இந்திய பொறியாளர் தினம் - செப்டம்பர் 15
இந்தியாவில் முதன்மை பொறியாளராக விளங்கிய எம்.விஸ்வேசுவரய்யா அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 15 ஆகும், இவரின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மோக்சகுண்டம் விஸ்வேசுவரய்யா 1860-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி கர்நாடக மாநிலம் சிங்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கட லட்சுமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார்.
1881 -ம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டிடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடித்தார்.
சுதந்திர இந்தியாவின் சிறந்த கட்டுமானப் பணிகளை ஏற்படுத்தியவர் எம்.விஸ்வேசுவரய்யா ஆவார்.
கர்நாடகாவின் மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றான “கிருஷ்ணராஜ சாகர் அணையை” காவிரியின் குறுக்கே உருவாக்கியாவர்.
மைசூரு மாகாணத்தின் திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் “நவீன மைசூரின் தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார்.
சிறந்த பொறியாளராக திகழ்ந்த சர்.எம்.விஸ்வேசுவரய்யா, 1955 -ம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது.
எம். விஸ்வேசுவரய்யா, தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் 1962 -ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14-ந் தேதி காலமானார்.