TNPSC Current Affairs 26-27th, January 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 26-27th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்" 
  • இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்" (3-Year Strategic Programme) செயல்படுத்தப்படஉள்ளது.
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இடையே நடந்த சந்திப்புக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தியாவின் 70-ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
புதிய கடற்படை விமான தளம் "INS கோஹசா" (INS Kohassa)
  • புதிய கடற்படை விமான தளம் "INS கோஹசா" (Naval Air Base, INS Kohassa, Diglipur, Andaman and Nicobar Islands) அந்தமான் & நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் தொங்கப்பட்டுள்ளது. 
குடியரசு தினவிழா 26.1.2019
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குடியரசாக அறிவிக்கப்பட்டது. 
  • இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது.
  • 70-வது குடியரசு தினவிழா 26.1.2019 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 
  • டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்
  • குடியரசு தினவிழா அணிவகுப்பை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்
  • 2019 குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா பங்கேற்றார். 
  • அசோக சக்ரா விருது 
  • காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர் நசிர் அகமது வானியின் மனைவி மகாஜபீனிடம், உயரிய அசோக சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  • கருப்பொருளாக காந்தியடிகள் வாழ்க்கை 
    • காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு என்பதால், அவரது கொள்கைகள் மற்றும் வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
  • லெப்டினன்ட் கமாண்டர் அம்பிகா சுதாகரன் தலைமையில் 144 போர் விமானிகள் உள்பட விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
மாநாடுகள் / Conferences
மண்ணின் மொழிகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கம் 2019 
  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2019-ம் ஆண்டை மண்ணின் மொழி ஆண்டாக (2019 - International Year of Indigenous Language) அறிவித்துள்ளது. 
  • Global Launch Event of IYIL2019 (28 January 2019, UNESCO House, Paris, France)
  • ஒரு மொழி தேய்ந்து அழிவதும், பண்பாடு ஒடுங்கிவிடுவதும், அந்த பண்பாடு உலகளாவிய அளவில் பரவுவதை தடுக்கும் விதமாக உலகளாவிய கருத்தரங்கம் 28.1.2019 அன்று பிரான்ஸ் நாட்டில் யுனெஸ்கோ அரங்கில் நடக்கிறது. 
  • இந்த கருத்தரங்கில்தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs 
குடியரசு தின விழா - தமிழ்நாடு 
  • இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்.
விருதுகள் / Awards
பாரத ரத்னா விருதுகள் 2019
  • 2019-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதுகள் பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு 26.1.2019 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது ஆகும். 
    1. பிரணாப் முகர்ஜி (முன்னாள் குடியரசுத் தலைவர்) 
    2. நானாஜி தேஷ்முக் (ஜனசங்க தலைவர்) 
    3. புபேன் ஹசாரியா - ( பிரபல பாடகர்) 
    • இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
    • 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 
    • அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டில் 3 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதற்கு முன்பு 45 பேருக்கு பாரத ரத்னா வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. 
  • பிரணாப் முகர்ஜி
    • மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். 
    • காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர் பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசில் நிதி, ராணுவம், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 
    • திட்டக்கமிஷன் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.
  • நானாஜி தேஷ்முக்
    • மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக், பாரதீய ஜனசங்கத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் அங்கம் வகித்தவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1999-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. 
    • நானாஜி தேஷ்முக் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
  • புபேன் ஹசாரியா
    • அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புபேன் ஹசாரியா பின்னணி பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். 
    • பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, தாதாசாகேப் பால்கே, அசாம் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
    • 2011-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தனது 85 வயதில் மரணம் அடைந்தார். 
பத்ம விருதுகள் 2019
  • 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 26.1.2019 அன்று அறிவிக்கப்பட்டன. 
