TNPSC General Knowledge: Sahitya Akademi Award 2016 (Tamil) announced for Vannadasan

The Sahitya Akademi Award 2016 (Tamil) For Vannadasan (வண்ணதாசன்)

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகடாமி விருது (2016) அறிவிப்பு

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016-ம் ஆண்டு சிறந்த தமிழ் மொழி படைப்பாளருக்கான சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 

இந்நிலையில், 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்தாளர் வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதி வருகிறார். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வண்ணதாசனின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் . இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.

வண்ணதாசன் ‘கல்யாண்ஜி’

வண்ணதாசன் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரும், பழம் பெரும் படைப்பாளியுமான தி.க.சி அவர்களின் புதல்வருமான வண்ணதாசனுக்கு இந்தியப் படைப்புலகின் உன்னதமான விருது வழங்கப்பட்டிருப்பது அவரது வாசகர்களையும், தமிழ் படைப்புலகத்தையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

வண்ணதாசன் படைப்புகள் விவரம்:

1.சிறுகதைத் தொகுப்புகள்:

கலைக்க முடியாத ஒப்பனைகள்
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
சமவெளி
பெயர் தெரியாமல் ஒரு பறவை
மனுஷா மனுஷா
கனிவு
நடுகை
உயரப் பறத்தல்
கிருஷ்ணன் வைத்த வீடு
ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
சில இறகுகள் சில பறவைகள்

2. புதினங்கள்:

சின்னு முதல் சின்னு வரை

3.கவிதைத் தொகுப்புகள்:

புலரி
முன்பின்
ஆதி
அந்நியமற்ற நதி
மணல் உள்ள ஆறு
கட்டுரைகள்[தொகு]
அகமும் புறமும்

4.கடிதங்கள்:-

வண்ணதாசன் கடிதங்கள்

About The Sahitya Akademi Award

The Sahitya Akademi Award is a literary honor in India, which the Sahitya Akademi, India's National Academy of Letters, annually confers on writers of the most outstanding books of literary merit published in any of the major Indian languages recognised by the Sahitya Akademi, New Delhi.

Established in 1954, the award comprises a plaque and a cash prize of Rs. 100,000. The award's purpose is to recognize and promote excellence in Indian writing and also acknowledge new trends. The annual process of selecting awardees runs for the preceding twelve months. The plaque awarded by the Sahitya Akademi was designed by the Indian film-maker Satyajit Ray.Prior to this, the plaque occasionally was made of marble, but this practice was discontinued because of the excessive weight. During the Indo-Pakistan War of 1965, the plaque was substituted with national savings bonds.

Courtesy: Dinamani, Malaimalar and Wikipedia
Post a Comment (0)
Previous Post Next Post