உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) நவம்பர் 5
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் - நவம்பர் 5
- ஆண்டுதோறும் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) நவம்பர் 5 அன்று கடைபிடிக்க படுகிறது.
- 2015-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நவம்பர் 5-ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால் மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர் மாண்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில் பலியாகியிருக்கின்றனர்.
ஜப்பானியச் சொல்-சுனாமி/ஆழிப்பேரலை
- சுனாமி (Tsunami) என்பது ஜப்பானியச் சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி தமிழில் கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை எனப்படுகிறது.