ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் முதன்முதலாக "கடல்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக" (First Special Envoy for the Oceans), சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
- அன்டோனியோ குட்ரோஸ்
- சவும்யா சுவாமிநாதன்
- பீட்டர் தாம்சன்
- ராதா மனோகர்
ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது பொதுச்சபைக்கூட்டம் (UNGA:United Nations General Assembly,19.09.2017) எந்த நகரில் நடைபெற்றது?
- பாரிஸ்
- ஜெனீவா
- வாஷிங்டன்
- நியூயார்க்
சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக NASA விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் 1997-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட எந்த விண்கலம், 15.09.2017 அன்று தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது?
- கேசினி
- கொலம்பஸ்
- சோயுஸ்
- டிஸ்காவார்
இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரி யார்?
- கபார் சிங்
- ஜெயில்சிங்
- அர்ஜன் சிங்
- கான் அப்துல் கான்
இந்தியா எந்த ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது?
- 2020
- 2022
- 2018
- 2019
சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அதிநவீன "அஸ்திரா" ஏவுகணை எந்த இலக்குகளை தாக்கும் ஆற்றல் கொண்டது?
- வானில் இருந்து தரை இலக்குகள்
- வானில் இருந்து வான் இலக்குகள்
- தரையிலிருந்து தரை இலக்குகள்
- தரையிலிருந்து வான் இலக்குகள்
தேசிய புலனாய்வு (NIA) முகமையின் பொது இயக்குனராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டவர் யார்?
- ஒய். சி. மோடி
- எஸ். டி. சர்மா
- ஆர் .டி. சர்மா
- ஒய். எஸ். குரோஷி
"இந்தியாவின் முதலாவது கால்நடை சட்ட மையத்தை (India’s first Centre for Animal law) மத்திய அமைச்சர் அமைச்சர் மேனேகா காந்தி சமீபத்தில் எந்த நகரில் தொடங்கிவைத்தார்?
- பெங்களூரு
- சென்னை
- நாக்பூர்
- ஐதராபாத்
17.09.2017 அன்று எந்த உயர் நீதிமன்ற கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா கொண்டப்பட்டது?
- கொல்கத்தா உயர் நீதிமன்றம்
- மும்பை உயர் நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- டெல்லி உயர் நீதிமன்றம்
தூய்மையே சேவை" இயக்கம் செயல்படுத்தப்படும் நாட்கள் எவை?
- செப்டம்பர் 02 முதல் அக்டோபர் 02
- செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 02
- செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02
- செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 02