TNPSC Current Affairs 28-29th, January 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 28-29th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs
டென்னிஸ் 

ஆஸ்திரேலிய ஓபன்: 7-முறை வென்று "நோவக் ஜோகோவிச்" சாதனை 
  • ஆஸ்திரேலிய ஓபனை பட்டத்தை அதிக முறை வென்றவர் சாதனையை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
  • சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் ஆகியோர் தலா 6 முறை வென்றதே சாதனையாக இருந்தது. 
  • 2019 ஆஸ்திரேலிய ஓபன் பட்டம், ஜோகோவிச்சின் 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 
  • Hotrick Grandslam: 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் (விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன்) ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் சாதனையை (Hotrick Grandslam) நோவக் ஜோகோவிச் புரிந்துள்ளார்.
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2019 (Australian Open 2019 
    • நடைபெற்ற இடம்: மெல்போர்ன், ஆஸ்திரேலியா 
    • நடைபெற்ற நாட்கள்: 14-27, January 2019
    • பதிப்பு (Edition): 107-வது போட்டி 
  • சாம்பியன் பட்டம் வென்றவர்கள்:
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு (Women's Singles): 
    • நவோமி ஒசாகா (Naomi Osaka), ஜப்பான் 
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு (Men's Singles): 
    • நோவக் ஜோகோவிச் (Novak Djokovic), செர்பியா 
  • ஆண்கள் இரட்டையர் பிரிவு (Men's Doubles): 
    • நிகோலஸ் மகுத்- பியரே ஹூக்ஸ் ஹெர்பர்ட் ஜோடி (பிரான்ஸ்)(France Pierre-Hugues Herbert / France Nicolas Mahut)
  • பெண்கள் இரட்டையர் பிரிவு (Women's Doubles): 
    • சமந்தா ஸ்டோசர் (ஆஸ்திரேலியா) / சாங் ஷுய் (சீனா) 
  • கலப்பு இரட்டையர் (Mixed Doubles): 
    • பார்பெரா கிரெஜிக்கோவா (செக் குடியரசு) / ராஜீவ் ராம் (அமெரிக்கா)
  • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள்
  • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள் பட்டியல் (Most Grand Slam titles) 
    • ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து) - 20 கிராண்ட்ஸ்லாம்
    • ரபெல் நடால் (ஸ்பெயின்) - 17 கிராண்ட்ஸ்லாம்
    • ஜோகோவிச் (செர்பியா) -15 கிராண்ட்ஸ்லாம்
    • பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) -14 கிராண்ட்ஸ்லாம்
    • ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) -12 கிராண்ட்ஸ்லாம்.
கிரிக்கெட்

டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை: ஜாசன் ஹோல்டர் முதல் இடம் 
  • ICC (International Cricket Council) ஜனவரி 27 அன்று வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசை (Test All-Rounder Rankings) பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 
  • டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை (27.1.2019) - முதல் 3 இடங்கள் 
    • ஜாசன் ஹோல்டர் (Jason Holder), வெஸ்ட் இண்டீஸ் 
    • ஷகிப் அல்-ஹசன் (Shakib Al Hasan), வங்காளதேசம் 
    • ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), இந்தியா. 
இனவெறி பேச்சு: "சர்ப்ராஸ் அகமது"க்கு 4 போட்டிகளில் தடை
  • 2019 ஜனவரி 22-ந்தேதி டர்பனில் நடந்த பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான, 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் "அன்டில் பெலக்வாயோ"வை (Andile Phehlukwayo) இனவெறியை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைகளை (racist comment) பயன்படுத்தியதால், பாகிஸ்தான் கேப்டன் "சர்ப்ராஸ் அகமது"வுக்கு 4 (Sarfraz Ahmed) போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய -நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 2019 - இந்தியா வெற்றி 
  • இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
  • இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. 2009-ம் ஆண்டில் டோனி தலைமையில் இங்கு இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கில் முதல்முறையாக வென்றது. 
விராட்கோலி கேப்டன் - சாதனைகள்
  • இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் 63-வது ஒரு நாள் போட்டியில் விளையாடி 47-இல் வெற்றிபெற்றுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் வெளிநாட்டு மண்ணில் 6-வது முறையாக ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. 
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் அடுத்தடுத்து ஒருநாள் போட்டி தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை விராட்கோலி பெற்றுள்ளார்.
