நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது
பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது (Chevalier Award)
- நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது (Chevalier Award) அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக விருது
- சினிமா துறையில் கமல்ஹாசனின் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயக்குநர், திரை கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
சினிமா துறையில் 57 ஆண்டுகள்
- கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலை திறனை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.