TNPSC Current Affairs 21-22, January 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 21st and 22nd  January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக நிகழ்வுகள் / International Affairs 
கட்டிடக்கலையின் "உலகத் தலைநகர் ரியோ டி ஜெனீரோ"
  • பிரேசில் நாட்டின் "ரியோ டி ஜெனீரோ" நகரை "கட்டிடக்கலையின் உலகத்தலைநகராக" யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
  • ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (Rio de Janeiro, World Capital of Architecture for 2020, UNESCO), கட்டிடக்கலைஞர்களின் சர்வதேச ஒன்றியம் ஆகிய 2 அமைப்புகளும் இணைந்து நகர்ப்புற சூழலில் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும் நகரம் குறித்த ஆய்வில், ரியோ டி ஜெனீரோ நகரை கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக யுனெஸ்கோ அறிவித்தது.
  • ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானம் (Maracanã Stadium) முன்பு அமைந்திருக்கும் ஏசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலை (statue of Jesus Christ) அந்நகரின் சிறப்பான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் நவீன மற்றும் பழங்கால கட்டிடக்கலைகளுடன் உலக அங்கீகாரம் பெற்ற தலங்கள் அந்நகரில் உள்ளன.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
ரெயில்கள் பராமரிப்பு: தெற்கு ரெயில்வே முதலிடம்
  • இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (IRCTC) ரெயில் பெட்டிகள் சுத்தமாக இருக்கிறதா? என மேற்கொண்ட ஆய்வில், 16 ரெயில்வே மண்டலங்களில் "தெற்கு ரெயில்வே" (Southern Railway zone) முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. (Southern Railway, Train Cleanliness Survey 2019).
டெல்லியில் பறவைகள் மருத்துவமனைகள் 
  • டெல்லி (Delhi) மாநில அரசு, பறவைகள் மருத்துவமனைகளை (Bird Hospitals) தொடங்க முடிவு செய்துள்ளது. 
  • தமிழ்நாடு, குஜராத்தில் புதிய "கடற்படை விமானப் பிரிவுகள்".
  • தமிழ்நாடு மற்றும் குஜராத்தில், கடற்படையின் 3 புதிய விமானப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • கேரளம் மற்றும் அந்தமானில் ஏற்கெனவே உள்ள டார்னியர் விமான கண்காணிப்பு படைப் பிரிவில் கூடுதல் விமானங்களை சேர்க்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம்
  • தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை (Defence corridor, Tamil Nadu), மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி 20 அன்று திருச்சியில் தொடங்கி வைத்தார். (Tamil Nadu Defence Industrial Corridor, Tamil Nadu Defence Production Quad).
  • இராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ரூ.3,038 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
  • கோவையில் உள்ள கொடிசியாவில் செயல்படுத்தப்படவுள்ள, பாதுகாப்பு துறைக்கான புதிய கண்டு பிடிப்பு மற்றும் வளர்ச்சி மைய திட்டத்தையம் தொடங்கிவைத்தார்.
கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதி - இணைப்பு திட்டம் 
  • கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது (Project report for linking rivers Godavari-Krishna-Pennar-Cauvery 2019). இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
விருதுகள் / Awards 
இந்தியஅமெரிக்கர் "குரிந்தர் சிங் கல்சா"வுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது
  • அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான "குரிந்தர் சிங் கல்சா"வுக்கு, "இன்டியானா' நாளிதழ் "ரோசா பார்க்ஸ் முன்னோடி' விருது வழங்கி கெளரவித்துள்ளது (2019 Rosa Parks award for Indian-American Sikh, Gurinder Singh Khalsa).
  • அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே வெள்ளையின மக்கள் காட்டிய பாகுபாட்டை களைவதற்காக போராடிய ரோசா பார்க்ஸ் (Rosa Parks, American activist) என்ற பெண்மணியின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 
திருவள்ளுவர் திருநாள் விருதுகள் 2019
  • திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா 2019, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் ஜனவரி 21 அன்று நடந்தது. தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விருது பெற்றோர் விவரம்:
  • திருவள்ளுவர் விருது: எம்.ஜி. அன்வர் பாட்சா
  • தந்தை பெரியார் விருது: சி.பொன்னையன்
  • அண்ணல் அம்பேத்கர் விருது: டாக்டர் சி.ராமகுரு
  • பேரறிஞர் அண்ணா விருது: பேராசிரியர் மு.அய்க்கண்
  • பெருந்தலைவர் காமராஜர் விருது: பழ.நெடுமாறன்
  • மகாகவி பாரதியார் விருது: பாவரசு மா.பாரதி சுகுமாரன்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது: கவிஞர் தியாரூ
  • தமிழ்தென்றல் திரு.வி.க. விருது: முனைவர் கு.கணேசன் 
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: சூலூர் கலைப்பித்தன். 