  • பத்ம விருதுகள் மொத்தம் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 2019 பத்ம விருதுகள் 
    • பத்ம விபூஷண் விருது - 4 பேர் 
    • பத்ம பூஷண் - 14 பேர் 
    • பத்மஸ்ரீ விருது - 94 பேர் 
    • பெண்கள் - 21 பேர் 
    • வெளிநாட்டில் வசிப்பவர்கள் - 11 பேர் 
    • திருநங்கை - ஒருவர் (நர்த்தகி நடராஜ்)
  • பத்ம விபூஷண் விருது 2019 (04)
    1. தேஜன்பாய் - நாட்டுப்புற பாடகர், சத்தீஷ்கார்
    2. அனில்குமார் மனிபாய் நாயக் - தொழில் அதிபர், மகாராஷ்டிரா 
    3. பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே - நாடக கலைஞர், மகாராஷ்டிரா 
    4. இஸ்மாயில் உமர் குல்லே - பொது விவகாரங்கள், ஜிபோட்டி, ஆப்பிரிக்கா 
  • பத்ம பூஷண் விருது 2019 (14)
  1. ஜான் சேம்பர்ஸ் (வெளிநாட்டவர்) - அமெரிக்கா
  2. சுக்தேவ் சிங் திந்த்சா - பொது விவகாரங்கள் - பஞ்சாப்
  3. பிரவின் கோர்டன் (வெளிநாட்டவர்) - பொது விவகாரங்கள் - தென்னாப்பிரிக்கா
  4. மகாசியா துரம் பால் குலாட்டி - வர்த்தகம் & கைத்தொழில்-உணவு பதப்படுத்துதல் - தில்லி
  5. தர்ஷன் லால் ஜெயின் - சமூக வேலை - ஹரியானா
  6. அஷோக் லக்ஷ்மிராரா குகடே - மருத்துவம் - கட்டுப்படியாகக்கூடிய சுகாதார பராமரிப்பு - மகாராஷ்டிரா
  7. கரியா முண்டா - பொது விவகாரங்கள் - ஜார்கண்ட்
  8. புதடித்யா முகர்ஜி - கலை-இசை-சிதார் - மேற்கு வங்கம்
  9. மோகன்லால் விஸ்வநாதன் நாயர் - கலை - நடிப்பு - திரைப்பம் ட - கேரளா
  10. எஸ். நம்பி நாராயண் - அறிவியல் மற்றும் பொறியியல்-விண்வெளி - கேரளா
  11. குல்தீப் நாயர் (இறையியல்) - இலக்கியம் & கல்வி (பத்திரிகை) - தில்லி
  12. பச்சேந்திரி பால் - விளையாட்டு (மலையேறுதல்) - உத்தரகண்ட்
  13. வி. கே. ஷங்குங் - சிவில் சர்வீஸ் - டெல்லி
  14. ஹுக்தேவ் நாராயண் யாதவ் - பொது விவகாரங்கள் - பீகார்
  • ‘பத்மஸ்ரீ’ விருதுகள் 2019 (94) 
    • தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • தமிழ்நாட்டை சேர்ந்த ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ளவர்கள் 
    1. பங்காரு அடிகளார் - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீட ஆன்மிக குரு 
    2. சரத் கமல் - டேபிள் டென்னிஸ் வீரர்
    3. நர்த்தகி நடராஜ் - பரதநாட்டிய கலைஞர் (திருநங்கை)
    4. மதுரை சின்னப்பிள்ளை - சமூகசேவகி
    5. டாக்டர் ஆர்.வி.ரமணி - கண் சிகிச்சை நிபுணர்
    6. ஆனந்தன் சிவமணி - டிரம்ஸ் இசைக்கலைஞர்
    7. டாக்டர் ராமசாமி வெங்கடசாமி - அறுவை சிகிச்சை நிபுணர் 
    • கர்நாடகா மாநிலத்தின் பெயரில் நடிகர் பிரபுதேவா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • பத்மஸ்ரீ வென்ற விளையாட்டு வீரர்கள் 
    1. சரத்கமல் - டேபிள் டென்னிஸ் - தமிழ்நாடு 
    2. கவுதம் கம்பீர் - கிரிக்கெட் அணி
    3. சுனில் சேத்ரி - கால்பந்து அணியின் கேப்டன் 
    4. அஜய் தாகூர் - கபடி அணி
    5. செஸ் வீராங்கனை ஹரிகா,
    6. வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி
    7. கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங்
    8. மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா
    9. பச்சேந்திரி பால் - மலையேற்றம் - உத்தரகாண்ட் 
  • பத்மஸ்ரீ விருதை "கீதா மேத்தா" ஏற்க மறுப்பு
    • இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் கீதா மேத்தா, ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும், எழுத்தாளருமான கீதா மேத்தா, தனக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுத்துள்ளார்.
