
- தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் அமைந்துள்ளது. இதில் 1,66,515 வாக்காளர்கள் உள்ளனர்.
- 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது..
- சென்னையில் மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்.
- சென்னையில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக வேளச்சேரி உள்ளது. இதில் 2,96,952 வாக்காளர்கள்
- சென்னையில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் அமைந்துள்ளது. இதில் 1,66,515 வாக்காளர்கள் உள்ளனர்.
முக்கிய தினங்கள் / Important Daysமகாத்மா காந்தி 72-ஆவது நினைவு தினம்
- மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம் (Mahatma Gandhi, 72nd death anniversary 30 January 2019) நாடு முழுவதும் ஜனவரி 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairsகிரிக்கெட்
இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் ஒரு நாள் தொடர்: இந்திய அணி வெற்றி
- நியூசிலாந்தில் நடைபெற்றுவரும், இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
- பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலேயே நடத்தப்படுகிறது. 2020 பிப்ரவரி 21-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
டேவிஸ் கோப்பை தகுதி சுற்று 2018
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.
- இந்தியா-இத்தாலி அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று ஆட்டம், கொல்கத்தாவில் உள்ள சவுத் கிளப் மைதானத்தில் பிப்ரவரி 1 முதல் 2 வரை நடைபெறுகிறது.
- இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஸ்பெயினில் 2019 நவம்பர் மாதம் நடைபெறும் 18 அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.
டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் 2019
- சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் ஜனவரி 31 அன்று வெளியானது.
- தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்தியன் (26), சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 9,030 புள்ளிகளுடன் 28 ஆவது இடத்தில் உள்ளார்.
- மற்றொரு வீராரன சரத் கமல் (36), 8,668 புள்ளிகளுடன் 33 ஆவது இடத்தில் உள்ளார்.
- மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை மனிகா பத்ரா (23), 4 இடங்கள் முன்னேறி 6,817 புள்ளிகளுடன் 47ஆவது இடத்தில் உள்ளார்.
TNPSC Current Affairs 30-31st January 2019 PDF
TNPSC Link
File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.