நியமனங்கள் / Appointments 
ஸ்வீடன் பிரதமராக "ஸ்டெஃபான் லாஃப்வென்" தேர்வு
  • ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக இடதுசாரி சோஷலிச ஜனநாயகக் கட்சியின் தலைவர் "ஸ்டெஃபான் லாஃப்வென்" (Stefan Löfven) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • அமெரிக்க உளவுத்துறை மேற்பார்வை குழு உறுப்பினர் "ராஜா கிருஷ்ணமூர்த்தி" 
  • அமெரிக்க நாடாளுமன்ற உளவுத்துறை மேற்பார்வை குழுவின் உறுப்பினர் பதவிக்கு இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவான உளவுத்துறை மேற்பார்வை குழுவில் தெற்காசியாவில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi, Member of a Congressional committee on intelligence,First South Asian) ஆவார். 
மாநாடுகள் / Conferences
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019
  • தமிழ்நாட்டில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 (Tamil Nadu Global Investors Meet 2019/TNGIM 2019), ஜனவரி 23 அன்று தொடங்குகிறது. 
  • தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. 
இந்திய-நேபாள தொழில்முனைவோர் மாநாடு 2019
  • இந்திய-நேபாள தொழில்முனைவோர் மாநாடு 2019 (India, Nepal Entrepreneurship Conclave 2019), நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு நகரில் (19.1.2019) நடைபெற்றது.
  • இந்தியா-நேபாள தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த ஒரு நாள் மாநாடு மாநாட்டில், 400 இந்தியத் தொழில்முனைவோர்கள், நேபாளத் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், பங்கேற்றனர்.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் - தொடக்கம்
  • தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. (LKG, UKG) வகுப்புகளை தொடங்குவதற்கான திட்டத்தை சென்னையில் (21.1.2019) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 
  • இதன்படி 2,381 அங்கன்வாடி மையங்களில், 52,933 குழந்தைகள் பயன்பெறும் வகையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு புதிய தொழில் - புத்தாக்கக் கொள்கை - வெளியீடு 
  • தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு (18.1.2019) வெளியிட்டுள்ளது. 
  • புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கக் கொள்கையின்படி, உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர் விடமாகவும் தமிழகத்தை வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதும் இலக்காகும்.
  • குறைந்தபட்சம் 5 ஆயிரம் புதிய தொழில்களும், 10 உலகளாவிய உயர் வளர்ச்சி புதிய தொழில்கள் உள்பட பல்வேறு தொழில் அம்சங்கள் வளம்பெறும்.
  • சென்னை, கோவை, திருச்சி-தஞ்சாவூர், சேலம்-ஈரோடு, திருநெல்வேலி போன்ற பகுதிகள் மாபெரும் புதிய தொழில் மையங்களாக முதலீடுகள் பெற ஊக்குவிக்கப்படவுள்ளது.
வானூர்தி, பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை-ஒப்புதல்
  • வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை உள்பட முக்கிய தொழில் திட்டங்களுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் (18.1.2019) நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs 
"கேலோ" விளையாட்டு 2019: "மகாராஷ்ட்ரா" சாம்பியன்
  • இரண்டாவது "கேலோ" இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி (Khelo India Youth Games 2019), மகாராஷ்ட்ராவில் உள்ள புனே நகரில் ஜனவரி 9-ந்தேதி தொடங்கி 20 வரை நடைபெற்றது. 
  • 2019 கேலோ’ விளையாட்டில் தடகளம் உள்பட 18 வகையான போட்டிகளில் 6 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • இந்த போட்டியில் மகாராஷ்ட்ரா மாநிலம் மொத்தம் 228 பதக்கங்கள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அணி ஐந்தாவது இடத்தை பிடித்தது. (Khelo India Youth Games 2019 Medal Tally).
  • Khelo India இளைஞர் விளையாட்டு 2019 - பதக்க பட்டியல் 
Khelo India இளைஞர் விளையாட்டு 2019 -  பதக்க பட்டியல்
ரேங்க்
மாநிலம்
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
மொத்தம்
1
மகாராஷ்டிரா
85
61
81
227
2
அரியானா
62
56
60
178
3
தில்லி
48
37
51
136
4
கர்நாடகம்
30
28
19
77
5
தமிழ்நாடு
27
36
25
88
6
உத்தரப் பிரதேசம்
23
25
40
88
7
பஞ்சாப்
23
19
30
72
8
குஜராத்
15
9
15
39
9
மேற்கு வங்காளம்
13
15
16
44
10
கேரளா
12
16
30
58

ஆக்கி

2019 தேசிய சீனியர் ஆக்கி (‘B’ பிரிவு) போட்டி: "தமிழ்நாடு அணி" சாம்பியன்
  • 2019 தேசிய சீனியர் ஆக்கி (‘B’ பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டியில் "தமிழ்நாடு அணி" சாம்பியன் வென்றுள்ளது. 
  • 9-வது தேசிய சீனியர் ஆக்கி (‘B’ பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி(9th Hockey India Senior National Hockey Championship 2019) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 
  • முதல் மூன்று இடங்கள்:
    • தமிழ்நாடு அணி (Tamil Nadu)
    • மத்திய தலைமை செயலக அணி (Central Secretariat)
    • சாய் அணி (Sports Authority of India)
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை 2019: இந்திய அணி முதலிடம்
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC Test Rankings 2019), 21.01.2019 அன்று வெளியிட்டது. 
  • இதன்படி இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது.
  • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (922 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். 
  • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா (882 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். 
  • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் உள்ளார். 
TNPSC Current Affairs 21st and 22nd  January 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post