தமிழ்நாடு குடியரசு தின விழா விருதுகள் 2019
  • தமிழ்நாடு குடியரசு தின விழா விருது பெற்றவர்கள் விவரம்
  • அண்ணா பதக்கம் (வீர தீர செயல்கள்) 2019
      1. நா.சூர்யகுமார் - திருமங்கலம், சென்னை 
      2. க.ரஞ்சித்குமார் - போடிநாயக்கனூர், தேனி மாவட்டம் 
      3. ரா.ஸ்ரீதர் - மேலையூர், தஞ்சாவூர் மாவட்டம்
  • காந்தியடிகள் காவலர் பதக்கம் 2019
    1. ரா.வேதரத்தினம் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கடலூர் மாவட்டம்
    2. அ.பிரகாஷ், காவல் ஆய்வாளர், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் 
    3. கோ.ராஜேந்திரன் - காவல் உதவி ஆய்வாளர், விக்கிரமங்கலம், அரியலூர் மாவட்டம் 
    4. ரெ.திருக்குமார் - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருச்சி, காந்தி மார்க்கெட்
    5. பெ.கோபி - தலைமைக் காவலர், சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் 
  • வேளாண்மைத் துறை சிறப்பு விருது
    1. செ.சேவியர் - செட்டியாபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் (திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம்)
  • கோட்டை அமீர் விருது
    1. மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர்களுக்கு கோட்டை அமீர் என்ற பெயரில் விருது - றிவிக்கப்படவில்லை.
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2019: சாம்பியன்கள் 
  • ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. 
  • சாம்பியன்கள் விவரம்:
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு: நவோமி ஒசாகா (ஜப்பான்) 
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: நோவக் ஜோகோவிச் (செர்பியா)
  • நவோமி ஒசாகா
    • பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 7-6 (7-2), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
    • இதன் மூலம் பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை "நவோமி ஒசாகா" பிடித்துள்ளார்.
    • ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். 
  • நோவக் ஜோகோவிச்
    • ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
  • ஜோகோவிச் - 7-ஆவது முறை வென்று சாதனை
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவுஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஜோகோவிச் 7-ஆவது முறையாக வென்றுள்ளார். முன்னதாக, ரோஜர் பெடரர் மற்றும் ராய் எமேர்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. 
  • கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் - ஜோகோவிச் சாதனை
    • விம்பிள்டன், அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருப்பதால், கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் சாதனையை நோவக் ஜோகோவிச் புரிந்துள்ளார்.
பாட்மிண்டன்

2019 இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் போட்டி: சாய்னா நெவால் சாம்பியன்
  • 2019 இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்ன்றுள்ளார்.
  • ஸ்பெயினின் கரோலினா மரீன், சாய்னா இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், கரோலினா மரீன் காலில் காயமடைந்து தொடந்து பங்கேற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டதால், இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி 
  • நியூசிலாந்து நாட்டின் மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் - ரோகித் பாடெல்
  • ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் "குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர்" என்ற சிறப்பை நேபாள கிரிக்கெட் அணியின் "ரோகித் பாடெல்" பெற்றுள்ளார். 
  • ரோகித் பாடெலின் தற்போதைய வயது 16 ஆண்டு 146 நாட்கள் ஆகும். 
  • ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் பாடெல், 55 ரன் (58 பந்து) அடித்தார். 
  • இதற்கு முன்பு இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 16 ஆண்டு 213 நாட்களில் சர்வதேச போட்டியில் குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.
செஸ்

சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ்: "பான்ட்சுலா லெவான்" சாம்பியன் 
  • சென்னையில் நடந்த, 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில், ஜார்ஜியா வீரர் பான்ட்சுலா லெவான், 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முக்கிய தினங்கள் / Important Days
சர்வதேச சுங்க தினம் (International Customs Day) - ஜனவரி 26
  • ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று சர்வதேச சுங்க தினம் (International Customs Day) கடைபிடிக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் தங்கள் வேலைகளில் எதிர்கொள்ளும் நிலைமைகள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
சர்வதேச “ஹோலோகாஸ்ட்” படுகொலை" நினைவு தினம் - ஜனவரி 27
  • ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று "சர்வதேச ஹோலோகாஸ்ட் படுகொலை நினைவு தினம்" (International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust) கடைபிடிக்கப்படுகிறது. 
  • ஹோலோகாஸ்ட் படுகொலை, என்பது இரண்டாம் உலகப்போரின் போது அடோல்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் அடோல்ப் ஹிட்லரின் நாஜி படைகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு இனப்படுகொலை ஆகும், இதில் மூன்றில் இரண்டு பகுதி ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டனர். 
2018 தேசிய நோய்த்தடுப்பு நாள் (National Immunisation Day) - ஜனவரி 28
  • 2018 ஜனவரி 28 அன்று தேசிய நோய்த்தடுப்பு தினம் (National Immunisation Day) கடைபிடிக்கப்படுகிறது.
TNPSC Current Affairs 26-27th January 2019 PDF
TNPSC Link File Size 3 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post