பந்து வீச அம்பத்தி ராயுடு'க்கு தடை
  • இந்திய அணியின் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு, பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக கூறி தடை விதித்து ICC நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அம்பத்தி ராயுடு பந்து வீச்சு சோதனைக்கு ஆஜராகி அதன் ஆய்வு அறிக்கை முடிவு தெரியும் வரை அவர் சர்வதேச போட்டியில் பந்து வீச முடியாது.
T20 உலகக்கோப்பை தொடர் 2020, ஆஸ்திரேலியா
  • ஆஸ்திரேலியாவில் 2020 அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை T20 உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஜனவரி 29அன்று வெளியிட்டுள்ளது.
  • ICC தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 9-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ள இலங்கை, வங்காளதேசம், மற்றும் 6 இதர அணிகள் தகுதி சுற்றில் விளையாட வேண்டும். இதில் இருந்து 4 அணிகள் தகுதி பெறும்.
  • ‘A’ பிரிவு: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தகுதிபெறும் அணிகள்.
  • ‘B’ பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதிபெறும் அணிகள்.
உலக நிகழ்வுகள் / National Affairs 
பாகிஸ்தான் நாட்டின் தேசிய பானம் "கரும்பு சாறு" 
  • இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் சமீபத்தில் கரும்புச சாற்றை (Sugarcane juice) 'தேசிய பானம்' (national drink) என்று அறிவித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
இந்தியா நிர்வகிக்கவுள்ள "இலங்கை மாத்தளை விமான நிலையம்" 
  • இலங்கை மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையத்தை 40 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகஉள்ளது.
  • இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் 2019
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 2019 ஜனவரி 31-ந் தேதி தொடங்கி, பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 
  • இந்த (2019) ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
  • 2019, பிப்ரவரி 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், இடைக்காலமாக அப்பொறுப்பை கவனிக்கும் அமைச்சர் பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரெயில்  (Vande Bharat Express)
  • தானியங்கி முறையில் என்ஜின் இன்றி செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்டது. பதினெட்டே மாதங்களில் தயார் செய்யப்பட்டதால் இந்த அதிவேக ரெயிலுக்கு, ‘ரெயில் 18’ என பெயர் வந்தது.
  • ‘ரெயில் 18’ அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ (Vande Bharat Express) என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
  • ‘வந்தே பாரத்’ ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட உள்ளது.
  • 16 பெட்டிகளை கொண்ட, ‘ரெயில் 18’, ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய 2018 ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
  • மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இந்த ரெயிலின் வெற்றிகரமான சோதனை ஓட்டம் 2018 டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார் 
  • டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜனவரி 29 அன்று, ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) காலமானார்.1989-90 ஆண்டுவாக்கில் ரெயில்வேதுறை அமைச்சராகவும்,1998-2004-ம் ஆண்டுவாக்கில் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ராணுவத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 
  • இவரது பதவிக்காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரும், போக்ரான் அணுகுண்டு பரிசோதனையும் நடைபெற்றது.
  • கர்நாடக மாநிலம், மங்களூருவில் 3-6-1930 அன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தார்.
நியமனங்கள் / Appointments
பாகிஸ்தானில் முதல் இந்து பெண் "நீதிபதி சுமன் குமாரி"
  • பாகிஸ்தானில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்து பெண் சுமன் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவராக "நீதிபதி பொன்.கலையரசன்" நியமனம்
  • மாநில ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவராக நீதிபதி பொன்.கலையரசன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன்.கலையரசன். 
  • மாநில ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் பதவி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல், காலியாக இருந்தது. இந்த ஆட்சி மொழி ஆணையம், மத்திய அரசு, மாநில அரசு ஆங்கில மொழியில் பிறப்பிக்கும் சட்டங்களை, மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் விதமாக தமிழில் மொழி பெயர்த்து, அதற்கு ஒப்புதல் அளித்து வெளியிடும்.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs 
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - அடிக்கல் நாட்டு விழா
  • தமிழ்நாட்டின் மதுரை தோப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக-எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS) அமையவுள்ளது.
  • 2019 ஜனவரி 27 அன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.1,264 கோடி செலவில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ‘ரிமோட்’ மூலம் கல்வெட்டை திறந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள், பல்வேறு உயர்தர சிகிச்சை பிரிவுகள் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைய உள்ளன.
  • மதுரை, நெல்லை, தஞ்சையில் கட்டப்பட்டுள்ள ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகளையும் அவர் திறந்து வைத்தார்.
TNPSC Current Affairs 28-29th January 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post